என் மலர்
புதுச்சேரி

கலைமாமணி விருது பெற்ற அன்பழகனை ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரோக.அருள்தாஸ் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா
- நாட்டுப்புற கலை சேவையை தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
- இதனை பாராட்டு விதமாக ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பாகூர் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் அன்பழகன் என்பவர் நாட்டுப்புற கலைக்குழு 30 ஆண்டுகளாக புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகம், மும்பை ஆகிய பகுதிகளில் நாட்டுப்புற கலை சேவையை தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
அவருக்கு புதுவை அரசின் கலை பண்பாட்டு துறை மூலமாக கலை மாமணி விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் வழங்கினர்.இதனை பாராட்டு விதமாக ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் ஒருங்கி ணைந்த ஆதிதிராவிட இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ரோக.அருள்தாஸ் தலைமையில், பொதுச் செயலாளர் கலைமணி , கவுரவத் தலைவர் மணி மாறன், அமைப்பாளர் சுப்பிரமணி, துணைத்தலை வர் செல்வ பாண்டி, பொருளாளர் வேல்முருகன், செயல் தலைவர் முத்து கிருஷ்ணன், அமைப்பாளர் நாகமுத்து, அரசு கூட்ட மைப்பு தலைவர் ஆசிரியர் செல்வம் ஆகியோர் கலைமாமணி விருது பெற்ற அன்பழகனை பாராட்டி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.






