என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பாவேந்தர் விழாவில் கலைமாமணிகளுக்கு விருது
- புதுவை அரசுக்கு பாரதிதாசன் அறக்கட்டளை பாராட்டு
- கம்பன் கலையரங்கத்தில் கலை பண்பாட்டுத் துறை சிறப்பான முறையில் நடத்தியது.
புதுச்சேரி:
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை கடந்த 29-ந்தேதி கம்பன் கலையரங்கத்தில் கலை பண்பாட்டுத் துறை சிறப்பான முறையில் நடத்தியது. அந்த விழாவிலேயே பலகாலமாக வழங்கப்படாமல் இருந்த புதுவை கலைமாமணி விருதுகளை 6 துறைகளைச் சேர்ந்த 216 கலைஞர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் புதுமை பொங்கக் கோலாகலமான விழா எடுத்து வழங்கிச்சிறப்பித்ததற்காகப் புதுவை அரசையும், கவர்னர், முதல்-அமைச்சர், சபாநாயகர், கலை பண்பாட்டுத் துறை அமைச்சர், அமைச்சர்கள், துறைச்செயலர், இயக்குநர், ஊழியர்கள் அத்தனை பேருக்கும் தமிழறிஞர்கள், கலைஞர்கள், விருதாளர்கள் சார்பிலும் பாவேந்தர் குடும்பத்தார் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாராட்டுகிறேன்.
மேலும் 2021,2022 ஆண்டுகளுக்கான விருதுக ளையும் விரைந்து வழங்கவும் வேண்டுகிறேன். மேலும் அரசுக்கு நன்றி தெரிவிக்கவும் விருது பெற்ற 216 கலைமா மணிகளைப் பாராட்டவும் மன்னர் மன்னன் அறக்கட்டளை சார்பில் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) புதுவையில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






