என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை
    X

    திருட்டு நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

    பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை

    • சித்தலம்பட்டு பகுதியில் கடந்த 6மாத ங்களுக்கு முன்பு 2 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே உள்ள சித்தலம்பட்டு கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42) . புதுவையில் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இவர் சித்தலம்பட்டு பகுதியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை குடும்பத்துடன் கே ரளாவிற்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் 5 மணியளவில் சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர் .

    அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டினுள் இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து 6 பவுன் நகை 30 ஆயிரம் ரொக்க பணம் 1/2 கிலோ மதிப்புமிக்க வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து சித்தலம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்கு மார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் சித்தலம்பட்டு புதுவை பகுதியான திருக்கனூர் பகுதிக்கு அருகாமையில் இருப்பதால் திருக்கனூர் போலீசாரும் இந்த திருட்டு சம்பந்தமாக அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் . மேலும் இந்த சித்தலம்பட்டு பகுதியில் கடந்த 6மாதங்களுக்கு முன்பு 2 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை இதனால் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் . இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×