என் மலர்
புதுச்சேரி
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
- புதுவைக்கு மேலும் சுற்றுலா பயணி களை அதிகரிக்க ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாத்துறை, வணிக விழா சங்கம் சார்பில் வணிக திருவிழா நடந்தது.
இதில் 10 லட்சத்து 87 ஆயிரம் இலவச கூப்பன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான பரிசு குலுக்கல் கடந்த மார்ச் 21-ந் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு பரிசளிப்பு விழா காந்தி திடலில் நடந்தது.
சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது: -
புதுவையில் புகழ்பெற்ற ஆன்மிக திருத்தலங்கள் உள்ளது. திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடக்கிறது. காரைக்கால் கோவில் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்கி ஆன்மிக சுற்றுலாவுக்காக ஆன்மிக பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
வில்லியனூர் கோவில் நகரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடற்கரையோரம் பல விடுதிகள் கட்டப்படுகிறது. எந்த அச்சமும் இன்றி சுற்றுலா பயணிகள் தங்கி செல்கின்றனர். புதுவைக்கு மேலும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கிராமப்புறங்களிலும் சுற்றுலா இடங்களை மேம்படுத்தவும், சிறப்பு மிக்க கீழூரையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல் பரிசாக 11 பேருக்கு கார், 2-ம் பரிசாக 22 பேருக்கு ஸ்கூட்டர், 3-ம் பரிசாக 110 பேருக்கு மொபைல் போன், 4-ம் பரிசாக ஆயிரத்து 170 பேருக்கு சமையலறை பொருட்கள், 10 ஆயிரத்து 961 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனர் பாலாஜி, வணிக விழா சங்க தலைவர் குணசேகரன், துணை தலைவர்கள் சிவகணேஷ், தணிகாசலம், சங்க செயலாளர் ரவி, இணை செயலாளர்கள் பாலாஜி, ரவி, வேல்முருகன், பொருளாளர் பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை நந்தகோபால் வீதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 57). லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில் தூய்மை பணியா ளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் தூங்க சென்றவர் காற்றுக்காக டேபிள் பேன் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி சுருண்டு விழுந்துள்ளார்.
உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவேஅவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 15 ஆண்டு பழமையான அரசு வாகனங்கள் 2023 ஏப்ரல் 1-ந் தேதி முதல் அழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- பஸ்களை இயக்க சிறப்பு அனுமதி கோரி அமைச்சர் சந்திரபிரியங்கா மத்திய அரசிடம் கோரிக்கையும் வைத்திருந்தார்.
புதுச்சேரி:
மத்திய அரசு வாகன அழிப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி 15 ஆண்டுக்கு மேலான பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் தகுதி சோதனைக்கு உட்படு த்தப்படும். அதில் தேர்ச்சி பெறாத வாகனங்கள் அழிக்கப்படும். 15 ஆண்டு பழமையான அரசு வாகனங்கள் 2023 ஏப்ரல் 1-ந் தேதி முதல் அழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதுவையில் அரசு போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி.யில் 130 பஸ்கள் உள்ளன. இதில் 40 மட்டுமே இயங்கி வருகிறது. 15 ஆண்டுக்கு மேலான 15 பஸ்களை இயக்க சிறப்பு அனுமதி கோரி அமைச்சர் சந்திரபிரியங்கா மத்திய அரசிடம் கோரிக்கையும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் சாலை வரி செலுத்தும் ஆன்லைன் போர்ட்டலில் இந்த 15 பஸ்களுக்கு வரி செலுத்த முடியவில்லை. இதனால் புதுவையிலிருந்து குமுளி, திருப்பதி, ஒசூர், காரைக்கால், கோவை, நாகர்கோவில் செல்லும் 12 பஸ்கள், ஏனாமில் இயங்கும் 3 டவுன் பஸ்கள் என 15 பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்கள் இன்றே நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சுக்கு முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
- ரெட்டியாரின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- ராஜா, பெருமாள், சக்திவேல், விஜயன்,ரஞ்சித், அங்காளன், தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கே.எஸ்.கே சேகர் ரெட்டியார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆன இவர் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென இறந்தார்.
அவரது 2-ம் ஆண்டு நினைவஞ்சலி கூடப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. ஊசுடு தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர்பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.கே சேகர் ரெட்டியாரின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் சேந்தநத்தம் பகுதியில் உள்ள சந்தோஷ் நண்பன் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கூடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கே.எஸ்.கே சேகர்ரெட்டியார் நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநில காங்கிரஸ் செயலாளர் கோனேரி லோகையன், மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் குமார், குகா, எஸ்சி.எஸ்டி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சேட்டு என்கிற செங்கேனி, மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்வபிரியன், ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜா, சுப்பான், தமிழ், லோகநாதன், சிவபாலன், ராஜா, பெருமாள், சக்திவேல், விஜயன்,ரஞ்சித், அங்காளன், தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கொலை மிரட்டல் விடுத்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் இருந்த பூ , ஜாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்தவர் அலி அப்பாஸ். இவரது மனைவி ரெனி மேரி செசில் (வயது 37).
திருமணமான 5 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்த ரெனி மேரி பிரச்சனைக்கு தீர்வு காண கோர்ட்டில் விவகாரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 27-ந் தேதி கோட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
கோர்ட்டி ற்கு வந்த அலி அப்பாஸ் மனைவியிடம் கோர்ட்டிற்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைய வைக்கின்றாயா ? என கேட்டு தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். ரெனி மேரி வீட்டில் இருந்த போது அங்கு வந்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் நின்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.
ரெனி மேரி வெளியில் சென்று பார்த்த போது சாலையில் கிடந்த கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் இருந்த பூ , ஜாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.
உடனே ரெனி மேரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு போலீசார் வந்தனர். அவர்களை பார்த்ததும் அலி அப்பாஸ் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதுகுறித்து ரெனி மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
- தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் கோபால் வழங்கினர்.
- சிவா எம்.எல்.ஏ.வுக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
தி.மு.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமையில் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தி.மு.க–.வினர் கேக் வெட்டினர். நிகழ்ச்சியில் உருளை யன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று சிவா
எம்.எல்.ஏ.வுக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, உருளை யன்பேட்டை தொகுதி தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தாமரை க்கண்ணன் ஏற்பாட்டில், கண்டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள 250 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.
மாநில துணை அமைப்பாளர் தைரிய நாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொகுதி அவைத்தலைவர் ஆதி நாராயணன், பொரு ளாளர் சசிகுமார், கிளைச் செயலாளர் பிரகாஷ், ராஜா, ராமலிங்கம், பன்னீர், சீனு, வெங்கடேசன், சதீஷ், கபாளி, யுவராஜ், பரத், ஸ்ரீ, விஜய், யோகீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய அளவிலான போட்டியில நடைபெற்றது.
- 13 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் 2-வது தேசிய அளவிலான டிபன்டோ போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மற்றும் தேசிய அளவில் லத்தி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பாராட்டு விழா கவுண்டன்பாளையம் முத்துரத்தின அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய அளவிலான டிபன்டோ போட்டி இமாச்சலப் பிரதேசம் குலு மணாலியில் கடந்த 21-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை 2-வது தேசிய அளவிலான டிபன்டோ சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இதில் 13 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
புதுவை அமைச்சூர் டிபன்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பாக புதுவை வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டியில் பங்கேற்று 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் வென்று தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து கோப்பையை வென்றனர். மேலும் மத்திய பிரதேஷ் போபாலில் நடைபெற்ற லத்தி தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் புதுவை மாநில உருளையன்பேட்டை நேரு எம்.எல்.ஏ , கதிர்காமம் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ , சமூக சேவகர் யூனிஸ் , சமோசா யூனிஸ் , சங்கத்தின் தலைவர் கராத்தே சுந்தர்ராஜன் , சங்கத்தின் செயலாளர் ரகுமான் செட் அவர்களும் மற்றும் பயிற்சியாளர்கள் அப்துல் கலாம் விஜயகுமார், ரியாசுதீன் மற்றும் அசாருதீன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினார்கள்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
- கழக சகோதரர்கள் அறிவழகன், ராஜி செல்லப்பன்,பாலாஜி, ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், திருநங்கை கள் ஆகியோருக்கு பென்ஷன் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை புதுவை மாநிலம் தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை தொகுதி செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் அறிவழகன், ராஜி செல்லப்பன்,பாலாஜி, ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.
- திருமணத்திற்காக நகை , பணம் இருந்திருந்தால் அத்தனையும் கொள்ளையர்கள் அபேஸ் செய்திருப்பார்கள்.
- நகை மற்றும் பணத்தை சுதாரிப்போடு வங்கி மற்றும் உறவினர்களிடத்தில் வீரமுத்து வைத்திருந்ததால் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிலிருந்து தப்பியது.
சேதராப்பட்டு:
புதுவை வில்லியனூர் சேர்த்திலால் நகர் பட்டாணிக்களம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து என்ற வீரபுத்திரன் (வயது 59).
இவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் பதிவேட்டு துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் டாக்டர் இளங்கோவன் (25) நாகப்பட்டினத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இளங்கோவனுக்கும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த டாக்டரான இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் முடிந்தது. இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக கடந்த 27-ம் தேதி வீரமுத்து, அவரது மனைவி குணா, மகள் சபிதா, அவரது தம்பி குப்புசாமி ஆகியோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
நேற்று இரவு வீடு திரும்பி அவர்கள் வீட்டை திறக்கும் போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்தது. திறக்க முடியாமல் தவித்த இவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் வெளியே சிதறி கிடந்தது.
மேலும் வீட்டின் பின்பக்க இரும்பு கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கொள்ளையர்கள் தப்பிச்சென்ற வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது.
டாக்டர் இளங்கோவனுக்கு திருமணம் நடக்க இருந்தது கொள்ளையர்களுக்கு தெரியவந்து அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பெண் வீட்டார் போட்ட 2 ½ சவரன் தங்கச் செயின் மற்றும் அரைப்பவுன் மோதிரம் மட்டுமே பீரோவில் இருந்தது. அதனை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
திருமணத்திற்காக நகை , பணம் இருந்திருந்தால் அத்தனையும் கொள்ளையர்கள் அபேஸ் செய்திருப்பார்கள். நகை மற்றும் பணத்தை சுதாரிப்போடு வங்கி மற்றும் உறவினர்களிடத்தில் வீரமுத்து வைத்திருந்ததால் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிலிருந்து தப்பியது.
ஏற்கனவே இந்த பகுதியில் பல வீடுகளில் நகை செல்போன்கள் திருட்டுப் போய் உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் மீது போலீசார் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுநீரக நோயிற்கான பரிசோதனை மற்றம் ஆலோசனைகள் அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- னைவருக்கும் ஆரோக்கிய நல்வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறும்.
புதுச்சேரி:
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சுகாதார திருவிழா 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
புதுவை கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் சிவாஜி சிலை அருகில் நண்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை சுகாதாரத் திருவிழா நடக்கிறது. இதில் பொது சுகாதார சேவைகள், வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை, நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், குழந்தைகளுக்கான ஆலோசனை, இருதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரக நோயிற்கான பரிசோதனை மற்றம் ஆலோசனைகள் அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், சுகாதார கண்காட்சி, ஆயுஷ் மற்றும் யோகா உடல் பயிற்சி முறை, ஆரோக்கிய உணவு திருவிழாவும் நடைபெறுகிறது. அனைவருக்கும் ஆரோக்கிய நல்வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
- எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம்.
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசு - கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் விழா மற்றும் புதுவை கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது. தமிழ் உணர்வு தான் பாரதிதாசனின் உயிராக இருந்துள்ளது. அதனால்தான் பாரதியின் நண்பனாக அவர் இருந்தார்.
தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.
புதுவையில் கூட தமிழை நாம் இன்னும் விளையாட வைக்க வேண்டும். பலகைகள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகளிடமும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பது புதுவையில் மட்டும்தான்.
இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம். பாரதிதாசனுக்கு புதுவை பெருமை சேர்க்கிறது.
இவ்வாறு தமிழிசை பேசினார்.
- சூரிய உதயத்தை பார்த்து கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
- களைகட்டிய புதுவை கடற்ரை.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
முதலே புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. 10 நிமிடம் நீடித்த மழை சுற்றுலா பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர். கடற்கரை சாலையில் கடலில் குளிக்காதீர்கள் என்ற எச்சரிக்கையையும் மீறி குடும்பத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.
புதுவை நோணாங்குப்பம் படகு குழாமில் படகில் சவாரி செய்து பாரடைஸ் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி சென்றனர்.
இதேபோல் புதுவையின் சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.
மதிய வேளையில் பிரபல உணவகங்களில் மேஜையை பிடிக்க வரிசையில் நின்றனர்.






