என் மலர்
புதுச்சேரி

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு பென்ஷன் உதவித்தொகையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
பென்ஷன் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
- கழக சகோதரர்கள் அறிவழகன், ராஜி செல்லப்பன்,பாலாஜி, ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், திருநங்கை கள் ஆகியோருக்கு பென்ஷன் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை புதுவை மாநிலம் தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை தொகுதி செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் அறிவழகன், ராஜி செல்லப்பன்,பாலாஜி, ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.






