என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வெளி மாநிலங்களுக்கு செல்லும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் நிறுத்தம்
    X

    கோப்பு படம்.

    வெளி மாநிலங்களுக்கு செல்லும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் நிறுத்தம்

    • 15 ஆண்டு பழமையான அரசு வாகனங்கள் 2023 ஏப்ரல் 1-ந் தேதி முதல் அழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
    • பஸ்களை இயக்க சிறப்பு அனுமதி கோரி அமைச்சர் சந்திரபிரியங்கா மத்திய அரசிடம் கோரிக்கையும் வைத்திருந்தார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு வாகன அழிப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி 15 ஆண்டுக்கு மேலான பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் தகுதி சோதனைக்கு உட்படு த்தப்படும். அதில் தேர்ச்சி பெறாத வாகனங்கள் அழிக்கப்படும். 15 ஆண்டு பழமையான அரசு வாகனங்கள் 2023 ஏப்ரல் 1-ந் தேதி முதல் அழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    புதுவையில் அரசு போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி.யில் 130 பஸ்கள் உள்ளன. இதில் 40 மட்டுமே இயங்கி வருகிறது. 15 ஆண்டுக்கு மேலான 15 பஸ்களை இயக்க சிறப்பு அனுமதி கோரி அமைச்சர் சந்திரபிரியங்கா மத்திய அரசிடம் கோரிக்கையும் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் சாலை வரி செலுத்தும் ஆன்லைன் போர்ட்டலில் இந்த 15 பஸ்களுக்கு வரி செலுத்த முடியவில்லை. இதனால் புதுவையிலிருந்து குமுளி, திருப்பதி, ஒசூர், காரைக்கால், கோவை, நாகர்கோவில் செல்லும் 12 பஸ்கள், ஏனாமில் இயங்கும் 3 டவுன் பஸ்கள் என 15 பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்கள் இன்றே நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சுக்கு முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    Next Story
    ×