என் மலர்
புதுச்சேரி

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா கவுண்டன்பாளையம் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் நடைபெற்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா
- தேசிய அளவிலான போட்டியில நடைபெற்றது.
- 13 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் 2-வது தேசிய அளவிலான டிபன்டோ போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மற்றும் தேசிய அளவில் லத்தி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பாராட்டு விழா கவுண்டன்பாளையம் முத்துரத்தின அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய அளவிலான டிபன்டோ போட்டி இமாச்சலப் பிரதேசம் குலு மணாலியில் கடந்த 21-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை 2-வது தேசிய அளவிலான டிபன்டோ சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இதில் 13 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
புதுவை அமைச்சூர் டிபன்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பாக புதுவை வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டியில் பங்கேற்று 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் வென்று தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து கோப்பையை வென்றனர். மேலும் மத்திய பிரதேஷ் போபாலில் நடைபெற்ற லத்தி தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் புதுவை மாநில உருளையன்பேட்டை நேரு எம்.எல்.ஏ , கதிர்காமம் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ , சமூக சேவகர் யூனிஸ் , சமோசா யூனிஸ் , சங்கத்தின் தலைவர் கராத்தே சுந்தர்ராஜன் , சங்கத்தின் செயலாளர் ரகுமான் செட் அவர்களும் மற்றும் பயிற்சியாளர்கள் அப்துல் கலாம் விஜயகுமார், ரியாசுதீன் மற்றும் அசாருதீன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினார்கள்.






