என் மலர்
புதுச்சேரி
- சர்க்கரை வியாதி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
- சிட்டி வழிமுறைகள், நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவ மனையில் நீரழிவு நோய்க்கான சிறப்பு வெளிப்புற சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, கண்காணிப்பாளர் செவ்வேள், துணை இயக்குனர் ரகுநாதன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் பெருகிவரும் நீரழிவுநோயை கட்டுப்படுத்தவும், இருதயநோய், நரம்பியல் நோய்கள், பக்கவாதம், சிறுநீரக செயலிழிப்பு தடுக்கவும், நீரழிவு நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் இந்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதை தொடங்கி வைத்த பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
சர்க்கரை வியாதி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. புதுவையில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறையை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.
சர்க்கரை நோயாளிகளுக்கு தனிப்பிரிவு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கென தனிப்பிரிவு தொடங்கப்படும். புதுவை சுகாதாரத்துறையை மேம்படுத்த தேவையான கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் தரையில் பாயில் படுப்பதாக ஒரு தகவல் வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தேன்.
அப்போது அதிகாரிகள், நாங்கள் யாரையும் படுக்கை இல்லை என திருப்பி அனுப்புவதில்லை. படுக்கை கொள்ளளவை விட அதிக நோயாளிகள் வருகின்றனர் என தெரிவித்தனர். வரும் நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். மக்கள் அதிக நேரம் காத்திருக்கக் கூடாது. தேவையான கருவிகள் வாங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மாநில மாணவர்கள் உரிமைகள் பறிக்கப்படாது என்பதில் சந்தேகமில்லை. எந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது? என முழு விபரத்தை கேட்டுள்ளேன். நீட் அமுல்படுத்தப்பட்ட போதும் இடஒதுக்கீடு பறிபோகும் என குற்றம் சாட்டினர்.
ஸ்மார்ட்சிட்டி திட்டம் வெளிப்படையாக நடக்கிறது. கடந்த ஆட்சியில் தாமதமாக நடந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பே பணிகள் முடிந்திருக்க வேண்டும். எங்களின் முயற்சியில் தற்போது அடுத்த ஆண்டு வரை ஸ்மார்ட் சிட்டி திட்ட காலத்தை நீட்டித்துள்ளோம்.
இத்திட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி வழிமுறைகள், நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளோம். காலதாமதம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு விரைவாக பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. லஞ்சம், ஊழலை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நானே விசாரணைக்கு உத்தரவிடுவேன். தற்போது வரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் எந்த குறைபாடும் இன்றி நடந்து வருகிறது.
அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைத்துவிடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
எதிர்கட்சித் தலைவர் சிவா மாணவர் சேர்க்கை ரத்துக்கு அரசு பொறுப் பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலும்தான் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுவாக குற்றம்சாட்டாமல் மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.
நோயாளிகளை பாயில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கு இடமில்லை என்றால், அரசு மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை அனுப்பிவையுங்கள் என தெரிவித்துள்ளேன். அவசர பிரிவுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரகால சிகிச்சை பிரிவுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அதிகளவு நோயாளிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகின்றனர். வேறுபாடு பார்ப்பதில்லை. அவர்களுக்கும் பாகுபாடின்றி சிகிச்சை அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நவம்மாள் காப்பேர் கிராமம் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி
- ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் கிராமம் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
ஜெயமூர்த்தியின் வீடு சேதமடைந்ததால் அந்த வீட்டை பூட்டி விட்டு புதுவை ரெட்டியார் பாளையம் டீச்சர் காலனியில் உறவினர் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் நவமால் காப்பேர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த ஜெயமூர்த்தியின் வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜெயமூர்த்தியின் சகோதரர் தயாளன் ஜெயமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்த போது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஜெயமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
- பீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- பல்வேறு திறன் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது தங்கள் துறையில் பயிலும் தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் கல்வி சார்ந்த தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் துறையின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் பீனிக்ஸ் ஸ்கிரீணிங் மையத்தின் நிர்வாக இயக்குனர் விஜய்ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான ஏற்பாட்டினை துறையின் தடய அறிவியல் பிரிவின் பொறுப்பாளர் மோகன் மற்றும் உதவி பேராசிரியர்கள் லின்சி அனாமிகா, சாண்ட்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
இதுகுறித்து துறையின் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் கூறியதாவது:-
பீனிக்ஸ் ஸ்கிரீணிங் மையமானது பெங்களூரில் செயல்பட்டு வரும் தடயவியல் சார்ந்த சேவைகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் நிறுவனமாகும். இதனுடன் எங்கள் துறையின் தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் பல்வேறு திறன் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
குறிப்பாக மாணவர்க ளின் தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், துறை சார்ந்த திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கருத்தரங்குகள் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக கையெழுத்திடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் துறை சார்ந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்றார்.
- புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
- லாஸ்பேட்டையில் புதுவை பல்கலைக்கழகத்தின் சமுதாய கல்லூரி இயங்கி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
லாஸ்பேட்டையில் புதுவை பல்கலைக்கழகத்தின் சமுதாய கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இந்த ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சமுதாய கல்லூரியின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கையில் பங்கேற்று பயன்பெறலாம்.
இங்கு கற்பிக்கப்படும் இளங்கலை, முதுநிலை பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகள் பற்றிய விபரங்கள் இணைய தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
- அரியாங்குப்பம் சண்முகா நகர் ரத்னவேல் தெருவை சேர்ந்தவர் சூர்யா.
- தவளக்குப்பத்தில் உள்ள மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் சண்முகா நகர் ரத்னவேல் தெருவை சேர்ந்தவர் சூர்யா. இவர் கடலூர்-புதுவை மெயின் ரோட்டில் தவளக்குப்பத்தில் உள்ள மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.
இந்த கடையின் எதிரே தமிழக பகுதியான பெரியகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் அரவிந்தன் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மதுகடை கேஷியர் சூர்யாவுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
சூர்யாவை தரக்குறைவாக பேசிய அரவிந்தன் கையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இது சம்பந்தமாக சூர்யா கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,
- ரூ.12லட்சத்து 7,740 மதிப்பில் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.
- இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை தமிழ் தாய் நகர் ஜெகநாதன் படையாட்சி வீதியில் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12லட்சத்து 7,740 மதிப்பில் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.
புதுச்சேரி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரியாங்குப்பம் தொகுதிக்குட்டபட்ட அருந்ததிபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது.
- கழிப்பிட வசதி இல்லாததால் வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிஅடைந்து வந்தனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதிக்குட்டபட்ட அருந்ததி புரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிஅடைந்து வந்தனர்.
இதுகுறித்து பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து முறையிட்டார்.
அதன்பேரில் டி.ஆர்.டி.ஏ. திட்ட அதிகாரி சத்திய மூர்த்தி மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோரை தொடர்பு கொண்டு உடனடி யாக அங்கன்வாடி மையத்துக்கு கழிப்பிட வசதி செய்து தரும்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அன்றைய தினமே கழிப்பிடம் கட்டுவதற்காக அங்கன்வாடி மையத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகியும் கழிப்பிடம் கட்டும்பணி தொடங்கப்பட வில்லை.
இதையடுத்து பா.ஜனதா தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமையில் அப்பகுதி பெண்கள் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவல கத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இல்லை. இதை தொடர்ந்து அங்கிருந்த அதிகாரியிடம் கழிப்பிடம் கட்டாதது குறித்து பா.ஜனதாவினர் கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் சரியான விளக்கத்தை அளிக்காததால் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.
இதன்பின்னர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செல்போனில் பா.ஜனதா தலைவர் செல்வகுமாரை தொடர்பு கொண்டார்.
அப்போது உடனடியாக அங்கன் வாடிக்கு கழிப்பிடம் கட்டும் பணியை தொடங்குவதாக உறுதி யளித்தார். இதனையேற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.
- குருவாலயா ஸ்போர்ட்ஸ் புரோ மோஷனல் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் முதியோர் குழு பேட்மின்டன் போட்டி நடந்தது.
- இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 விளையாட்டு மையங்களில் இருந்து 80 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
கவுண்டம்பாளையம் அம்பாள் நகரில் குருவாலயா ஸ்போர்ட்ஸ் புரோ மோஷனல் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் முதியோர் குழு பேட்மின்டன் போட்டி நடந்தது.
இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 விளையாட்டு மையங்களில் இருந்து 80 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். இதில் பெண்கள் அணியில் முதலிடத்தை எக்ஸ்மேயர் அணியும், 2-ம் இடத்தை குருவாலயா ஏ அணியும், 3-ம் இடத்தை குருவாலயா பி மற்றும் லோட்டஸ் அணிகள் பெற்றன.
ஆண்கள் பிரிவில் முதலிடத்தை குருவாலயா ஏ அணியும், 2-ம் இடத்தை எப்-2 பி காரைக்கால் அணியும், 3-ம் இடத்தை சாய் ஏ அணி மற்றும் பி.எஸ்.பி.சி. அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயத்தை கலெக்டர் வல்லவன், ஓய்வுபெற்ற ஐ.ஜி. சந்திரன், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர். மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்றார். குருவாலாயா விளையாட்டு மைய உரிமையாளர் சாந்தி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆலோசனைக்கூட்டம் குயவர் பாளையத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அலுவலகத்தில் நடந்தது.
- புதுவை ஒருங்கிணைப்பாளருமான முருகானந்தம் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆலோசனைக்கூட்டம் குயவர் பாளையத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளரும், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க புதுவை ஒருங்கிணைப்பாளருமான முருகானந்தம் தலைமை தாங்கினார்.
மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தமிழ்நாடு-புதுவை ஒருங்கிணைப்பாளர் ஆசீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் திராவிட கழக மாவட்ட தலைவர் அன்பரசன், இந்திய கம்யூனிஸ்டு தினேஷ் பொன்னையா, மே 17 இயக்கம் மதிவாணன், தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் டி.வி.நகர் ராஜா, மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவை போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது.
போலீஸ் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆஸ்பத்திரி நிர்வாகமே வழங்க வேண்டும்.
புதுவையில் இயங்கி வந்த காவல் புகார் ஆணையம் வருடாந்திர கூட்டங்களை நடத்தி அதன் அறிக்கையை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.
- சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி சார்பில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியதாவது:-
சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க கால்நடைகளை சாலைகளில் விடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இதையும் மீறி சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி சார்பில் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 70 மாடுகளுக்கு ரூ.63 ஆயிரத்து 260 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகிறது. மாடுகளின் ஒரு கொம்பில் மட்டும் சிவப்பு வர்ணம் பூசி அடை யாளம் காட்டப்படுகிறது.
இந்த மாடுகள் பிடிபட்டால் நகராட்சி மூலம் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிப்பதோடு அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் ராஜ் நிவாசில் நடந்தது.
- ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை நிர்வாக அதிகாரி ருத்ரகவுடு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் ராஜ் நிவாசில் நடந்தது.
தலைமை செயலர் ராஜீவ் வர்மா, கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுதரி, பொதுப் பணித்துறை செயலாளர் மணிகண்டன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை நிர்வாக அதிகாரி ருத்ரகவுடு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதிய திட்டங்களை தொடங்க வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் கவர்னர் தமிழிசை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது.
- கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
புதுச்சேரி:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு அ.தி.மு.கவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாமலையை கண்டித்து உப்பளம் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை அ.தி.மு.கவினர் எழுப்பினர்.
தொடர்ந்து நிருபர்களிடம் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:-
தன்னுடைய தகுதி, உயரம் என்னவென்று தெரியாமல் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை கூறியுள்ளார். இது தி.மு.க.விற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க.வை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது.
அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது. கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை அ.தி.மு.க.வை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேசுவது அபத்தமாகும். இதுபோல் அவதூறு பேசி வரும் அண்ணாமலையை தமிழக தலைவர் பதவியில் இருந்து பா.ஜனதா தேசிய தலைமை உடனடியாக நீக்க வேண்டும்.
எதிர்காலங்களில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலை ஏற்படும். 3 மாதத்திற்கு ஒரு முறை அண்ணாமலை இதுபோல் அ.தி.மு.கவை அவதூறாக பேசி வருகிறார்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.






