என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சமூக நீதிப்பேரவை வலியுறுத்தல்
    • அரசு பொது மருத்துவமனையில் சான்றிதழ் பெற வேண்டும் என 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சமூகநீதி பேரவை தலைவர் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஒருங்கிணைப் பாளர் கீதநாதன் ஆகியோர் சுகாதாரத்துறை செயலரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சமூகநலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் அரசு பொது மருத்துவமனையில் சான்றிதழ் பெற வேண்டும் என 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் ஜிப்மர் மருத்துவமனை சான்றிதழை ஏற்க மறுப்பதால் ஊனமுற்றோர் பாதிக்கப்படு கின்றனர். ஜிப்மர் அளிக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    • சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
    • தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி,ஜூன்.14-

    புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் தேக்வாண்டோ நடுவர் தேர்வு லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலையில் உள்ள துரோணா தேக்வாண்டோ அகாடமியில் நடந்தது.

    சர்வதேச நடுவர் பகவத்சிங் தலைமை தாங்கினார். புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் நிறுவன தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில் பொதுச்செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், நந்த குமார், தஷ்ணபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சிலம்பரசன், ஜெகதீஷ், தேவகணேஷ், கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நடுவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள் வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திறமையைப் போற்றி வழங்கப் பட்டாலும் பலரும் வசதி இன்றி ஏழ்மை நிலையில் உள்ளனர்.
    • மோகன்தாஸ், அருள் செல்வம், ஜெயந்தி ராஜவேலு ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

    புதுச்சேரி:

    கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டபோது 216 கலைஞர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைமாமணி விருது புதுவை அரசு சார்பில் வழங்கப்பட்டது.

    இதற்காகப் புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறைக்கு பாராட்டு விழாவும் 216 கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டு விழாவும் மன்னர்மன்னன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றன.

    விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கிப்பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது:-

    கலைமாமணி விருது திறமையைப் போற்றி வழங்கப் பட்டாலும் பலரும் வசதி இன்றி ஏழ்மை நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.மேலும் புதுவை அரசுப் பஸ்சில் கட்டணமில்லாமல் அவர்கள் பயணிக்க அரசு உதவி செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விழாவில் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா, துறைச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் கலியபெருமாள் ஆகியோருக்கு அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில் செயலாளர் வள்ளி, நாராயணசாமி, கலியபெருமாள், செல்வன், அரங்க.முருகையன், அவ்வை நிர்மலா முன்னிலை வகித்தனர். மோகன்தாஸ், அருள் செல்வம், ஜெயந்தி ராஜவேலு ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

    முன்னதாக விஜயலட்சுமி வரவேற்றார். முடிவில் புவனேசுவரி ரகுராமன் நன்றி கூறினார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் சிவா கண்டன உரையாற்றினர்.
    • சமூக நல்லிணக்க முன்னணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜமீல் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை அண்ணாசாலை சந்திப்பில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூரில் பழங்குடியின மக்கள் இன அழிப்பை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேசியக்குழு உறுப்பினர் இனாமுல்ஹசன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் சிவா கண்டன உரையாற்றினர்.

    தமிழ்நாடு சமூக நல்லிணக்க முன்னணி தலைமை ஆலோசகர் ராஜன், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், வி.சி.க. தேவபொழிலன், மாநில தலித் பழங்குடி கூட்டமைப்பு ராமசாமி, மீனவர் சங்கம் பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். சமூக நல்லிணக்க முன்னணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜமீல் நன்றி கூறினார்.

    • நாராயணசாமி குற்றச்சாட்டு
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். 750 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் மோடி ஆட்சியை அகற்றுவோம், தேசத்தை பாதுகாப்போம் என்ற தெருமுனை பிரச்சாரம் நடத்தினர். இதன் நிறைவு விழா சுதேசி மில் அருகே நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். தேசி யக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய செயலாளர் நாராயணா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பொது சொத்தையும், கோவில் சொத்தையும் சாப்பிட பார்க்கின்றனர். முதல்-அமைச்சர் வாக்குறுதி கொடுப்பதோடு சரி, எதையும் செய்வதில்லை. டெல்லியில் முதல்-அமைச்சர் மாநாடு நடந்தது.

    அதில் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து பேசவில்லை. கடனை தள்ளுபடி செய்வேன் ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி பெறுவோம், நிதிகமிஷனில் புதுவையை சேர்ப்போம் என்றனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். 750 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்து ள்ளார்.

    குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு ரூ.160 கோடி நிதிதேவை. அதற்கு நிதி ஒதுக்கவில்லை. அப்புறம் எப்படி சிலிண்டருக்கு ரூ.300 தர முடியும்? பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு த்தொகை வழங்கவில்லை. பெண்களுக்கு ரூ.1000 ஒரு மாதம் மட்டும்தான் கொடுத்தனர். பட்ஜெட்டில் 34 வாக்குறுதிகள் கொடுத்து, ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்றவுடன், கவர்னர் கூட்டம் கூட்டுகிறார். முதல்-அமைச்சர் செய்யவேண்டியதை கவர்னர் செய்கிறார். பா.ஜக அமைச்சர்கள் கிடைத்ததை சுருட்டுகின்றனர். எதில் வசூல் வருகிறதோ? அதை செய்கின்றனர். புதிதாக ரூ.400 கோடியில் சட்டமன்றம் கட்டப்படும் என கூறுகின்றனர். அதிலும் சுருட்ட பார்க்கின்றனர். மத்தியில் புதிய சட்டமன்றம் கட்ட கோப்பு வந்துள்ளதா? என கேட்டால் இல்லை என்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட்டு ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், திராவிடர் கழகம் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது உமர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
    • குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த நேரு ஜிப்மரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஹனாஅமிழ்தினி (6). இவர் பாக்குமுடையான்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். தனது மகன் ஹனியல் யாழ் இன்பனை(4) இதே பள்ளியில் எல்.கே.ஜி. சேர்த்துள்ளார். கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் தொடங்கின.

    தனது குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார். ரூ.5 ஆயிரத்துக்கு வாடகைக்கு குதிரையை பெற்ற நேரு, தனது குழந்தைகளை அதில் ஏற்றி வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்றார். இதை வீதியில் மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

    இதனை பள்ளிக்கு வந்த பிற குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அவர்களையும் குதிரையில் ஏற்றி சிறிது தூரம் அழைத்துச் சென்று பின் பள்ளியில் இறக்கிவிட்டார். பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர் பலரும் இதனை ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்தனர்.

    இதுகுறித்து குழந்தைகளின் தந்தை நேரு கூறும்போது, புதுவையில் அரசு பள்ளியில் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. தரமான கல்வி வழங்கப்படுகிறது. பெற்றோர் அனைவரும் அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைவரின் கவனத்தை ஈர்க்க குதிரையை வாடகைக்கு எடுத்து என் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துள்ளேன் என்றார்.

    குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன. பொம்மலாட்ட கலைஞர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியோடு குழந்தைகளை வரவேற்றனர்

    • புதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் சட்டசபை அலுவலகத்தில் நடந்தது.
    • சிறந்த திட்டங்களுக்கு செலவிடும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2023-2024-ம் ஆண்டுக்கான சிறப்பு கூறு திட்ட நிதி செலவின மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் சட்டசபை அலுவலகத்தில் நடந்தது.

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு துணை சபாநாயகர் ராஜவேலு, குடிமை பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், அங்காளன் எம்.எல்.ஏ லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வு குழு கூட்டத்தில் ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடி நலத்துறை செயலர் கேசவன், இயக்கு னர் சாய்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புக்கூறு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியினை விரைவாகவும் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு செலவிடும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பு கூறு நிதிகள் வாயிலாக திட்டங்களுக்கு செலவிடும் 20 அரசு துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டு இதுகுறித்து விவாதித்தனர்.

    • புதுவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் இன்று ஐதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார்.
    • பின்னர் நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுந்தரத்தை சந்தித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் இன்று ஐதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார்.

    பின்னர் நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுந்தரத்தை சந்தித்தார். அப்போது அவரிடம் புதுவையில் அதிக நெல் சார்ந்த ஆராய்ச்சிகளும் பயிற்சிகளும் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

    காரைக்கால் பண்டித ஜவர்கலால் நேரு வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் மற்றும் இந்திய நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சுந்தரம் ஆகியோர் 2 நிறுவனமும் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலை யில் கையெழுத்திட்டனர்.

    பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் சிவசுப்பிரமணியன் உடனிருந்தார்.

    • அரியாங்குப்பம் மற்றும் நோணாங்குப்பம் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளது.
    • இந்தப் பகுதியில் அமைந்துள்ள 2 தனியார் பெட்ரோல் பங்குகள் கடந்த பல மாதங்களாக திடீரென மூடப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் மற்றும் நோணாங்குப்பம் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளது.

    இந்தப் பகுதியில் அமைந்துள்ள 2 தனியார் பெட்ரோல் பங்குகள் கடந்த பல மாதங்களாக திடீரென மூடப்பட்டது. அதனால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் மற்றும் மினி லாரி வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மூடப்பட்ட பெட்ரோல் பங்குகளை திறக்கக்கோரி புதுவை மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரியாங்குப்பம் புறவழி சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை ஒருங்கி ணைப்பாளர் இரிசப்பன் தலைமை தாங்கினார். புதுவை மாநில செயலாளர் ஆலடி கணேசன் ஆர்ப் பாட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.

    மூடிய பெட்ரோல் பங்குகளை உடனடியாக திறக்க வேண்டும், இல்லையேல் அரசே அதை ஏற்று நடத்த வேண்டும் என மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் வாகனத்திற்கு பெட்ரோல் இல்லாமல் சாலையில் தவித்த மோட்டார் சைக்கிளை கீழே கிடத்தி பெட்ரோல் பாட்டில்களை மாலையாக அணிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலை வர்கள் மோகன், ஊசுடு சங்கர், மாநில இணை செயலாளர் பாலசங்கர், மாநில மகளிர் அணி தலைவி சரளா, மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன்,மாநில கொள்கை பரப்பு செயலாளர் லோகவசியன், வில்லியனூர் தொகுதி தலைவர் இளங்கோ, மாநில தொழிற்சங்க தலைவர் ஜோசப் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மே 9-ந் தேதி முதல் நேற்று வரை பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.
    • மாணவர்களின் தரவரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மே 9-ந் தேதி முதல் நேற்று வரை பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.

     10-ம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல், நேர்காணல் தேதி அந்தந்த அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இன்று பிளஸ்-1 சேர்க்கைக்கு கலந்தாய்வு தொடங்கியது.

    கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், குடியுரிமை சான்றிதழுடன் பெற்றோரை அழைத்து வந்திருந்தனர். மாணவர்கள் விருப்பப்படி அந்தந்த பள்ளிகளில் இடம் வழங்கப்பட்டது.

    கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள் இட ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில் இன்று மாலை ஒட்டப்படும்.  அரசு உதவி பெறும் பள்ளி மாண வர்களுக்கு தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 15-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்படு கிறது.

    16-ந் தேதி தனியார் பள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டு 17-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ்-1 சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகிறது.

    • புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார்
    • கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார், கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன்  ஆகியோர் மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்தது. இக்கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இது தொடர்பான வழக்கு வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது.

    இதில் வழுதாவூரைச் சேர்ந்த முகிலனின் கூட்டாளி களான பிரபு, சந்துரு சில மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இதில் அருண்குமார், அன்பரசன் ஆகியோருக்கு தொடர்பிருந்தது. இதனால் பழிக்குப்பழி வாங்க இவர்களை முகிலன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதில் தனிப்படை போலீ சார் முகிலனை தேடி சென்ற போது அவர் தப்பி யோடியது தெரியவந்தது. தொடர்ந்து புதுவை மாநி லம் வில்லியனூர் பகுதி, விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர், வானூர் பகுதி களில் உள்ள முகிலனின் கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வானூரில் நடந்த இரட்டை கொலையில், புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் , வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடி தலை மறைவாக உள்ள வழுதாவூர் முகிலனை தனிப்படை போலீசார் தேடி வருகின்ற னர். இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர் புள்ளதா என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • புதுச்சேரி சார்பில் கவுண்டன் பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கிக் பாக்ஸிங் சங்கத்தின் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி புதுச்சேரி சார்பில் கவுண்டன் பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. சப்- ஜூனியர் , ஜூனியர், சீனியர் ,மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவு களில் நடைபெற்ற இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் தமிழ்கிக் பாக்ஸிங் கிளப் வீரர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். கிளப்பின் தலைவர் செபஸ்தியன், மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட கிக் பாக்ஸிங் வீரர்களுக்கு புதுவை இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குனர் முத்து கேசவலு, புதுைவ கிக் பாக்ஸிங் சங்க தலைவர் இளங்கோவன், முத்து ரத்தின அரங்க மேல்நிலைப் பள்ளியின் இயக்குனர் கராத்தே சுந்தரராஜன், புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சேர்மன் ஆளவந்தார், சீனியர் பயிற்சியாளர்கள் பாண்டியன், தங்கவேலு, மோகன் ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினர்.

    இப்போட்டியில் தேசிய நடுவரான அமிர்தராஜ், பிரவீன் குமார், அய்யனார், சந்திரகுமார் , ராஜ்குமார் விநாயகம் , அபிலாஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

    ×