என் மலர்
புதுச்சேரி
- துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக மின்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
- மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும் கோட்டக்குப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டகுப்பம் பகுதிகளில் குறைந்த மின் அழுத்தத்துடன் தொடர் மின்வெட்டு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அதனை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கட்சியினர் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர் மின்வெட்டு காரணமாகவும் மாநில செயலாளர் முஸ்காதீன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், குறைந்த மின் அழுத்தத்துடன் மின்சாரம் விநியோகிக்க ப்படுவதாகவும் கோட்டக்குப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
போர்க்கால அடிப்படையில் மின்சார பிரச்சனைக்கு தீர்வு காணவில்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் மின் துறை சார்பாக போராட்டக் காரர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் வருகின்ற 2024-ம் ஆண்டுக்குள் கோட்டகுப்பம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக மின்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
இந்தப் போராட்டத்தில், புதுவை மாவட்ட தலைவர் சகாபுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் பஷீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட தொண்டரணி செயலாளர் நாகூர் கணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது அலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் ஹபீப் முஹம்மது, மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் நிஜாமுதீன், நகர தலைவர் அபுதாஹிர் த.மு.மு.க. நகர செயலாளர் ஜரித் ம.ம.க. நகர செயலாளர் நஜிர் அஹமது, நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர செயலாளர் ஹாஜதுல்லா அப்துல் ஜப்பார், அசேன் ஆபிதீன், அபுல் ஹசன், அமீன், மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உலக பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ள நிலையில் இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது.
- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் ரூ.15 மட்டுமே சென்று சேர்வதாக கூறியிருந்தார்.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கில் பா.ஜனதா சார்பில் நடந்த பிரதமரின் 9 ஆண்டுகால சாதனை விளக்க மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-
2014-க்கு முன் நாட்டை ஆண்டவர்கள், ஊழலை பிரத்யேகமாக கொண்டு ஆட்சி செய்தனர். மக்கள் விடிவுக்காக காத்திருந்தபோது பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஏழைகளின் நலன், மக்கள் சேவை ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு ஆட்சி செய்து வருகிறார். அரசின் மானியம் மக்களை நேரடியாக சென்றடைய மக்களுக்கு இலவச வங்கி கணக்கு தொடங்கினார்.
ஏழை மக்கள் வீடு கட்டும் திட்டம், சுகாதாரமான குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை உட்பட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது அதிகளவில் உள்ளதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.
உலக பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ள நிலையில் இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் ரூ.15 மட்டுமே சென்று சேர்வதாக கூறியிருந்தார். தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் 100 சதவீதமும் மக்களை நேரடியாக சென்றடைகிறது.
சமூகநீதி பற்றி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாராயணசாமி ஆகியோர் பேசுகின்றனர். உண்மையில் சமூகநீதிக்கு உதாரணம் பிரதமர் மோடிதான். புதுவையில் பா.ஜனதா அமைச்சர் வசம் உள்ள உள்துறை மூலம் 700 போலீசார் எந்த முறைகேடும் இன்றி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவைக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளோம். பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இளைஞர்களை திருமாவளவன் திசை திருப்புவதாக சிலர் கூறுகின்றனர். இளைஞர்கள் வளர்ச்சிப்பாதையை நோக்கி திரும்ப வேண்டும்.
வரும் 2047-ல் இந்தியா வல்லரசாக மாற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நிருபர்கள் கேட்டபோது, அமலாக்கத்துறை என்பது ஒரு தனி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்பு. அதை யாரும் ஏவிவிடவில்லை. அமலாக்கத்துறையினர் தங்களுக்கு வந்த புகார்கள், ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களின் கடமையை செய்கின்றனர் என்றார்.
- மணி அடித்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்தல்
- காலையில் இறை வணக்க கூட்டத்தில் நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் விளைவுகளை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பள்ளி திறப்பு 2 முறை நீட்டிக்கப்பட்டது. இன்று கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க விதவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளியின் வாயில்களில் தோரணங்கள் கட்டப்பட்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
வாசலில் கலை நிகழ்ச்சிகள், மேளதாளங்களுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களுக்கு சாக்லெட், பூக்கள் வழங்கியும், பன்னீர் தெளித்தும் வரவேற்றனர். முதல் நாளான இன்று மாணவர்களோடு பெற்றோர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர். நீண்ட நாளைக்கு பிறகு நண்பர்களோடு மாணவர்கள் பேசி மகிழ்ந்தனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்தது. இன்று காலை 7 மணி முதலே கடுமையான வெப்பம் நிலவியது.
இதனால் மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த சொல்லும்படி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதற்காக பள்ளிகளில் தினமும் 3 முறை வாட்டர் பெல் அடிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி காலையில் இறை வணக்க கூட்டத்தில் நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் விளைவுகளை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மாணவர்கள் தண்ணீர் அருந்த காலை 10.30, 11.45, 2.30 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்பட்டது. அந்நேரத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை தண்ணீர் குடித்து வரும்படி அறிவுறுத்தினர். பள்ளி திறப்பால் புதுவை நகரத்தில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு கை கடிகாரம் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்எல்ஏ, இணை இயக்குனர் சிவகாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
- வையாபுரி மணிகண்டன் கண்டனம்
- வரலாறு தெரியாமல் தான் தோன்றித் தனமாக தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரிமணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு எடுத்துக்கூறிய ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் காத்துக்கிடந்த வரலாறு தெரியாமல் தான் தோன்றித் தனமாக தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவுடன் கூட்டணி தொட ரக்கூடாது என்ற எண்ணத்தோடு அண்ணாமலை செயல்ப டுவது அப்பட்டமாக தெரிகிறது.
தனது அநாகரீகமான பேச்சுக்கு தமிழ்நாடு பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி, உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கோடான கோடி அ.தி.மு.க. தொண் டர்களின் உள்ளக் கொதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதைவட கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி பெருமாள் கோவில் வீதி, டாக்டர் அம்பேத்கர் நகரில் வரை மின்சார விநியோகம் மின்கம்பங்கள் மூலம் கொடுக் கப்பட்டு வந்தது.
அந்தப் பகுதியில் மின்சார கம்பிகள் மிக தாழ்வாக செல்வதால் பொது மக்களுக்கு எந்த நேரமும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்த பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., அப் பகுதிக்கு புதைவட கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.
தற்பொழுது டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள பிரதான வீதி மற்றும் குறுக்கு வீதிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் புதைவடகேபிள்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், செயற்பொறி யாளர் கேபிள் பிரிவு செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் திலகராஜ், முருகசாமி, இளநிலை பொறியாளர்கள் குமார், லோகநாயகி பிகோத்தே மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
- போட்டியில் 83 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய கிளாசிக் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
போட்டியில் 83 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற புதுவை வீரர் அரிஹரன் 245.5 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கமும், டெட் லிப்ட் பிரிவில் 270 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கமும் பெற்றார். பதக்கம் வென்ற அரிஹரனுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தகவல்
- அரசு மக்களுக்கு ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை விநியோகம் செய்வோம் என்று வாக்குறுதி அளித் துள்ளது. சட்டமன்றத்திலும் உறுதி அளித்துள்ளோம்.
புதுச்சேரி:
ரேஷன் கடைகள் திறப்பு குறித்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் கூறியதாவது:-
ரேஷன் கடைகளை திறந்து மீண்டும் பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக சட்டத்துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது சட்டத்துறை தனது கருத்தை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களில் நேரடி பண பரிமாற்றம் தொடரலாம். ஆனால் மாநிலஅரசு மக்களுக்கு ரேஷன் கடை களை திறந்து பொருட்களை விநியோகம் செய்வோம் என்று வாக்குறுதி அளித் துள்ளது. சட்டமன்றத்திலும் உறுதி அளித்துள்ளோம்.
மேலும் புதுவை மக்களும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். அதோடு ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் பொருள்களுக்கான தொகை அந்த குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இதனை அந்த குடும்பத்தில் உள்ள அனை வருடனும் அவர் பகிர்ந்து கொள்கிறாரா என்று கேள்வி எழுகிறது.
இது போன்ற நியாயமான கருத்துக்களை கோப்பில் தெரிவித்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாளில் ரேஷன் கடை திறப்பு தொடர்பான கோப்புக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்.
தொடர்ந்து கோப்பு கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளது கவர்னரின் ஒப்புதலுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தெரிவித்தார்.
- வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு காமாரஜ் நகரை சேர்ந்தவர் மாதவன் இவரது மனைவி சுமதி இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன் இறந்து விட்டார். இதனால் சுமதி தனது கடைசி மகள் செல்வராணியுடன் வசித்து வருகிறார்.
குடும்பத்தை நடத்த சுமதி அங்குள்ள சோப்பு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை சுமதி வேலைக்கு சென்று விட்டார். அவரது இளைய மகள் செல்வராணி தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். மதியம் சுமதி வேலை முடிந்து வீட்டு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்ததை பார்த்து சுமதி திடுக்கிட்டார்.
யாரோ மர்ம நபர்கள் சுமதி வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத போது நைசாக வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சுமதி திருபுவணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினர். விசாரணையில் சுமதி வீட்டில் பணம் திருடியது மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபு வயது.29 என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபு மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேரு எம்.எல்.ஏ. சமரசம்
- அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக் குட்பட்ட சவரிராயுலு வீதியில் உள்ள திரு.வி.க. அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திரு.வி.க. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ. அங்கு சென்று கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
பள்ளி இடமாற்றம் குறித்து எம்.எல்.ஏவிடம் கூட தகவல் தெரிவிக்காதது ஏன்? என வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி தற்போதைய இடத்திலேயே செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
- மோட்டார் சைக்களில் சென்ற இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
வானூர்:
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். இவர்கள் கடந்த 10-ந்தேதி மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். மோட்டார் சைக்களில் சென்ற இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்
இது தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாகவும், பழிக்குப்பழி வாங்கவும் வழுதாவூரைச் சேர்ந்த ரவுடி முகிலன் அருண்குமார், அன்பரசன் ஆகியோரை கொலை செய்திருக்கலாம் என்று தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
இதில் தனிப்படை போலீசார் முகிலனின் கூட்டாளிகளான புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சென்னை அம்பத்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலவ், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் முடிவு செய்து இன்று சென்னை கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்னர்.
மேலும், இந்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்துள்ள முக்கிய குற்றவாளியான வழுதாவூர் முகிலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னரே கொலைக்கான காரணங்கள் தெரியவரும் என்று வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் கூறினார்.
மேலும், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கடலூர் சிறைக்கு அழைத்து வந்தனர். இங்கு கொலை செய்யப்பட்ட அருண்குமாரின் ஆதரவாளர்கள் சிறையில் உள்ளதால், இவர்களை வானூர் போலீசார், விழுப்புரம் சப்-ஜெயிலில் அடைத்தனர் . விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் வேறு மாவட்டங்களில் உள்ள கோர்ட்டில் சரணடைவதும், பின்னர் அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.
- வியாபாரியிடம் விசாரணை
- இதற்கிடையே நாராயணசாமியிடம் கடை வியாபாரத்துக்காக இளைய ராஜா ஒரு லட்சம் கடன் வாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு அருள்படையாட்சி வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி. டைலர் கடை நடத்தி வருகிறார்.
இவரிடம் நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த இளையராஜா என்பவர் நண்பராக பழகி வந்தார். இளைய ராஜா நெல்லித்தோப்பு செயின்ட் அந்துவான் வீதியில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே நாராயணசாமியிடம் கடை வியாபாரத்துக்காக இளைய ராஜா ஒரு லட்சம் கடன் வாங்கினார்.
ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு நாராயணசாமியின் டைலர் கடைக்கு வந்த இளையராஜா அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கடையின் மேஜை டிராயரில் வைத்திருந்த அரை பவுன் நகையை இளையராஜா திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நாராயணசாமி இளையராஜாவிடம் கேட்ட போது நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் அந்த நகையை வேறு பெயரில் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார். பின்னர் நகை அடகு வைத்த ரசீதை நாராயணசாமியிடம் இளைய ராஜா கொடுத்தார். அதன் பிறகு இளையராஜா தலைமறைவாகிவிட்டார்.
இது பற்றி இளையராஜாவின் மனைவி தேவியிடம் நாராயணசாமி கேட்ட போது அவர் அடவாடியாக பேசினார். இதையடுத்து நாராயணசாமி தன்னிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி விட்டு நகையை திருடி வேறு பெயரில் அடகு வைத்து மோசடி செய்த இளையராஜா மீது உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் வேனை வழிமறித்து ஜீவானந்தத்திடம் தகராறு செய்தது.
- உயிரோடு எரித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை கரிக்கலாம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 49) இவர் கோர்க்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அதிகாலை ஜீவானந்தம் தான் பணிபுரியும் நிறுவன த்தில் இருந்து பொருட்களை வேனில் ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அபிஷேகப்பாக்கத்தில் வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் வேனை வழிமறித்து ஜீவானந்தத்திடம் தகராறு செய்தது.
மேலும் தகாத வார்த்தை களால் திட்டிய அந்த கும்பல் ஜீவானந்தத்தை சரமாரியாக தாக்கியதோடு வேன் கண்ணாடியையும் கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியது அதோடு ஜீவானந்தத்தை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.
இது குறித்து ஜீவானந்தம் தவளகுப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜீவானந்தத்தை தாக்கி வேன் கண்ணாடியை உடைத்த கும்பல் அபிஷேக பாக்கத்தை சேர்ந்த செல்வா, முரளி, ராமு, மற்றும் கடலூரை சேர்ந்த சூரியா என்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.






