என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேனை வழிமறித்து டிரைவரை தாக்கிய கும்பல்
    X

    கோப்பு படம்.

    வேனை வழிமறித்து டிரைவரை தாக்கிய கும்பல்

    • அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் வேனை வழிமறித்து ஜீவானந்தத்திடம் தகராறு செய்தது.
    • உயிரோடு எரித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கரிக்கலாம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 49) இவர் கோர்க்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அதிகாலை ஜீவானந்தம் தான் பணிபுரியும் நிறுவன த்தில் இருந்து பொருட்களை வேனில் ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அபிஷேகப்பாக்கத்தில் வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் வேனை வழிமறித்து ஜீவானந்தத்திடம் தகராறு செய்தது.

    மேலும் தகாத வார்த்தை களால் திட்டிய அந்த கும்பல் ஜீவானந்தத்தை சரமாரியாக தாக்கியதோடு வேன் கண்ணாடியையும் கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியது அதோடு ஜீவானந்தத்தை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

    இது குறித்து ஜீவானந்தம் தவளகுப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜீவானந்தத்தை தாக்கி வேன் கண்ணாடியை உடைத்த கும்பல் அபிஷேக பாக்கத்தை சேர்ந்த செல்வா, முரளி, ராமு, மற்றும் கடலூரை சேர்ந்த சூரியா என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×