என் மலர்
புதுச்சேரி

அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு கூறு திட்ட நிதி செலவினம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
சிறப்பு கூறு திட்ட நிதி செலவினம் குறித்து ஆய்வு கூட்டம்
- புதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் சட்டசபை அலுவலகத்தில் நடந்தது.
- சிறந்த திட்டங்களுக்கு செலவிடும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2023-2024-ம் ஆண்டுக்கான சிறப்பு கூறு திட்ட நிதி செலவின மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் சட்டசபை அலுவலகத்தில் நடந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு துணை சபாநாயகர் ராஜவேலு, குடிமை பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், அங்காளன் எம்.எல்.ஏ லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு குழு கூட்டத்தில் ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடி நலத்துறை செயலர் கேசவன், இயக்கு னர் சாய்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புக்கூறு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியினை விரைவாகவும் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு செலவிடும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பு கூறு நிதிகள் வாயிலாக திட்டங்களுக்கு செலவிடும் 20 அரசு துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டு இதுகுறித்து விவாதித்தனர்.






