search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்
    X

    கோப்பு படம்.

    என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்

    • நாராயணசாமி குற்றச்சாட்டு
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். 750 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் மோடி ஆட்சியை அகற்றுவோம், தேசத்தை பாதுகாப்போம் என்ற தெருமுனை பிரச்சாரம் நடத்தினர். இதன் நிறைவு விழா சுதேசி மில் அருகே நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். தேசி யக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய செயலாளர் நாராயணா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பொது சொத்தையும், கோவில் சொத்தையும் சாப்பிட பார்க்கின்றனர். முதல்-அமைச்சர் வாக்குறுதி கொடுப்பதோடு சரி, எதையும் செய்வதில்லை. டெல்லியில் முதல்-அமைச்சர் மாநாடு நடந்தது.

    அதில் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து பேசவில்லை. கடனை தள்ளுபடி செய்வேன் ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி பெறுவோம், நிதிகமிஷனில் புதுவையை சேர்ப்போம் என்றனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். 750 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்து ள்ளார்.

    குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு ரூ.160 கோடி நிதிதேவை. அதற்கு நிதி ஒதுக்கவில்லை. அப்புறம் எப்படி சிலிண்டருக்கு ரூ.300 தர முடியும்? பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு த்தொகை வழங்கவில்லை. பெண்களுக்கு ரூ.1000 ஒரு மாதம் மட்டும்தான் கொடுத்தனர். பட்ஜெட்டில் 34 வாக்குறுதிகள் கொடுத்து, ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்றவுடன், கவர்னர் கூட்டம் கூட்டுகிறார். முதல்-அமைச்சர் செய்யவேண்டியதை கவர்னர் செய்கிறார். பா.ஜக அமைச்சர்கள் கிடைத்ததை சுருட்டுகின்றனர். எதில் வசூல் வருகிறதோ? அதை செய்கின்றனர். புதிதாக ரூ.400 கோடியில் சட்டமன்றம் கட்டப்படும் என கூறுகின்றனர். அதிலும் சுருட்ட பார்க்கின்றனர். மத்தியில் புதிய சட்டமன்றம் கட்ட கோப்பு வந்துள்ளதா? என கேட்டால் இல்லை என்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட்டு ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், திராவிடர் கழகம் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது உமர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×