என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கலைமாமணி விருதாளர்களுக்கு உதவித் தொகையை உயர்த்த கோரிக்கை
    X

    கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா சால்வை அணிவித்து பாராட்டிய காட்சி.

    கலைமாமணி விருதாளர்களுக்கு உதவித் தொகையை உயர்த்த கோரிக்கை

    • திறமையைப் போற்றி வழங்கப் பட்டாலும் பலரும் வசதி இன்றி ஏழ்மை நிலையில் உள்ளனர்.
    • மோகன்தாஸ், அருள் செல்வம், ஜெயந்தி ராஜவேலு ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

    புதுச்சேரி:

    கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டபோது 216 கலைஞர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைமாமணி விருது புதுவை அரசு சார்பில் வழங்கப்பட்டது.

    இதற்காகப் புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறைக்கு பாராட்டு விழாவும் 216 கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டு விழாவும் மன்னர்மன்னன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றன.

    விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கிப்பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது:-

    கலைமாமணி விருது திறமையைப் போற்றி வழங்கப் பட்டாலும் பலரும் வசதி இன்றி ஏழ்மை நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.மேலும் புதுவை அரசுப் பஸ்சில் கட்டணமில்லாமல் அவர்கள் பயணிக்க அரசு உதவி செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விழாவில் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா, துறைச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் கலியபெருமாள் ஆகியோருக்கு அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில் செயலாளர் வள்ளி, நாராயணசாமி, கலியபெருமாள், செல்வன், அரங்க.முருகையன், அவ்வை நிர்மலா முன்னிலை வகித்தனர். மோகன்தாஸ், அருள் செல்வம், ஜெயந்தி ராஜவேலு ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

    முன்னதாக விஜயலட்சுமி வரவேற்றார். முடிவில் புவனேசுவரி ரகுராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×