என் மலர்
புதுச்சேரி

கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை
- நவம்மாள் காப்பேர் கிராமம் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி
- ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் கிராமம் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
ஜெயமூர்த்தியின் வீடு சேதமடைந்ததால் அந்த வீட்டை பூட்டி விட்டு புதுவை ரெட்டியார் பாளையம் டீச்சர் காலனியில் உறவினர் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் நவமால் காப்பேர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த ஜெயமூர்த்தியின் வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜெயமூர்த்தியின் சகோதரர் தயாளன் ஜெயமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்த போது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஜெயமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.






