என் மலர்
புதுச்சேரி
- மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது.
- மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி கிராமம் கடலோரப் பகுதியில் உள்ளது. இங்கு ஏற்கனவே கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் கல் கொட்டும்பணியை அரசு மேற்கொண்டது.
ஆனால், தமிழக பகுதியில் கொட்டப்பட்டுள்ளது போல கடல் நோக்கி தூண்டில் வளைவு அமைக்காமல் சாலை போடுவது போல் கல் கொட்டப்பட்டது.
இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கல் கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக பிள்ளைச்சாவடியின் வடக்குப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலில் அடித்து செல்லப்பட்டன. மேலும் கடலோர பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடித்து செல்லப்பட்டன.
மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. எந்த நேரத்திலும் இந்த 2 களங்களும் கடலுக்குள் விழும் என்ற அபாய நிலையில் உள்ளது.
இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், ஆதிதிராவிடர் பகுதி குடியிருப்பு பஞ்சாயத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசி மறியல் நடத்தவிடாமல் கைவிட செய்தார்.
மேலும் அவர்களோடு, கடல் அரிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராட்சத கற்கள் கொட்டப்படும் மற்றும் தூண்டில் முள் வளைவு போல கற்கள் கொட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதையேற்று பொதுமக்கள் போராட்ட முடிவை கைவிட்டனர். மறியலுக்காக மீனவர்கள், கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டதால் சிறிதுநேரம் பதட்டம் நிலவியது.
- பா.ஜனதா பொருப்பாளரும், கூட்டுறவு பிரிவு தலைவரு மான வெற்றிச்செல்வம் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
- துணை செயலாளராக பிரபாகரன் மற்றும் துணை பொருளாளராக ரகு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலை மற்றும் தீயணைப்பு நிலையம் அருகே பிரதமர் மோடி ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் திறப்புவிழா நடந்தது.
பா.ஜனதா கட்சியின் நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ., மற்றும் உப்பளம் தொகுதி பா.ஜனதா பொருப்பாளரும், கூட்டுறவு பிரிவு தலைவருமான வெற்றிச்செல்வம் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு உப்பளம் தொகுதி பா.ஜனதா தலை வர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக ஆரோக்கிய சாமி, செயலாளராக இமான் என்ற இமானுவேல், பொரு ளாளராக இஸ்ரோ என்ற இஸ்ரவேல், துணை தலைவராக ராஜவேல், துணை செயலாளராக பிரபாகரன் மற்றும் துணை பொருளாளராக ரகு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் தெய்வநாயகம், அற்புதழகன், இன்பசேகர், குமார், ரஞ்சித், அஜித், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- எதிர்கட்சி தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார்
- ரூ. 12 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூர் மணவௌி பஞ்சாயத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து மணவௌி ஒதியம்பட்டு, வெங்கடேஸ்வரா நகர், தண்டுக்கரை வீதி, மல்லிகை நகர் உள்ளிட்ட பலவேறு பகுதிகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மணவௌி பஞ்சாயத்தில் புதியதாக மனைப்பிரிவுகள் உருவானதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து தொகுதி
எம்.எல்.ஏ. சிவா கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அதனடிப்படை யில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுப் பணித்துறையின் பொது சுகாதார கோட்டத்தின் மூலம் ரூ. 12 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது.
இந்த பணிக்கான பூமி பூஜை விழா வெங்க டேஷ்வரா நகரில் நடந்தது. எதிர்கட்சித் தலைவர் சிவா பூமி பூஜை செய்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்த புதிய ஆழ்துளை கிணறு மூலம் ஒதியம்பட்டு, வெங்கடேஷ்வரா நகர், அன்னை இந்திரா நகர், மகாசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
விழாவில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறு முகம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் முருகாணந்தம், உதவிப் பொறியாளர் வாசு, இளநிலைப் பொறியாளர் ஞானவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
- ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
- கல்லூரியில் படிப்பவர்களும் பகுதி நேரமாக இதில் சேர்ந்து பயனடையலாம்.
புதுச்சேரி, ஜூன் 24-
தேசிய வாழ்வாதார மையத்தின் புதுவை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராக மையத்தின் சார்பில் ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
வருகிற 10-ந் தேதி முதல் தலைசிறந்த தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் சேர ஆர்வமுள்ள 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டய படிப்பு படித்தவர்கள், படித்துக் கொண்டிருப்ப வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மையத்தில் வழங்கப்படு கிறது. இதற்கான வயது வரம்பு 18 முதல் 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாலைநேரத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
கல்லூரியில் படிப்பவர்களும் பகுதி நேரமாக இதில் சேர்ந்து பயனடையலாம். மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு பயிற்சி புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்படும். வருகிற 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரிடம் பஞ்சாயத்தார் மனு
- புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும், புதுநகர் அங்கன் வாடியை சொந்த இடத்தில் கட்டவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் கணுவாப்பேட்டை கிராம பஞ்சாயத்து மக்கள் முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் தலைமையில் அமைச்சர் தேனீ.ஜெயக் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கணுவாப்பேட்டை கிராம பஞ்சாயத்தில் சாலை வசதி, கழிப்பிட வசதி, சுடுகாடு சுற்றுச்சுவர், 100 நாள் வேலை மூலம் ஆற்றங் கரை மேம்பாடு, தெரு விளக்கு, அடிப்படை வசதிகள் என தொகுதியில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் கணுவாப் பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்த நிலை யில் உள்ளது.
அதன் கொள்ளளவு குறைவாக உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படு கிறது. எனவே அதிக கொள்ள ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும், புதுநகர் அங்கன் வாடியை சொந்த இடத்தில் கட்டவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
அங்காளம்மன் கோவில் எதிரே உள்ள குடிநீர் கீழ் நிலை நீர்தேக்க தொட்டியை சுற்றிலும் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும். சுத்திரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துத்தர வேண்டும். திருக்காஞ்சி மெயின்ரோட்டில் இருந்து புதுநகர் 3-வது பிளாட்டுக்கு செல்ல இணைப்பு சாலை வசதி செய்துதர தனியார் இடத்தை கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைத்து சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்:-
இந்த சந்திப்பின்போது சந்திரகாசன், பெருமாள், தங்கராசு, சந்திரதரன், சுரேஷ், அரிகிருஷ்ணன், மோகன்தாஸ், சொக்க லிங்கம், பாலகிருஷ்ணன், பாபு, உமாபதி, வக்கீல் கார்த்திக், சீனிவாசன், நாகப்பன், வேணுகோபால், திருவேங்கடம், குமார், வைத்தியநாதன், அர்னால்டு முருகன், சல்வம், மணி, தணிகாசலம், வேலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கடந்த 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது.
- முடிவில் கருணாலயம் கிராம இளைஞர் சங்க அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கருணாலயம் கிராமச் சங்கம், பெங்களூர் எனேபிள் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனா ளிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கடந்த 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.
இவ்விழாவில் இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் அமிர்தவல்லி, புதுவை மாநில மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் இயக்குனர் சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த வர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சிக்கு கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எனேபிள் இந்தியா பெங்களூர் நிறுவனத்தின் புதுவை அலுவலர் ஆல் ரிங் டார்விஸ், விமல் ராஜ்குமார் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கு பெற்ற அனைவரையும் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக அனை வரையும் கருணாலயம் கிராம நல சங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் கருணாலயம் கிராம இளைஞர் சங்க அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
- இணைச்செயலாளர் லாவண்யா தலைமையில் நடந்தது
- பெண்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது குறித்து பேசினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி. சேகர் அறிவுறுத்தலின்படி உழவர்கரை தொகுதி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜெயா நகரில் நடந்தது.
வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இணைச்செய லாளர் லாவண்யா பேசும்போது, உழவர்கரை தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், தொகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் நியமிப்பது, பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரன் அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது, தலைமை அறிவுறுத்தலின்படி பெண்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது குறித்து பேசினார்.
கூட்டத்தில் மேல் அமைப்பு பிரதிநிதி லூர்துசாமி, தொகுதி துணைச் செயலாளர் ழில்பேர் மற்றும் சுப்பிரமணி, சூசைராணி, சூசை, ஜாக்குலின்மேரி, உமா, ரோஸ்லின், கவிதா, எலன்செல்வராணி, இந்துமதி, இன்பம், சந்திரா, சரளா, உமா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- மத்திய அரசு திட்டங்களில் பயனடைய உள்ள புதுவை மீனவர்கள் பற்றிய விபரங்களை வைத்திருக்க உத்தரவிட்டார்.
- கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தையும் மத்திய மந்திரி முருகன் தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
மத்திய இணை மந்திரி முருகன் வருகிற 29-ந் தேதி புதுவைக்கு வருகிறார்.மீன்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.
அப்போது மத்திய அரசு திட்டங்களில் பயனடைய உள்ள புதுவை மீனவர்கள் பற்றிய விபரங்களை வைத்திருக்க உத்தரவிட்டார்.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான பூர்த்தி செய்த கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களும்இந்த அப்டையை பயன் படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ரூ.20 ஆயிரம் வரை பயன்படுத்தலாம்.
வருகிற 29-ந் தேதி கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தையும் மத்திய மந்திரி முருகன் தொடங்கி வைக்கிறார்.
- மின்துறை செயற்பொறியாளரிடம் தி.மு.க. மனு
- பொது மக்களின் நலன் கருதி சிரமத்தை போக்குகின்ற வகையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஆவண செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லிதோப்பு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் மின்துறை செயற்பொறியாளர் கனி அமுதனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட குயவர்பாளையம், அண்ணாநகர், கே. சி. நகர், திருமால் நகர், டி. ஆர். நகர், வேல்முருகன் நகர், சத்யாநகர், சக்தி நகர், வெண்ணிலா நகர், ராஜயர் தோட்டம், கண்ணைய தோட்டம், நவீனா கார்டன், வாசுகி நகர், பிள்ளைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. இது அறிவிக்கப்படாத மின்தடையாக உள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள், வணிகப் பெருமக்கள் மிகுந்த சிரமத்துக்குளாகிறார்கள். பொது மக்களின் நலன் கருதி சிரமத்தை போக்குகின்ற வகையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ், தொகுதி தி.மு.க. செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், ஐடி விங் அருண், தொகுதி துணை செயலாளர் கிருபாகரன், வக்கீல் ஞானராஜ், தொகுதி நிர்வாகிகள் ஜெகதீசன், ரமேஷ், செல்வகுமார், பரத், ஞானவேல், பிரான்சிஸ், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- பள்ளியின் சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழாமல் இருக்க சுற்றுச்சுவருக்கு முட்டு க்கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் மாதா கோவில் எதிரே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்திலேயே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 2 பள்ளியில் இந்த பள்ளியும் ஒன்று. பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்த பள்ளி மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
பழமையான இந்த பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் பலவீனமாக உள்ளது. தூண்கள் பலவீன மாக உள்ளது. மேற்கூரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது.
எனவே இந்த பள்ளியை அருகில் உள்ள சிறார் காப்பக இடத்தோடு இணைத்து புதிதாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் கல்வித்துறைக்கும், அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பலவீனமடைந்து முழுமையாக சரிந்துள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழாமல் இருக்க சுற்றுச்சுவருக்கு முட்டு க்கொடுக்கப்பட்டுள்ளது.
இது பள்ளிக்கு வெளியே சாலையில் செல்வோருக்கு பேராபத்தை விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி யுள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி அவலத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களையும் நடத்த தயாராகி வருகின்றனர்.
- நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
- நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ரெயில் மூலம் மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் வேலை முடிந்து தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டன.
அதுவும் கடந்த 14-ந் தேதி ஒரே நாளில் புதுவையில் முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, பெரியகடை, முத்திரையர்பாளையம் ஆகிய பகுதிகளில் 4 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகைகளை பறித்து சென்றனர்.
இந்தநிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நகை பறிப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருபுவனையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி வந்து கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முகமது ஜாபர் குருஷி (29), வாரிஷ் கான் (30), விழுப்புரத்தில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரது வீட்டில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது,
நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ரெயில் மூலம் மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்றனர். யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தபோது அங்கு ரெயிலில் வந்த முகமது ஜாபர் குருஷியை மடக்கி பிடித்தனர். மற்றொரு கூட்டாளியான வாரிஷ் கான் கடந்த 2 நாட்களுக்கு முன்பே மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து முகமது ஜாபர் குருஷியை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது ஜாபர் குருஷி தனது கூட்டாளி வாரிஷ் கானுடன் காவி உடை அணிந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தான்.
இதைத்தொடர்ந்து முகமது ஜாபர் குருஷியை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மும்பைக்கு தப்பி சென்ற அவனது கூட்டாளி வாரிஷ் கானை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
- ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.
- ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி தனியார் பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ புஸ்சி வீதியில் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணித்த 8 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பஸ், ஆட்டோ டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே ஆட்டோவில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி புதுவை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
புஸ்சி வீதி-தூய்மா வீதி சந்திப்பில் பள்ளி மாணவிகளை ஏற்றி வரும் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சோனாம்பாளையம் சந்திப்பிலும் சோதனை நடத்தினர்.
அப்போது ஆட்டோவில் 5 மாணவர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. ஆனால் அதை தாண்டி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 200 வீதம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.
ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர். இதுபோல் நடந்த சோதனையில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மன வருத்தமடைந்துள்ளனர். 5 மாணவர்களை மட்டும் ஆட்டோவில் ஏற்றிச்சென்றால் தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்.






