என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடக்க இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவில் நில மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரில் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு தொடர்பாக சார்பு பதிவாளர் சிவசாமி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    இதேபோல் காரைக்காலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் நில மோசடியில் திருநள்ளாறு சார்பு பதிவாளர் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

    ஆனால் இதற்குப் பின்புலமாக இருக்கும் அரசியல் பிரமுகர்கள் அதிகார மையத்தில் உள்ளவர்கள் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியின் கீழ் ஒட்டு மொத்தமாக நிலப்பதிவேடு மற்றும் பத்திர பதிவுத்துறை லஞ்சம் ஊழல் மோசடிகளின் கூடாரமாக மாறிவிட்டது. சில இடங்களில் போலீஸ்துறையும் நில மோசடிக்கு உடந்தையாக உள்ளது தெரிய வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலோர் நில வணிகர்கள் என்பதனால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது.

    எனவே காமாட்சி அம்மன் கோவில் இடத்தை அபகரித்த அனைவரையும் விசாரணை வளை யத்திற்குள் கொண்டு வந்து எந்தவித அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடக்க இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    மேலும், 2011 முதல் 2023 வரையில் பத்திர பதிவுத்துறையில் நடந்துள்ள மோசடிகள், நடவடிக்கைகள் குறித்தும், விடுதலைக்குப் பிறகு மாநில அரசின் வசம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போது உள்ள நிலங்கள் குறித்து ஆளும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உற்சவருக்கு விசேஷ திரு மஞ்சனமும், மாலையில் அனுக்சை மற்றும் மிருத்சங்கரணமும் நடைபெறுகிறது.
    • கருடசேவை, பூர்ணாஹுதி, சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டு தோறும் பவித்ர உற்சவம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி 52- வது ஆண்டு பவித்ர உற்சவம் வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ திரு மஞ்சனமும், மாலையில் அனுக்சை மற்றும் மிருத்சங்கரணமும் நடைபெறுகிறது.

    2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை தினமும் 120 திருவாராதனமும், 5-ந் தேதி  கருடசேவை, பூர்ணாஹுதி, சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    • மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
    • நேஷனல் பள்ளி நிர்வாக இயக்குனர் கிரண் குமாருக்கு கல்விச்செம்மல் விருது வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் சங்கமம் அறக்கட்டளை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார், என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால், ஆகியோர் கலந்து கொண்டு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    மேலும் ஆண்டு தோறும் சாதனை மாணவர்களை உருவாக்கி கல்வி வளர்ச்சிக்கு பெறும் பங்காற்றி வரும் தவளகுப்பம் நேஷனல் பள்ளி நிர்வாக இயக்குனர் கிரண் குமாருக்கு கல்விச்செம்மல் விருது வழங்கப்பட்டது.

    • காங்கிரஸ் வலியுறுத்தல்
    • அரசு பள்ளி கல்வியை மேம்படுத்த முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எ.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு பள்ளிகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடங்களை கற்றுத்தரும் அளவிற்கு ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளதா.?அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்தை பின்பற்றக்கூடிய அளவிற்கு வசதிகள், சோதனைக்கூடங்கள், கற்றல் கருவிகள் இருக்கிறதா.?

    மேலும் ஆங்கிலம் வழியில் படிப்பது கடினமாக இருக்கும். எனவே, பயிற்சி மொழியை தமிழாக வைக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    புதுவையில் பள்ளிக்கல்வி மிகவும் சோதனையான காலக்கட்டத்தில் உள்ளது. எனவே அரசு பள்ளி கல்வியை மேம்படுத்த முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

    பெரிய மார்க்கெட்டை இடித்து புதிய கட்டிடம் கட்டுவது சிறு வணிகர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பெரிய மார்க்கெட்டை தற்காலிகமாக பழைய சிறைச்சாலை வளாகத்துக்கு மாற்றி படிப்படியாக கட்டலாம்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் இடமாற்றத்தின் மூலம் மறுபடியும் பெரிய தாக்கத்திற்கு ஆளாக்கினால் அழிந்து போகும் நிலை ஏற்படும். எனவே இடமாற்றம் முதல் மீண்டும் கடைகளை கட்டி ஒப்படைக்கும் காலம் வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் நடந்தது.

    கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை தாங்கி பேசினர்.

    புதுவை மாநில போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், செல்வம் வீரவல்லவன் கடலூர் மாவட்ட டி.எஸ்.பி.க்கள் பிரபு, சபியுல்லா, விஜயகுமார், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச போலீசாருக்கு இடையேயான செயல்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதித்தனர்.

    விவாதத்தில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்தல்-சேகரித்தல், எல்லைச் சோதனைச் சாவடிகளில் விழிப்புடன் இருக்கும் போலீசார் மூலம் போலி மதுபானங்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவற்றை சட்ட விரோதமாக கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்துதல்.

    சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர்தல், குற்றத் தடுப்பு அம்சத்தில் கூட்டு ரோந்து, மாநிலங்களுக்கு இடையேயான போலீசார் குற்றப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஒருங்கிணைப்பு, எல்லை பகுதியில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது என்பது குறித்து விவாதித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த கூட்டம் எல்லை பகுதியில் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இரு புறத்தில் இருந்து வரக்கூடிய குற்ற நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது. இதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும். இரு மாநில எல்லை போலீசாரிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் அப் செயலி ஏற்படுத்தப்படும்.

    இரு மாநில போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். எல்லைப்புற போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடையே மாதம் தோறும் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் எல்லைபுற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு, குற்றப்பிரிவு, அமலாக்க பிரிவு போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 

    • அரசின் தீவிர முயற்சியினால் மீண்டும் தற்போது மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது.
    • ஒட்டுமொத்தமாக 370 இடங்கள் அரசு ஒதுக்கீடாக புதுவை மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்து வக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.இங்கு 180 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இதில் 131 எம்.பி.பி.எஸ் இடங்கள் புதுவை மாணவர்களுக்கும், பிற இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ ஆணையம் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிறுத்தி வைத்தது.

    இது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசின் தீவிர முயற்சியினால் மீண்டும் தற்போது மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது. 5 ஆண்டுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவ கல்லூரி களில் ஆண்டுதோறும் அரசு இடங்கள் பெறப்படும். இதில் 2 தனியார் மருத்துவக்கல்லூரிகள் கடந்த ஆண்டைவிட தலா 100 இடங்கள் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மருத்துவக்கல்லூரி களில் அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கீடாக பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்துடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ேபச்சுவார்த்தை முடிவில் பிம்ஸ் கல்லூரி 56, மணக்குள விநாயகர் கல்லூரி 91, வெங்கடேஸ்வரா கல்லூரி 92 என மொத்தம 239 இடங்கள் அரசு ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 131 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 370 இடங்கள் அரசு ஒதுக்கீடாக புதுவை மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 77 இடங்கள் அதிகம்.

    இதுதவிர ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாநில ஒதுக்கீடாக 64 இடங்கள் உள்ளது.

    • நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    நயினார்மண்டபம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ரேகா. இவர்களுடன் ரேகாவின் தந்தை கலைமணி(வயது64). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளாக கலைமணி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்தநிலையில்  கலைமணிக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கலைமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மாடியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகள் ரேகா கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வியாபாரிகள்,பொதுமக்கள் கோரிக்கை
    • மாட்டு சந்தையில் தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், மதகடிப்பட்டில் வார மாட்டு சந்தை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

    செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தையில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இந்த சந்தையில் கூடி மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், தங்களின் விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த மாட்டு சந்தையில் தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

    மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக சந்தை காட்சியளிப்பது வழக்கமாக உள்ளது. மேலும் வெயில் காலங்களில் வெட்ட வெளியில் வியாபாரம் நடைபெறுவதால் பொது மக்கள் மிகவும் சிரமத்துடன் வந்து செல்கின்றனர்.

    அதோடு குடிநீர், கழிவறை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. வியாபாரிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தை வைத்து அதிநவீன கட்டமைப்பை இந்த சந்தை யில் உருவாக்க முடியும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    வருடத்திற்கு 5 லட்சம் முதல் 21 லட்சம் வரை ஏலத்தில் எடுக்கப்படும் இந்த வார சந்தையை தனியார் நிர்வாகித்து வருவதால், அரசு இந்த சந்தையினை கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
    • சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் திருநள்ளாறு சாலையில், நகராட்சிக்கு சொந்த மான திடலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தை யில், காரைக்கால் மற்றும் நாகப் பட்டினம், தஞ்சாவூர், கும்ப கோணம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மிகப்பெரிய திடலான இங்கு வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் வாரந்தோறும் கூடுகின்றனர். ஆனால், இவர்களில் சுமார் 80 பேர் மட்டும் நிழலில் வியாபாரம் செய்ய நகராட்சி மேற்கூறை போட்டுள்ளது. மற்றவர்கள் சமம் செய்யப்படாத மண்ணில், சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

    அதே சமயம், நகராட்சி சார்பில், வியாபாரிகளிடம் ரூ.100 முதல் 400 வரை கடைக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், நகராட்சி வியாபாரிகளிடம் வசூல் செய்யும் பணத்தில், அவர்களுக்கு தேவையான நிழல் பந்தல், குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தருவதில்லை. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்ற னர். கடந்த ஆண்டு மழைக்கா லத்தில் வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் சேரும், சகதியுமான சந்தையில் சொல்லமுடியாத இன்னலுக்கு ஆளாகினர். இதனால் அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் எழுப்பியதோடு, பல்வேறு போராட்டஙக்ளும் நடைபெற்றது. இதன் எதிரொலியாக, வாரச்சந்தை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட்டத்திற்கு, சில மாதங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டு, தற்போதுவரை எந்தவித மேம்பாடு இல்லாத திடலில்தான் இயங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் தொடங்கவுள்ளது. அதற்குள், வாரசந்தையை, மேடாக்கி அல்லது, சிமெண்ட் தரை மற்றும் நிழல் பந்தலை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகதிற்கு, மாவட்ட நிர்வாகம் அழுத்தம் தரவேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்
    • தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை செஸ் அசோசியேஷன் மற்றும் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் 12 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு அமலோற் பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரிட்டோ வரவேற்று பேசினார்.

    அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இப்போட்டி நடைபெற உறுதுணையாக இருந்து இட வசதி ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளி தாளாளர் லூர்துசாமியை பாராட்டினர். அதோடு இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    • இந்த கஞ்சா பொட்டலங்களை கல்லூரி -பள்ளி மாணவர்க ளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
    • புதுவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அைடத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி உத்தர வின்படி திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கலிதீர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓட முயற்சி செய்தனர்.

    இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களது சட்டை பையில் சோதனை நடத்திய போது

    அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா பொட்டலங்களை கல்லூரி -பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

    கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் திருபுவனை, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தாமு என்ற தாமோதரன் (23), விருத்தாசலம் பகுதியை சேர்ந்த விஷ்வா (21), கோலியனூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அவர்களை புதுவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    கைதுசெய்யப்பட்ட 3 பேரில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருபுவனை பிரைனி ப்ளூம்ஸ் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • பயிற்சியாளர் டாக்டர்.பாஸ்கரன் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

    புதுச்சேரி:

    திருபுவனை பிரைனி ப்ளூம்ஸ் லெக்கோல் இன்டர்நேஷனல் சி. பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா தியான பயிற்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கல்வி குழுமத்தின் தலைவரும் வக்கீலுமான அருண்குமார் கலந்து கொண்டு யோகா பயிற்சியினை தொடங்கி வைத்தார் . அரவிந்த் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் திவ்யா அருண்குமார் யோகா பயிற்சிகள் குறித்து பேசினார்.

    சகஜ யோகா பயிற்சியாளர் டாக்டர்.பாஸ்கரன் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மாணவர்க ளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×