என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கோவில் நில மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
- அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடக்க இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவில் நில மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரில் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு தொடர்பாக சார்பு பதிவாளர் சிவசாமி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இதேபோல் காரைக்காலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் நில மோசடியில் திருநள்ளாறு சார்பு பதிவாளர் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
ஆனால் இதற்குப் பின்புலமாக இருக்கும் அரசியல் பிரமுகர்கள் அதிகார மையத்தில் உள்ளவர்கள் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியின் கீழ் ஒட்டு மொத்தமாக நிலப்பதிவேடு மற்றும் பத்திர பதிவுத்துறை லஞ்சம் ஊழல் மோசடிகளின் கூடாரமாக மாறிவிட்டது. சில இடங்களில் போலீஸ்துறையும் நில மோசடிக்கு உடந்தையாக உள்ளது தெரிய வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலோர் நில வணிகர்கள் என்பதனால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது.
எனவே காமாட்சி அம்மன் கோவில் இடத்தை அபகரித்த அனைவரையும் விசாரணை வளை யத்திற்குள் கொண்டு வந்து எந்தவித அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடக்க இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், 2011 முதல் 2023 வரையில் பத்திர பதிவுத்துறையில் நடந்துள்ள மோசடிகள், நடவடிக்கைகள் குறித்தும், விடுதலைக்குப் பிறகு மாநில அரசின் வசம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போது உள்ள நிலங்கள் குறித்து ஆளும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






