search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மழைக்காலம் தொடங்கும் முன்பு காரைக்கால் வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும்: வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை
    X

    மழை பெய்யும் நேரத்தில் சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கும் வாரச்சந்தை.

    மழைக்காலம் தொடங்கும் முன்பு காரைக்கால் வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும்: வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை

    • பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
    • சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் திருநள்ளாறு சாலையில், நகராட்சிக்கு சொந்த மான திடலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தை யில், காரைக்கால் மற்றும் நாகப் பட்டினம், தஞ்சாவூர், கும்ப கோணம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மிகப்பெரிய திடலான இங்கு வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் வாரந்தோறும் கூடுகின்றனர். ஆனால், இவர்களில் சுமார் 80 பேர் மட்டும் நிழலில் வியாபாரம் செய்ய நகராட்சி மேற்கூறை போட்டுள்ளது. மற்றவர்கள் சமம் செய்யப்படாத மண்ணில், சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

    அதே சமயம், நகராட்சி சார்பில், வியாபாரிகளிடம் ரூ.100 முதல் 400 வரை கடைக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், நகராட்சி வியாபாரிகளிடம் வசூல் செய்யும் பணத்தில், அவர்களுக்கு தேவையான நிழல் பந்தல், குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தருவதில்லை. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்ற னர். கடந்த ஆண்டு மழைக்கா லத்தில் வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் சேரும், சகதியுமான சந்தையில் சொல்லமுடியாத இன்னலுக்கு ஆளாகினர். இதனால் அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் எழுப்பியதோடு, பல்வேறு போராட்டஙக்ளும் நடைபெற்றது. இதன் எதிரொலியாக, வாரச்சந்தை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட்டத்திற்கு, சில மாதங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டு, தற்போதுவரை எந்தவித மேம்பாடு இல்லாத திடலில்தான் இயங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் தொடங்கவுள்ளது. அதற்குள், வாரசந்தையை, மேடாக்கி அல்லது, சிமெண்ட் தரை மற்றும் நிழல் பந்தலை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகதிற்கு, மாவட்ட நிர்வாகம் அழுத்தம் தரவேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×