search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம்
    X

    கோப்பு படம்.

    பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம்

    • காங்கிரஸ் வலியுறுத்தல்
    • அரசு பள்ளி கல்வியை மேம்படுத்த முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எ.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு பள்ளிகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடங்களை கற்றுத்தரும் அளவிற்கு ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளதா.?அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்தை பின்பற்றக்கூடிய அளவிற்கு வசதிகள், சோதனைக்கூடங்கள், கற்றல் கருவிகள் இருக்கிறதா.?

    மேலும் ஆங்கிலம் வழியில் படிப்பது கடினமாக இருக்கும். எனவே, பயிற்சி மொழியை தமிழாக வைக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    புதுவையில் பள்ளிக்கல்வி மிகவும் சோதனையான காலக்கட்டத்தில் உள்ளது. எனவே அரசு பள்ளி கல்வியை மேம்படுத்த முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

    பெரிய மார்க்கெட்டை இடித்து புதிய கட்டிடம் கட்டுவது சிறு வணிகர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பெரிய மார்க்கெட்டை தற்காலிகமாக பழைய சிறைச்சாலை வளாகத்துக்கு மாற்றி படிப்படியாக கட்டலாம்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் இடமாற்றத்தின் மூலம் மறுபடியும் பெரிய தாக்கத்திற்கு ஆளாக்கினால் அழிந்து போகும் நிலை ஏற்படும். எனவே இடமாற்றம் முதல் மீண்டும் கடைகளை கட்டி ஒப்படைக்கும் காலம் வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×