search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற வாலிபர்களையும், அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

    • இந்த கஞ்சா பொட்டலங்களை கல்லூரி -பள்ளி மாணவர்க ளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
    • புதுவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அைடத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி உத்தர வின்படி திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கலிதீர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓட முயற்சி செய்தனர்.

    இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களது சட்டை பையில் சோதனை நடத்திய போது

    அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா பொட்டலங்களை கல்லூரி -பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

    கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் திருபுவனை, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தாமு என்ற தாமோதரன் (23), விருத்தாசலம் பகுதியை சேர்ந்த விஷ்வா (21), கோலியனூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அவர்களை புதுவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    கைதுசெய்யப்பட்ட 3 பேரில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×