search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாரச்சந்தையை அடிப்படை வசதிகளுடன் சீரமைக்க வேண்டும்
    X

    மதகடிப்பட்டு வாரச்சந்தையில் நடைபெறும் இடத்தில் யானை பள்ளத்தில் சந்தையின் அடிப்படை வசதிகள் இல்லாத காட்சி.

    வாரச்சந்தையை அடிப்படை வசதிகளுடன் சீரமைக்க வேண்டும்

    • வியாபாரிகள்,பொதுமக்கள் கோரிக்கை
    • மாட்டு சந்தையில் தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், மதகடிப்பட்டில் வார மாட்டு சந்தை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

    செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தையில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இந்த சந்தையில் கூடி மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், தங்களின் விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த மாட்டு சந்தையில் தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

    மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக சந்தை காட்சியளிப்பது வழக்கமாக உள்ளது. மேலும் வெயில் காலங்களில் வெட்ட வெளியில் வியாபாரம் நடைபெறுவதால் பொது மக்கள் மிகவும் சிரமத்துடன் வந்து செல்கின்றனர்.

    அதோடு குடிநீர், கழிவறை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. வியாபாரிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தை வைத்து அதிநவீன கட்டமைப்பை இந்த சந்தை யில் உருவாக்க முடியும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    வருடத்திற்கு 5 லட்சம் முதல் 21 லட்சம் வரை ஏலத்தில் எடுக்கப்படும் இந்த வார சந்தையை தனியார் நிர்வாகித்து வருவதால், அரசு இந்த சந்தையினை கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×