என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உழவர்கரை தொகுதி அ.ம.மு.க.  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா பேசிய காட்சி.

    உழவர்கரை தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • இணைச்செயலாளர் லாவண்யா தலைமையில் நடந்தது
    • பெண்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது குறித்து பேசினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி. சேகர் அறிவுறுத்தலின்படி உழவர்கரை தொகுதி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜெயா நகரில் நடந்தது.

    வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் இணைச்செய லாளர் லாவண்யா பேசும்போது, உழவர்கரை தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், தொகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் நியமிப்பது, பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரன் அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது, தலைமை அறிவுறுத்தலின்படி பெண்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மேல் அமைப்பு பிரதிநிதி லூர்துசாமி, தொகுதி துணைச் செயலாளர் ழில்பேர் மற்றும் சுப்பிரமணி, சூசைராணி, சூசை, ஜாக்குலின்மேரி, உமா, ரோஸ்லின், கவிதா, எலன்செல்வராணி, இந்துமதி, இன்பம், சந்திரா, சரளா, உமா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×