search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூர் மணவெளியில் புதிய ஆழ்துளை கிணறு
    X

     புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்த காட்சி.

    வில்லியனூர் மணவெளியில் புதிய ஆழ்துளை கிணறு

    • எதிர்கட்சி தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார்
    • ரூ. 12 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மணவௌி பஞ்சாயத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து மணவௌி ஒதியம்பட்டு, வெங்கடேஸ்வரா நகர், தண்டுக்கரை வீதி, மல்லிகை நகர் உள்ளிட்ட பலவேறு பகுதிகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் மணவௌி பஞ்சாயத்தில் புதியதாக மனைப்பிரிவுகள் உருவானதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து தொகுதி

    எம்.எல்.ஏ. சிவா கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அதனடிப்படை யில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுப் பணித்துறையின் பொது சுகாதார கோட்டத்தின் மூலம் ரூ. 12 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது.

    இந்த பணிக்கான பூமி பூஜை விழா வெங்க டேஷ்வரா நகரில் நடந்தது. எதிர்கட்சித் தலைவர் சிவா பூமி பூஜை செய்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்த புதிய ஆழ்துளை கிணறு மூலம் ஒதியம்பட்டு, வெங்கடேஷ்வரா நகர், அன்னை இந்திரா நகர், மகாசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.

    விழாவில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறு முகம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் முருகாணந்தம், உதவிப் பொறியாளர் வாசு, இளநிலைப் பொறியாளர் ஞானவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×