என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drivers Welfare Association"

    • பா.ஜனதா பொருப்பாளரும், கூட்டுறவு பிரிவு தலைவரு மான வெற்றிச்செல்வம் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
    • துணை செயலாளராக பிரபாகரன் மற்றும் துணை பொருளாளராக ரகு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை மற்றும் தீயணைப்பு நிலையம் அருகே பிரதமர் மோடி ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் திறப்புவிழா நடந்தது.

    பா.ஜனதா கட்சியின் நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ., மற்றும் உப்பளம் தொகுதி பா.ஜனதா பொருப்பாளரும், கூட்டுறவு பிரிவு தலைவருமான வெற்றிச்செல்வம் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு உப்பளம் தொகுதி பா.ஜனதா தலை வர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக ஆரோக்கிய சாமி, செயலாளராக இமான் என்ற இமானுவேல், பொரு ளாளராக இஸ்ரோ என்ற இஸ்ரவேல், துணை தலைவராக ராஜவேல், துணை செயலாளராக பிரபாகரன் மற்றும் துணை பொருளாளராக ரகு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் தெய்வநாயகம், அற்புதழகன், இன்பசேகர், குமார், ரஞ்சித், அஜித், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×