என் மலர்
புதுச்சேரி

மின்துறை செயற்பொறியாளரிடம் தி.மு.க.வினர் மனு அளித்த காட்சி.
நெல்லித்தோப்பு தொகுதிக்கு தடையற்ற மின்சாரம்
- மின்துறை செயற்பொறியாளரிடம் தி.மு.க. மனு
- பொது மக்களின் நலன் கருதி சிரமத்தை போக்குகின்ற வகையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஆவண செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லிதோப்பு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் மின்துறை செயற்பொறியாளர் கனி அமுதனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட குயவர்பாளையம், அண்ணாநகர், கே. சி. நகர், திருமால் நகர், டி. ஆர். நகர், வேல்முருகன் நகர், சத்யாநகர், சக்தி நகர், வெண்ணிலா நகர், ராஜயர் தோட்டம், கண்ணைய தோட்டம், நவீனா கார்டன், வாசுகி நகர், பிள்ளைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. இது அறிவிக்கப்படாத மின்தடையாக உள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள், வணிகப் பெருமக்கள் மிகுந்த சிரமத்துக்குளாகிறார்கள். பொது மக்களின் நலன் கருதி சிரமத்தை போக்குகின்ற வகையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ், தொகுதி தி.மு.க. செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், ஐடி விங் அருண், தொகுதி துணை செயலாளர் கிருபாகரன், வக்கீல் ஞானராஜ், தொகுதி நிர்வாகிகள் ஜெகதீசன், ரமேஷ், செல்வகுமார், பரத், ஞானவேல், பிரான்சிஸ், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.






