என் மலர்
புதுச்சேரி
- எதிர்க்கட்சி தலைவர் சிவா திறந்து வைத்தார்
- தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தை வில்லியனூர் ஆனந்த ராஜா திருமண நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது.
சுயஉதவி குழுவினரின் பொருளாதார மேம் பாட்டுக்கும், சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நுகர்வோரிடம் நேரடியாக விற்கப்பட்டு வருகிறது. வில்லியனூர் வட்டார வளர்ச்சி முகமை மூலம் கடந்த ஆண்டு தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை 3 நாட்கள் நடத்தப்பட்டு ரூ.9.5 லட்சம் வசூல் ஈட்டியது.
இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தை வில்லியனூர் ஆனந்த ராஜா திருமண நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.63 லட்சம் கடன் உதவிக்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குநர் சத்தியமூர்த்தி, திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி மற்றும் விரிவாக்க அதிகாரிகள், கிராம சேவக்குக்கள், சேவக்குகள்,
வில்லியனூர் வட்டார அளவிலான கூட்டமைப்பின் பொறுப்பா ளர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், அயலக அணி துணை அமைப்பாளர் பக்ருதீன், முன்னாள் தொகுதி துணைச் செயலாளர் அங்காளன், ராஜி, திலகர், சரவணன், சுரேஷ், பரதன், நடராஜன், யோகானந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- புதுவை அரசின் தொழில் துறையும் சுற்றுப்புறச் சூழல் துறையும் தவறியுள்ளன.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படாமல் நிகழ்ந்த தீ விபத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர்க்கொல்லி தொழிற்சாலையை மக்கள் அருகில் வாழும் இடத்தில் அமைக்க உத்தரவு கொடுத்த அரசுதான் இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
இங்கு பாதுகாப்பு முறைகளை உறுதிப்படுத்த புதுவை அரசின் தொழில் துறையும் சுற்றுப்புறச் சூழல் துறையும் தவறியுள்ளன.
ரசாயன தொழிற்சாலை கள் புதுவையின் சாபக்கேடுகளாக மாறி உள்ளன. இவற்றை தடுத்து மக்களின் முன்னேற்றத்தை பாதுகாக்க முதல்- அமைச்சருக்கும், தொழில்துறை அமைச்ச ருக்கும், அதிகாரிகளுக்கும் எந்த அக்கறையும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.
இந்திய அரசு நிர்ணயித்துள்ள அனைத்து பாதுகாப்பு முறைகளையும் செய்த பிறகு தான் தொழிற்சாலை திறப்பதற்கான உத்தரவை அளிக்க வேண்டும். தொழிற்சாலை திறக்கும் வரை அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பா.ஜனதா முன்னாள் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
- டெங்கு மற்றும் பல்வேறு நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
மழைக்காலத்தை முன்னிட்டு பல்வேறு நோய்கள் பரவாமல் இருக்க பிம்ஸ் மருத்துவமனையும் சாமிநாதா வித்யாலயாவும் இணைந்து பொது மருத்துவ முகாமை நடத்தியது.
முகாமை முன்னாள் பா.ஜனதா மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் அனிச்சங்குப்பம், முதலியார் குப்பம் புத்துப்பட்டு, பெரிய கொழுவாரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் டெங்கு மற்றும் பல்வேறு நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பிம்ஸ் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நோய்க்கு தகுந்தார் போல் சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் சிறப்பு மருத்துவர் டாக்டர் அஸ்வினி, இ.என்.டி டாக்டர் கிருஷ்ண குமார் மற்றும் மாலதி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
- காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார்
- போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்
புதுச்சேரி:
காரைக்காலில் சாலை யில் கிடந்த ரூபாய் 2000 பணத்தை பள்ளி சிறுமி உரியவரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா (வயது7) தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரம் 2000 ரூபாய் (4-500 நோட்டு கள்) கிடந்ததை கண்ணெடுத் துள்ளார். அச்சமயம் அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி குமாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.
பணத்தை தவறவிட்டவர் அங்கு தேடி கொண்டு வந்த போது, அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்து அவரது பணம் தான் என்பதை உறுதி செய்த பின்னர், அந்தப் பணத்தை கொண்டு வந்து கொடுத்த சிறுமியிடம் கொடுத்து பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் செலவுக்கு அதிக மாக பணம் உள்ள சூழ்நிலை யில், பணத்திற்கு ஆசைப் படாமல் அப்பணத்தை உரியவரிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிறுமிக்கு விதைத்த பெற்றோர்க ளையும், சிறுமியையும் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்
- நுண்ணுயிர்கள் பெருக்கத்தால் இந்த மாற்றம் ஏற்படுவதாக ஏற்கனவே கடல் ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார்.
- அரசு முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கடல்பகுதி கடந்த 2 தினங்களாக அலை சீற்றத்துடன் காணப்பட்டது.
புதுவை பழைய சாராய ஆலை முதல் வைத்திக்குப்பம் மாசிமக திடல் வரை ஒரு கி.மீ. நீளத்துக்கு கடல் நீர் மீண்டும் செந்நிறமாக காட்சி அளிக்கிறது.
இதை சுற்றுலா பயணிக ளும், உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.
4-வது முறையாக புதுவை கடல் செந்நிறமாக காட்சி அளிக்கிறது.
ஏற்கனவே கடந்த மாதம் 17-ந் தேதி முதல்முறையாகவும், 19-ந் தேதி 2-வது முறையாகவும், கடந்த 1-ந் தேதி 3-வது முறையாகவும் கடல் செந்நிறமாக காட்சியளித்தது.
இந்நிலையில் இன்று 4-வது முறையாக கடல் செந்நிறமாக மாறியது.
கடலில் ஏற்பட்டுள்ள நுண்ணுயிர்கள் பெருக்கத்தால் இந்த மாற்றம் ஏற்படுவதாக ஏற்கனவே கடல் ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் புதுவையில் அடிக்கடி கடல் நீர் செந்நிறமாக மாறும் சம்பவம் மீனவர்கள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. கடும் தாக்கு
- முதல்-அமைச்சர் நாராயணசாமி பா.ஜனதா அரசுதான் அதற்கு அனுமதி கொடுத்தது என கூறியிருப்பது முழு பொய் அதிலும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
புதுச்சேரி:
புதுச்சேரி பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
பா.ஜனதா அரசுதான் காலாப்பட்டு மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
காலாப்பட்டு தொழிற்சாலையில் இதற்கு முன்பும் காங்கிரஸ் ஆட்சி காலங்களில் விபத்துகள் நடந்துள்ளன. சுற்று சூழல் மாசு கெடுவதாக சொல்லி அந்தப் பகுதி மக்கள் அப்போதும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர்.
காலாப்பட்டு தொழிற்சாலை 1986-ல் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த பரூக் மரைக்காயர் காலத்தி ல்தான் தொடங்கப்பட்டது.
ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பதால், காங்கிரஸ் தொழிற்சங்கவாதிகள் இந்த ஒரு தொழிற்சாலையை மட்டும். பொன் முட்டையிடும் வாத்து போல பார்த்து வந்தனர்.
பரூக் மரைக்காயர் காலாப்பட்டு தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அவர் முதல்வராகவும் இருந்ததால், எளிதாக இந்த தொழிற்சாலை அந்த காலத்தில் புதுச்சேரிக்குள் நுழைந்துவிட்டது.
நிலைமை இப்படி இருக்க வாய்புளித்ததோ வார்த்தை புளித்ததோ என்று தெரியாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பா.ஜனதா அரசுதான் அதற்கு அனுமதி கொடுத்தது என கூறியிருப்பது முழு பொய் அதிலும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
நாங்கள் சொல்வது தவறு என நாராயணசாமி கூற விரும்பினால், இந்திய கம்பனி சட்டங்களின் இணையதளத்திற்கு சென்று அந்த தொழிற்சாலை எப்படி உருவானது, அது புதுச்சேரியில் எப்படி கால் பதித்தது என்ற வரலாறு களை தெரிந்துகொள்ளட்டும்.
நாட்டை தலைநிமிரச் செய்த பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி செய்யும் பா.ஜனதா கட்சியின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்கு நாராயண சாமிக்கு வேறு காரணங்கள் கிடைக்க வில்லை.
அதனால் இந்த சம்பவத்தை அரசியலாக்கி வரும் எம்.பி. தேர்தலில் ஆதாயம் தேட பார்க்கிறார்.
அவர் எவ்வாறு முயற்சித்தாலும் பா.ஜ.க.வின் புகழையோ, அது நாட்டு மக்களுடன் கொண்டுள்ள தொடர்பையோ ஒரு நூலிழை கூட பிரித்துவிட முடியாது. காலாப்பட்டு தொழிற்சாலை விபத்து சம்பந்தமாக உயர்மட்ட விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்ப ட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசும், கவர்னரும் இந்த விஷயத்தில் மிக விரைவான நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.
தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், குட்டையை குழப்பி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என நாராயணசாமியை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கென்னடி எம்.எல்.ஏ. டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை போலீஸ் டி.ஜிபி., ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி நகரப் பகு தியில் கஞ்சா, போதை மாத்திரை, ஊசி போன்றவை எளிதாக கிடைக்கின்றன.
இது மிகவும் கவலைக்குரியது. இளைஞர்கள் பொது இடங்களில் வெளிப்படையாக போதைப்பொருள் உட் கொள்கிறார்கள்.
போலீஸ் நிலையத்தில் லஞ்ச, லாவண்யம் அதிகமாகிவிட்டது. உப்பளம் தொகுதியில் கல்லறை சுடுகாடு, சன்னியாசி தோப்பு, ஆகிய ஆகிய இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
ஒதியஞ்சாலை, முதலியார்பேட்டை போலீஸ் நிலைய அதிகாரிகளை மாற்ற வேண்டும். இல் ையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத் தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட டி.ஜி.பி., ஸ்ரீனி வாஸ், இது குறித்து 15 நாட் களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
- அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது47). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமாறன் தான் பழகி வந்த பெண்ணின் மூத்த மகளான கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். இதனை மாணவி கண்டித்து தனது தாயிடம் முறையிட்டார்.
இந்நிலையில் மணிமாறன் 2-வது முறையாக அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.
- திருமண வரன் பார்த்து தருவதாகவும் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது.
- தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் ஆன்லைன் மூலம் ரூ.2 கோடியே 86 லட்சத்து 23 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
பணத்தை இழந்தவர்களில் பெரும்பாலானோ ர் டாக்டர்கள், என்ஜினீயர்கள் தான். மோசடிக்காரர்கள் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும், ஆன்லைனில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், மற்றும் ஆண்களை மயக்கும் வசீகர குரலில் பெண்கள் நூதனமாக பேசியும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். திருமண வரன் பார்த்து தருவதாகவும் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது.
தற்போது புதிய வகையாக தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
ஆன்லைன் மோசடியை தடுக்க போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை தடுக்க முடியவில்லை. பேராசை மற்றும் சபலத்தால் மோசடி அதிகரித்துதான் வருகிறது. சொகுசு கார் பரிசு விழுந்ததாக விவசாயி ஒருவரிடம் ரூ.17 லட்சம் பறித்துள்ளனர்.
ஆன்லைன் மோசடியை தடுப்பது குறித்து புதுவை டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் கூறியிருப்பதாவது:-
இணையதள மோசடியில் பணத்தை இழந்தால் உடனே புகார் செய்தால் மட்டுமே பணத்தை மீட்க முடியும். காலதாமதம் ஏற்பட்டால் மோசடிக்காரர்கள் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மற்ற கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்.
அவ்வாறு செய்து விட்டால் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வது மிகவும் கடினம். நாம் நடவடிக்கை எடுக்கும் போது அவர்களது வங்கி கணக்கை முடக்குவதன் மூலம் பணத்தை மீட்க முடியும்.
சைபர் கிரைம் செல் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த பொதுமக்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சைபர் கிரைம் செல் உள்ளது.
எனவே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கூட புகார் செய்யலாம். பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியற்கள் கலந்துக்கொண்டனர்.
- 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா "டெக்னோவேஷன் 2023" என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியற்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மயிலம் பொறியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் மருத்துவர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இன் செயல் இயக்குனர் அருண்ராஜ் கலந்துக்கொண்டு இந்திய ஆட்சிப்பணி குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தும் விரிவாக பேசினார்.
போட்டியில் சிறந்து விளங்கிய முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
முடிவில் கணினி பொறியியல் துறைத் தலைவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பிரியாராதிகாதேவி நன்றி கூறினார்.
- கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் நலச்சங்கத்தின் விதிமீறல் குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
- தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் அதிருப்தி ஆளர்கள் சார்பில் கேப்டன் பரமசிவம் தலைமையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வருகிற 11-ந் தேதி சங்க தேர்தலை நிறுத்த வேண்டும். புதிய உறுப்பினர்களை பதிந்து பழைய உறுப்பினர்கள் இன்று வரை சந்தா செலுத்த செய்தும் முறைபடி தேர்தல் வாக்களர் பட்டியல் வெளியிட்டு வேட்புமனுவை பெற்று தேவையான அவகாசத்திற்கு பிறகே தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் நலச்சங்கத்தின் விதிமீறல் குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த சந்திப்பின் போது முன்னாள் தலைவர் கனகராஜ், முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதி குமார், கலியபெருமாள், ரங்கநாதன், ராஜா, ஜாபர், மற்றும் முன்னாள் ராணுவ வீரரும் தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
- ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே , காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆனந்தா நகர், கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.
இதே போல் கோரிமேடு அரசு மருந்தகம் உட்புறம் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று கால ை 10 மணி முதல் மால ை 5.30 மணி வரை போலீஸ் குடியிருப்பு, சிவாஜி நகர், இந்திராநகர் விரிவு, இலுப்பை தோப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






