search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா
    X

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா நடந்த போது எடுத்த படம்.

    தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா

    • தமிழ்நாடில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியற்கள் கலந்துக்கொண்டனர்.
    • 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா "டெக்னோவேஷன் 2023" என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியற்கள் கலந்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மயிலம் பொறியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் மருத்துவர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இன் செயல் இயக்குனர் அருண்ராஜ் கலந்துக்கொண்டு இந்திய ஆட்சிப்பணி குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தும் விரிவாக பேசினார்.

    போட்டியில் சிறந்து விளங்கிய முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    முடிவில் கணினி பொறியியல் துறைத் தலைவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பிரியாராதிகாதேவி நன்றி கூறினார்.

    Next Story
    ×