search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காலாப்பட்டு தொழிற்சாலையை திறக்கும் வரை தொழிலாளர்களுக்கு சம்பளம்
    X

    கோப்பு படம்.

    காலாப்பட்டு தொழிற்சாலையை திறக்கும் வரை தொழிலாளர்களுக்கு சம்பளம்

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
    • புதுவை அரசின் தொழில் துறையும் சுற்றுப்புறச் சூழல் துறையும் தவறியுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படாமல் நிகழ்ந்த தீ விபத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர்க்கொல்லி தொழிற்சாலையை மக்கள் அருகில் வாழும் இடத்தில் அமைக்க உத்தரவு கொடுத்த அரசுதான் இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

    இங்கு பாதுகாப்பு முறைகளை உறுதிப்படுத்த புதுவை அரசின் தொழில் துறையும் சுற்றுப்புறச் சூழல் துறையும் தவறியுள்ளன.

    ரசாயன தொழிற்சாலை கள் புதுவையின் சாபக்கேடுகளாக மாறி உள்ளன. இவற்றை தடுத்து மக்களின் முன்னேற்றத்தை பாதுகாக்க முதல்- அமைச்சருக்கும், தொழில்துறை அமைச்ச ருக்கும், அதிகாரிகளுக்கும் எந்த அக்கறையும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

    இந்திய அரசு நிர்ணயித்துள்ள அனைத்து பாதுகாப்பு முறைகளையும் செய்த பிறகு தான் தொழிற்சாலை திறப்பதற்கான உத்தரவை அளிக்க வேண்டும். தொழிற்சாலை திறக்கும் வரை அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×