என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது சுகாதார துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று குறைந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவின் 2-வது அலைவீச தொடங்கி இருப்பதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தேசிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
அடுத்து வரும் 28 நாட்கள் மிக முக்கியமானவை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளக கொரோனா தொற்று குறைந்தே காணப்பட்டது. தினமும் 10 அல்லது 15 பேருக்கு மட்டுமே தொற்று அறிகுறி கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் தற்போது திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது சுகாதார துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 214 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 781 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதில் 15 ஆயிரத்து 449 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். 57 பேர் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்து 98 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனை குறைக்கப்பட்டதால்தான் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தவிர்த்து மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலவரங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அன்னை சிவகாமி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
தளவாய்புரம்:
சேத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அன்னை சிவகாமி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகர பிரபு தலைமையில் 12 மருத்துவர்கள், 50 செவிலியர்கள் அடங்கிய குழுவினரால் நடத்தப்பட்டது.
முகாமில் தைராய்டு, சர்க்கரை நோய், தொழுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில் 432 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 27), பூ வியாபாரி. இவர் துலுக்கன்குறிச்சி அருகே பூ வியாபாரம் முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் மல்லிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேனும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செந்தில்குமாரின் உறவினர் முத்துராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த மாரிமுத்துவை (45) கைது செய்தார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் இ-சேவை மையங்களை முறையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:
தமிழக அரசு பொது மக்கள் நலன் கருதி அரசு துறைகளிலிருந்து பல்வேறு சேவைகளை எளிதில் பெற்றிட சேவை மையங்களை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மூலம் இந்த சேவை மையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களில் பொது இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஏழை, எளிய மக்களும் எளிதில் அரசு துறை சேவைகளை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் துறையில் பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், சமூக நலத்துறையில் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கவும், ஓய்வூதியம் பெறுபவர்கள் சான்றிதழை அனுப்பி வைக்கவும், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.
அதிலும் குறிப்பாக ஆதார் அட்டை பெறுவதற்கு இ-சேவை மையங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்தநிலையில் சமீபகாலமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இ-சேவை மையங்கள் முடக்கம் அடைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள், கூட்டுறவுத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வந்த இ-சேவை மையங்கள் முடக்கம் அடைந்துள்ளன.
விருதுநகரில் கந்தபுரம் தெருவில் கடந்த 3 மாதங்களாக கூட்டுறவுத்துறை சார்பில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம் முடக்கம் அடைந்துள்ளது.
தனியார் சேவை மையங்களுக்கு சென்றால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் முடங்கியுள்ளதால் குறைதீர்க்கும் நாள் அன்று மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் பொது இ-சேவை மையங்களை முறையாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதிலும் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் செயல்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
விருதுநகர் அருகே 35 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள குமாரபுரத்தில் பாண்டியன்நகர் போலீசார் ரோந்து சென்ற போது அல்லம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 34), என்பவர் 35 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரமேசை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.52 ஆயிரத்து 300 ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தில் தொகுதி மேம்பாட்டு திட்ட பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்:
மத்திய, மாநில அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்து வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.5 கோடியும், தமிழக அரசு ரூ.2½ கோடியும் ஒதுக்கீடு செய்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்து விட்ட நிலையில் தமிழக அரசு இதை தொடர்ந்து ஒதுக்கீடு செய்து வருகிறது.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மக்களின் கோரிக்கை அடிப்படையில் தேவைக்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் திட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதற்கான நிதி ஒதுக்கீடு ஊரக வளர்ச்சி முகமை மூலம் செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அரசுத்துறைகளுக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகள் இன்னும் முடிவடையாத நிலை உள்ளது. உலக வளர்ச்சி முகமை இதனை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காததால் அரசு துறைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் திட்டப்பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்காமல் தாமதப்படுத்தும் நிலை தொடர்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
விருதுநகரில் பெருமாள் கோவில் தெருவில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இந்த பணி இன்னும் தொடங்கப்படாத நிலையே நீடிக்கிறது.
வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு திட்ட பணியை நிறைவேற்ற வேண்டிய நிலையில் 3 துறையினரும் ஒவ்வொரு காலகட்டத்தில் திட்டப் பணியை தொடங்குவதற்கு தடையாக இருந்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் இதற்கான நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதேநிலையில் மேலும் பல்வேறு திட்ட பணிகள் முடங்கியுள்ள நிலையில் உள்ளன.
எனவே மாவட்ட நிர்வாகம் கடந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் முடிவடையாத நிலையில் உள்ள திட்டப்பணிகளை கண்டறிந்து அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
திட்டப்பணிகள் தாமதமாகும் பட்சத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
சிவகாசியில் 5-வது நாளாக மழை பெய்தது. இதில் 21 குடிசை வீடுகள் இடிந்து நாசமானது. இவர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நிவாரணம் வழங்கினர்.
சிவகாசி:
சிவகாசி பகுதியில் நேற்று 5-வது நாளாக மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் இருந்த குடிசை வீடுகள் இடிந்து விழ தொடங்கியது. சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட அதிவீரன்பட்டியில் 5 குடிசை வீடுகளும், கொங்கலாபுரம், ஏ.மீனாட்சிபுரம், ஆனைகுட்டம், அனுப்பன் குளம் ஆகிய பகுதியில் தலா 1 குடிசை வீடுகள் என மொத்தம் 10 குடிசை வீடுகள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் வெங்கடேஷ் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்றார். இதேபோல் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு திருத்தங்கல், விளாம்பட்டி, மாரனேரி, விஸ்வநத்தம் ஆகிய கிராமங்களில் 11 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டது. வட்ட வழங்கல் பிரிவு சார்பில் அரிசி, மண்எண்ணெய், வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன. இது குறித்து தாசில்தார் வெங்கடேசன் கூறியதாவது:-
சிவகாசி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் இதுவரை 21 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. வீடு இழந்து தவித்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
தாலுகா முழுவதும் உள்ள கண்மாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி செங்கமலப்பட்டி கண்மாய் முழுவதுமாக நிரம்பி உள்ளது. அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் வாடியூர் கண்மாய்க்கு செல்கிறது. திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் 60 சதவீதமும், உறிஞ்சுக்குளம் கண்மாய் 70 சதவீதமும் நிரம்பி உள்ளது. சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அவரது தோழி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே உள்ள காந்திநகர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி ஜெயரூபா (வயது 33). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குழந்தைகளுடன் தனியாக இருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜெயரூபாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வாயை பிளாஸ்ட்டால் ஒட்டி, கட்டி போட்டனர். பின்னர் ஜெயரூபாவின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகை என மொத்தம் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ஜெய ரூபா அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா தலைமையில் தவமணி, பாலமுருகன், ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் விளக்கு நான்கு வழிச்சாலை அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அருப்புக் கோட்டையை சேர்ந்த பொன்ராஜ் மனைவி முத்துச்செல்வி (26), அருப்புக்கோட்டை நேரு மைதானத்தை சேர்ந்த கணேஷ் குமார் (24), வெள்ளைக் கோட்டை பகுதியை சேர்ந்த அருண் பாண்டி (24), பரவையை சேர்ந்த ஹரிஹரன் (20), அபிராமத்தை சேர்ந்த சோலைசாமி (26) ஆகியோர் என்பதும், ஜெயரூபாவை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் கணேஷ் குமாரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறி முத்துச்செல்வியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தனது தோழியான ஜெயரூபாவின் வீட்டில் நகைகள் இருப்பதாகவும், அவர் தனியாக இருக்கும் போது கொள்ளையடித்து செல்லலாம் எனவும் முத்துசெல்வி தெரிவித்துள்ளார். அதன்படி கணேஷ்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு சென்று ஜெயரூபாவை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
சாத்தூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே என்.வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து (வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் தம்பி திருமணத்திற்கு செல்ல பணம் கேட்டுள்ளார். மனைவி பணம் தராததால் கோபத்தில் வீட்டில் தனிமையில் இருந்த ஜோதிமுத்துசேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கிய மற்றொருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் செண்பக தோப்பு பகுதி உள்ளது. இங்குள்ள நீரோடைகள் மற்றும் அருவிகளுக்கு ஏராளமானோர் குளிக்கச் செல்வார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
கண்மாய் மடை திறக்கப்பட்டதால் அதிகளவு தண்ணீர் வெளியேறி மீன் வெட்டி அருவி, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 22), முத்து ஈஸ்வரன் (21), கோபி (22), சசிகுமார், சத்தியபிரகாஷ் ஆகியோர் செண்பகதோப்பு பேய்மடை ஓடையில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதில் பால்பாண்டி, கோபி, முத்து ஈஸ்வரன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் வேகமாக கரையேறி உயிர் தப்பினார்கள். இதுகுறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு, மீட்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று 2-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. இதில் பால்பாண்டி, முத்து ஈஸ்வரன் ஆகியோர் பிணமாக கரை ஒதுங்கினார்கள். அவர்கள் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய கோபி கதி என்ன என்று தெரியவில்லை? அவரை தீயணைப்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
பலியான நண்பர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு உள்ள நில அளவை பிரிவு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தலைமை சர்வேயர் பாலசுப்ரமணியன் மற்றும் 7 பேர் இருந்தனர். அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. அலுவலகத்தில் ஊழியர் அல்லாத சிவகாசியை சேர்ந்த பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோரும் இருந்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில் பொன்ராஜிடம் 57 ஆயிரம் இருந்தது. இவை அனைத்தும் ரூ.2 ஆயிரம், ரூ 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
இதேபோல் ஆறுமுகத்திடம் ரூ. 39 ஆயிரம் இருந்தது. இதில் ரூ 26 ஆயிரத்து 500 ரூபாய் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட அதற்கான ரசீது இருந்தது. மீதமுள்ள பணம் 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கு உரிய கணக்கில்லை.

சிவகாசி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் போதிய வாருகால் இல்லாததால் தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது.
சிவகாசி:
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் சிவகாசி, திருத்தங்கல் நகரங்களிலும் மற்றும் ஊரக பகுதியிலும் மழை நீர் பல இடங்களில் தேங்கி கிடந்தது.
இதனால் அந்த பகுதிகளை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அதிலும் குறிப்பாக சிவகாசி பஸ் நிலையத்தில் மழைநீர் தெப்பம் போல் தேங்கி இருந்ததால் பஸ் நிலையத்துக்குள் வந்த பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். அம்மா குடிநீர் விற்பனை நிலையம் அருகில் தண்ணீர் தேங்கி இருந்ததால் மதுரை செல்லும் பஸ்சில் செல்ல வந்த பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள சாலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிதாக போடப்பட்டது. இதனால் அந்த பகுதி உயரமாக மாறியது. சாலையில் கொட்டிய மழை நீர் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் வந்து தேங்கி உள்ளது. பஸ் நிலையம் மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைநீர் தேங்கி, தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது. பஸ் நிலையத்தில் இருந்து மழைநீர் வெளியேற போதிய வாருகால் வசதி இல்லாதது தான் காரணம்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கவிதா நகரில் மழைநீர் தேங்கி இருப்பதாக தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து பழைய தாயில்பட்டி சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தனர்.
இதே போல் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஜக்கம்மாள் கோவில் அருகில் பழுதாகி உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இங்குள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருக்கும் போது பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி பள்ளத்தில் விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.