என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
விருதுநகர் கிழக்கு போலீசார் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் அவர்களை பார்த்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து நீளமான வாள் கைப்பற்றப்பட்டது.
தனது தரப்பை சேர்ந்த சண்முகராஜாவை கொலை செய்ததற்காக எதிர் தரப்பை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் கோஷ்டியில் ஒருவரை தீர்த்துக்கட்ட வாளுடன் வந்ததாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சரவணக் குமார் என்ற பூச்சி (வயது 23). விருதை மாரி நகரைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.
இதேபோல் எம்.ரெட்டியபட்டி பகுதியில் ஆயுதங்களுடன் நின்ற வீரவிக்னேஷ் (28), பரமசிவம் என்ற அஜித் (19), செந்தில்குமார் (26) ஆகிய 3 ரவுடிகளை சாத்தூர் போலசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பூசாரி வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு செண்பகதோப்பு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆராய்ச்சிப்பட்டி ராமசாமி, ஏ.முத்துக்குமார், மம்சாபுரம் செந்தில், விக்டர் ஆகியோர் ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அவர்கள் பூசாரியை தாக்கிவிட்டு கோவிலுக்குள் சென்று அங்கிருந்த போத்திராஜா மற்றும் பூதத்தார், திரவுபதி அம்மன் பீடங்களை சேதப்படுத்தியதோடு, அவற்றின் அடியில் இருந்த நவரத்தினங்களையும் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கோவில் பரம்பரை அறங்காவலர் செல்வராஜ் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி காரனேசன் பகுதியில் உள்ள நகராட்சி கழிப்பிடம் அருகில் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், கருப்பசாமியிடம் விசாரணை நடத்திய போது கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதே போல் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் பராசக்தி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த பால் என்கிற பால்ராஜ் (65) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி தாயுடன் வசித்து வருகிறார்.
இவர் பள்ளியில் படிக்கும் போது ஆத்திக்குளத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காதலன் கேட்டுகொண்டதற்கிணங்க செல்போனில் தனது படங்களை மாணவி அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து தெரியவந்ததும் மாணவியை தாய் கண்டித்தார். சரவணனை சந்திக்க வேண்டாம் என எச்சரித்தார். ஆனால் டைப் ரைட்டிங் வகுப்புக்கு சென்ற மாணவி சரவணனை சந்தித்து வந்துள்ளார்.
கடந்த 19-ந்தேதி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் டைப்ரைட்டிங் தேர்வு நடந்துள்ளது. இதில் மாணவி பங்கேற்றார்.
அப்போது அங்கு சரவணன் வந்துள்ளார். அவர் மாணவியை ஆத்திக்குளத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு பலமுறை மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் சரவணன் திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சரவணன் திடீரென மாயமாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






