search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ராஜபாளையம் அருகே ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 750 கிடங்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லும் முடிவை மாநில அரசு கை விட வேண்டும்.

    44 தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு 4 தொகுப்பாக மாற்றியதை கண்டிப்பது, 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க பொருளாளர் சங்கரி, கன்வீனர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×