என் மலர்
விருதுநகர்
- காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிக்குண்டு வைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதுரகிரி (20). இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் ஆகட்டும் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சதுரகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவராமன் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு சம்மதம் கேட்டபோது, பெற்றோர்கள் கடன்களை அடைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிவராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனைஸ்தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி முதல் 30-ந் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்களும் மூடப்படும்.
விருதுநகர்:
மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனைஸ்தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோன்று பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி முதல் 30-ந் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
- பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது.
- சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
சிவகாசி :
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 1,070-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கு தேவையான பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணர்ந்த சில வடமாநில பட்டாசு வியாபாரிகள் முன் கூட்டியே சிவகாசியில் உள்ள ஆலைகளில் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதனால் வடமாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முழுமையாக அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததை போலவே பட்டாசு விற்பனை அதிகமாக இருந்ததால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வத்திராயிருப்பு அருகே தந்தை கொலைக்கு பழி வாங்கிய மகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
- இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகன் கடந்த மார்ச் மாதம் கொலை செய்தார். பின்பு முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வந்தவர் தலைமறைவாக இருந்தார்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊரான அர்ச்சுனா புரத்திற்கு முருகன் வந்தார். அவரை கொலையுண்ட மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார்(வயது24),
பேச்சியப்பன்(27), முத்துக்குமார்(20) வத்திராயிருப்பதை சேர்ந்த முத்து(40), சூர்யா(22), பால்பாண்டி(45) ஆகிய 6 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பின்னர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மட்டும் சரணடைந்தார்.
மற்ற 5 பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். உடலை மீட்ட போலீசார் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வத்திராயிருப்பு அருகே தந்தை கொலைக்கு பழி வாங்கிய மகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
- இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகன் கடந்த மார்ச் மாதம் கொலை செய்தார். பின்பு முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வந்தவர் தலைமறைவாக இருந்தார்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊரான அர்ச்சுனா புரத்திற்கு முருகன் வந்தார். அவரை கொலையுண்ட மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார்(வயது24),
பேச்சியப்பன்(27), முத்துக்குமார்(20) வத்திராயிருப்பதை சேர்ந்த முத்து(40), சூர்யா(22), பால்பாண்டி(45) ஆகிய 6 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பின்னர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மட்டும் சரணடைந்தார்.
மற்ற 5 பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். உடலை மீட்ட போலீசார் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த ஆண்டு கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததால் பட்டாசு விற்பனை அதிகரித்தது.
- தீபாவளியை முன்னிட்டு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுப்பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதேபோல் 70 சதவீதம் தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது.
மேலும் இந்த ஆண்டு பட்டாசு விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்தது. நடப்பு ஆண்டு சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு தான் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பட்டாசு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்திருந்தது.
இந்த ஆண்டு கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததால் பட்டாசு விற்பனை அதிகரித்தது. தீபாவளியை முன்னிட்டு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மகராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது. அங்கு அனுப்பப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகிவிட்டன.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் ரூ.150 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற பட்டாசு விற்பனை தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கணேசன் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால் அதிகளவு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு ரூ.6ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் வர்த்தகம் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டாசு கடைகள் சங்கம் பொதுச்செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:-
இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்காத வகையில் அதிகமாக விற்பனை நடந்துள்ளது. ஏற்கனவே இருப்பு இருந்த பட்டாசுகளும் விற்பனையாகி உள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் வரும் ஆண்டில் மேலும் அதிக அளவில் பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செங்கோட்டை-மயிலாடுதுறை சிறப்பு ரெயிலுக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ரெயில் நிலைய அதிகாரி ஜெயபால் உள்பட பலர் பாராட்டப்பட்டனர்.
ராஜபாளையம்
தீபாவளியொட்டி தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு ராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரெயில் இன்று முதல் தொடங்கப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து வந்த சிறப்பு ரெயிலுக்கு ராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயில்வே பயனாளர்கள் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணன் தலைமையில் என்ஜினுக்கு வாழை மரக்கன்றுகள், மாலை அணிவித்து ரெயில்வே டிரைவர் ராமர், துணை டிரைவர் அருள்ராஜ், கார்டு இளங்கோ ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயில் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினர்.
ரெயில் பயனாளர்கள் சங்க செயலாளர் ஹரி, தொழில் வர்த்தக சங்கத் துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் நாராயண சாமி, செயற்குழு உறுப்பினர் வாசுதேவ ராஜா மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
ரெயில் நிலைய அதிகாரி ஜெயபால் உள்பட பலர் பாராட்டப்பட்டனர்.
- ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடந்தன.
- அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் விவேகானந்த கேந்திரமும், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான நகர்ப்புறப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கேந்திர கிளை தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். கிளை பொருளாளரும். தலைமையாசிரியருமான ரமேஷ் வரவேற்றார். விவேகானந்த கேந்திர மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை மாணவர்களுக்கு ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார்.
இதில் 32 பள்ளிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் கே.ஆர்.விஸ்வநாதன், தங்கமயில் ஜூவல்லரி மேலாளர் பாலாஜி, பாபு ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். முதலிடம் பிடித்த மாணவர்கள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறவிருக்கும் 2 நாள் முகாமில் கலந்துகொண்டு மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா, ராகஜோதி, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- வாலிபர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
- இவர்கள் மீது கால்நடை திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ராமர், லட்சுமணன். இவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி பகுதியில் தோட்டம் உள்ளது.
இந்த இருவர் மற்றும் தந்தை மீது கால்நடை திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் மலை அடிவாரப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வாலிபர்கள் இருவரும் சென்றனர். அங்கு வந்த வனத்துறையினரான பாரதி, பெரியசாமி உள்ளிட்ட 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை பிரதான சாலையில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த 2 வாலிபர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வாலிபர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் ராமர், லட்சுமணன் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முருகனை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்து தாக்கினர்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது52). இவர் கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (37) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு கேரளாவுக்கு சென்று விட்டார். அங்கு வேலை பார்த்து வந்த முருகன் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று மதியம் வத்திராயிருப்பில் இருந்து அர்ச்சனாபுரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் உறவினர் பாண்டியன் என்பவருடன் சென்றார். அப்போது அங்கு மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார் (24) மற்றும் அவரது நண்பர்கள் மாரியப்பன், முத்து, சூரியா, பால்பாண்டி, முத்துகுமார் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் முருகனை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்து தாக்கினர். பின்பு ரஞ்சித்குமார் தன்னிடம் இருந்த கத்தியால் முருகனை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
முருகன் கொலை செய்யப்பட்டது குறித்து அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டியன், வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மாரியப்பன், முத்து, சூர்யா, பால்பாண்டி, முத்துக்குமார் ஆகிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை பலியானது.
- ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன்-மாரீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் பரமேசுவரன் என்ற ஆண் குழந்தையும், 1½ வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று மாலை மாரீஸ்வரி துணி துவைத்து மொட்டை மாடியில் காய போட சென்றார். அப்போது வீட்டின் கீழே விளையாடிக் கொண்டிருந்த 1 ½ வயது பெண் குழந்தை முத்துலட்சுமி தவழ்ந்து சென்று தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டிப் பார்த்தாள்.
இதில் குழந்தை எதிர்பாராத விதமாக பக்கெட்டில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது. துணியை காயப்போட்டுவிட்டு கீழே இறங்கி வந்த மாரீஸ்வரி குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்துகிடந்ததை கண்டு அலறி துடித்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது அந் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில்லா தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடந்தது.
- முதலுதவி செய்வது எப்படி? போன்ற விவரங்களை கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறைஉதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன் மற்றும் வத்திராயிருப்பு நிலைய அலுவலர் பால நாகராஜ், தீ தடுப்பு குழு அலுவலர் மற்றும் பணியாளர்கள் விபத்தில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வகுப்பும், முதலுதவி செய்வது எப்படி? போன்ற விவரங்களை கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தினர்.






