என் மலர்
விழுப்புரம்
- வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.
- இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் விஜய் கட்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தமிழக வெற்றிக்கழக கட்சி தொண்டர்கள் அதிகாலை முதல் வாகனங்களில் அணிவகுத்த வண்ணம் உள்ளனர்.
சென்னை- விக்கிரவாண்டி ஜி.எஸ்.டி ரோட்டில் விஜய் கட்சி கொடி கட்டிய கார்கள், பஸ்கள், வேன்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.
இதன் காரணமாக விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் த.வெ.க. கட்சி வாகனங்கள் செல்ல தடுப்புகளை அகற்றி தனி வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சென்று வருகின்றன.
- திடலுக்குள் அனுமதிக்காததால் வெளியே காத்திருந்தனர்.
- விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன்.
வேலூர் அருகே உள்ள சோழவரத்தை சேர்ந்தவர் சுகன்யா. இவரது மகள் லாவண்யா அடுக்கம்பாறையில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நேற்று இரவு தாயும் மகளும் வேலூரில் இருந்து புறப்பட்டு மாநாட்டு திடலுக்கு வந்தனர்.
திடலுக்குள் யாரையும் அனுமதிக்காததால் திடலுக்கு வெளியே விடிய விடிய இருவரும் காத்திருந்தனர். இதுபற்றி லாவண்யா கூறியதாவது:-
எனக்கு விஜய்யை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.இதுவரை நேரில் பார்த்தது கிடையாது. எப்படியாவது இந்த முறை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் புறப்பட்டு வந்தோம். எங்கள் ஊரில் இருந்து என்னைப்போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள்.
கண்விழித்து விடிய விடிய காத்திருந்தது கஷ்டமாக தெரியவில்லை. எப்படியாவது இன்று விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். எனக்கு இப்போது 17 வயது ஆகிறது. வருகிற தேர்தலில் முதல் ஓட்டு போடுகிறேன். அதுவும் விஜய்க்கு போடப் போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
- தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருக்கிறது. த.வெ.க. முதல் மாநில மாநாடு தொடங்குவதை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
- இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு வந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு வந்துள்ளார். மாநாட்டில் வந்த அவர், செய்தியாளர் கேட்ட கேள்விக்கு வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். அதில் தவெக மாநாட்டிற்கு செல்ல அலுவலகத்தில் விடுமுறை கேட்டேன், ஆனால் நிறுவனத்தில் விடுப்பு தர மறுத்தார்கள், மீறி எடுத்தால் வேலையை விட்டு நீக்குவேன் என கூறினார்கள், நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அப்படியே இங்கு வந்துவிட்டேன் என இளைஞர் பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சில நாட்களுக்கு முன்னர், விடுப்பு தரவில்லை என்றால் வேலை உதறி விட்டு மாநாட்டிற்கு வருபவனே உண்மையான தொண்டன் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.
- இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், த.வெ.க மாநாட்டு மேடையின் பின்புறம் ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.
இளைஞர்கள், தவெக மாநாட்டு பந்தலை பார்த்த உற்சாகத்தில் கீழே குதித்தாக தகவல் வெளியானது. மேலும், இவர்களில் மாநாட்டுக்காக சென்ற நிதிஷ்குமார் என்பவர் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்றும் அவர் உயிரிழக்கவில்லை, தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
- விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது, தவெக திடலில் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். இதில், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளன.
விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில் தவெக மாநாட்டில் அனுமதியின்றி நுழைந்த தொண்டர்களை பவுன்சர்கள் வெளியேற்றி வருகின்றனர்.
- மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
- டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், த.வெ.க மாநாட்டையொட்டி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கமாக 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில், இன்று திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொள்கைரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிட விஜய்யின் இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும்.
பெரியார், காமராஜர் வேலுநாச்சியார் உள்ளிட்டோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையை விஜய் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் என்று அவர் கூறினார்.
- மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
- மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாயைில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு பின்னால் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது.
விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- நாளை காலை 11 மணி முதல் மாநாட்டு திடலுக்குள் பொது மக்களுக்கு அனுமதி.
- தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடலுக்கு கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
விஜய், இன்று மாலை 6 மணியளவில் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு திடல் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து விஜய் ஆய்வு செய்துள்ளார்.
கேரவனில் பொதுச் செயலாளர் ஆனந்துடன் மற்றும் மாநாடு குழுவினருடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாளை காலை 11 மணி முதல் மாநாட்டு திடலுக்குள் பொது மக்களுக்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதை கண்டறிய விஜய் புது வியூகம் வகுத்துள்ளார்.
தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்படுகிறது.
மாநாட்டிற்கு வரும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் அதனை ஸ்கேன் செய்து, வருகை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடக்கிறது.
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக இன்று இரவே விக்கிரவாண்டிக்கு கட்சி தலைவர் விஜய் வருகிறார்.
நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடல் முன்பு சாலையோரம் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக இன்று இரவே விக்கிரவாண்டிக்கு கட்சி தலைவர் விஜய் வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.
செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது. வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை.
தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது.
- சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.
- திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நாளை விழுப்புரம் வி.சாலையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கு பாதை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், வி.சாலை நெடுஞ்சாலையில் சாதாரணமாகவே லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாநாடு முன்னிட்டு கூடுதலாக 3 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மாநாட்டு மேடை பகுதி முக்கிய சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், மாநாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜீரோ டிராபிக் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஜீரோ டிராபிக் என்றால் வெளி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தவெக மாநாட்டிற்கு தொடர்புடைய வாகனங்களுக்கு மட்டுமே அனுமது வழங்கப்படும்.
மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை- திருச்சி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றிவிடப்படுகின்றன.
திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன. போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல் 20 கி.மீ தூரம் வரை பயண நேரம் அதிகமாகலாம் எனவும் கூறப்படுகிறது.






