என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.
    • 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாடு முடிந்த நிலையில், கட்சி தொண்டர்கள் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் டேன்க்-கள் மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.

    மேலும், பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக த.வெ.க. மாநாட்டில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    மாநாட்டில் மயக்கமுற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார். இவர் தவிர மாநாட்டில் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்த 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சார்லஸ் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் தகவல். ஏற்கனவே சாலை விபத்தில் திருச்சியை சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் 2 பேர், சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் த.வெ.க தொண்டர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரு சிறுவனின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
    • தனியாக படையோடு பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் சென்றான்

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார்.

    பேச்சுக்கிடையில் தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி ஒன்றையும் விஜய் கூறியுள்ளார். வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் கூறும் குட்டிக் கதை அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். அந்த வகையில் தற்போதும் அந்த பார்முலாவை பயன்படுத்தியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,

    ஒரு நாட்டில் பெரிய போர் ஒன்று வந்தது. அப்போது நாட்டை வழிநடத்தும் சக்திவாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு சிறுவனின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதனால் நாட்டில் இருந்த பெரிய ஆட்களெல்லாம் மிகவும் பயத்தில் இருந்தனர்.

     

    ஆனால் அந்த சிறுவன் பயமில்லாமல் படையை நடத்தும் பொறுப்பை ஏற்று போர்க்களம் போகலாம் என்று சொன்னான். அப்போது அங்கு இருந்த பெரிய மனிதர்கள், நீ சின்ன பையன்.. இது பெரிய போர்க்களம், சக்திவாய்ந்த பெரிய எதிரிகள் இருப்பார்கள். அவர்களை களத்தில் எதிர்கொள்வது சாதரண விஷயம் இல்லை. இது விளையாட்டு விஷயம் இல்லை.

    அவர்களை எதிர்த்து எப்படி தனியாக படை நடத்த முடியும், எப்படி ஜெயிக்க முடியும் என்று எல்லாரும் கேட்டார்கள். எந்த பதிலும் சொல்லாமல் தனியாக படையோடு போன பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் சொல்லியிருக்காங்க.. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க,  இல்லன்னா.. படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க என்று விஜய் கதையை முடித்தார்.

    சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை, புறநானூறு ஆகியவற்றில் கூறப்பட்ட பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பற்றிய கதையையே விஜய் இங்கு குறிப்பிடுகிறார். நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார்.

    தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட நெடுஞ்செழியன் ஈடுபட்ட தலையாலங்கானத்துப் போரில் மூலம் அவரது வீரம் போற்றப்பட்டது. விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளதால் சிறுவன் பாண்டிய நெடுஞ்செழியன் சூழலில் தற்போது தான் இருப்பதாக விஜய் கூற வருகிறார் என்று தெரிகிறது.

    • நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.
    • ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள்

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் முதலில் கட்சிப் பிரமுகர்கள் கொள்கைகளை விளக்கியதைத் தொடர்ந்து விஜய் உரையாற்றிவருகிறார்.

    நான் மற்றும் நன்றாக இருப்பது சுயநலம். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.

    கேள்விகளின் விளைவாக எழுந்ததே எனது அரசியல் முடிவு. அரசியலில் நமது நிலைப்பாடு என்ன என்பது உறுதியானால் எதிரிகள் தெரிவார்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற போதே எதிரிகள் உறுதியாகிவிட்டனர். பிளவுவாத சித்தாந்தம் மட்டுமல்ல ஊழல் அரசியலும் நமது எதிரிதான்.

     

    பிளவுவாத எதிரிகள் நமது கண்ணுக்குத் தெரிவார்கள். அவர்களை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள். எதிரிகளைத் தீர்மானித்து விட்டால் மட்டும் போதாது.

    மகத்தான அரசியல் என்றால் மக்களுக்கான அரசியல் தான். திட்டங்கள் அறிவித்து செயல்படுத்துவது என்பதை தேர்தல் முடிவுகள் போல் செயல்படுத்த வேண்டும். 

    இது பணத்திற்காகக் கூடிய கூட்டமல்ல. ஏ டீம், பீ டீம் என்று கூறுவதைக் கண்டு பயப்பட போவதில்லை. எங்களுக்கு யாரும் எந்த சாயமும் பூச முடியாது. நல்லது நடக்காதா என்று மக்கள் காத்திருக்கின்றனர் 2026 இல் போரை அறிவித்ததும் தவெக சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள். 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு மக்கள் வாக்களிக்பார்கள் என்று பேசியிருக்கிறார்.

    கலாச்சாரம் ஆகியவற்றை அரசியலில் பாஜக முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிலையில் விஜய் பேச்சு பாஜகவை மறைமுகமாக விமர்சித்ததாக பார்ப்படுகிறது. மேலும் பெரியாரை நமது கொள்கைத் தலைவராக முன்னிருத்தும்போது பெயிண்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு சிலர் வருவார்கள் என்று தனது பேச்சின் தொடக்கத்தில் விஜய்  குறிப்பிட்டார் 

    சமீப காலமாக  திருவள்ளுவர்  ஆகிய தமிழர் அடையாளங்களின் மீது காவி சாயம் பூசப்படுவதை விஜய் மறைமுகமாக விமர்சித்ததாகவும் இதை பார்க்க வேண்டி உள்ளது.  ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்பது தவெக அரசியல் கொள்கைகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.
    • தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் விஜய் அமர்ந்திருக்க கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அதன்படி மேடையில் உரையாற்றிவரும் கட்சி  பிரமுகர்கள் தவெகவின் கொள்கைகளை எடுத்துரைத்து வருகிறார்.

    அதன்படி, வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே கட்சியின் முதல் கொள்கை .

    மதம் சாதி இனம் மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக்கூடாது.

    மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும்.

    மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து மக்காளுக்கான ஜனநாயகத்தை மீட்போம்.

    எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் சமம்.

    மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை.

    தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

    தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

    போதையில்லா தமிழகம் என்பதே நமது கொள்கை. மக்களுக்கான ஜனநாயக நிலைநாட்டுவோம்.

    நிர்வாகத்தில் அரசியல் தலையீடு எந்த விதத்திலும் இருக்கக்கூடாது. லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கிறோம்.

    கட்சியின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களுக்கு வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும்.

    மதுரையில் தலைமை செயலக கிளை உருவாக்கப்படும்

    வர்ணாசிர கோட்பாடுகள் எந்த வகையிலும் முழுமையாக எதிர்க்கப்படும்.

    தமிழ் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழநாட்டுக்கு எப்போதும். ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க உறுதி வழங்கப்படும்.

    கல்வியை மாநில பட்டியலில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.

    பெண்களுக்கு சட்டமன்றம் கல்விப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

    மாநிலம் முழுவதும் காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்

    தகவல் தொழிலநுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

    மாவட்டந்தோறும் பன்னோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

    ஆக்கிரமிப்பில் உள்ள சதுப்பு, விவசாய நிலங்கள் மீட்கப்படும்

    பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்

    அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி உடைகள் அணிய உத்தரவிடப்படும்

    மணல் கொள்ளை கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும்

    மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது செயலிழந்து கிடப்பதால் அது சீரமைக்கப்படும்

    அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பு அதிகரிக்கப்படும்

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

    போதைபொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்

    தமிழகம் முழுவதும் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும் 

    • நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.
    • மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து  தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

    நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார். நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை மேடை மீது அவர்கள் வீசினர். அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.

    அவ்வாறு வீசப்பட்ட கொடிகள் பலவற்றை எடுத்து தனது தோளில் அவர் போட்டுக்கொண்டது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பாதுகாவலர் ஒருவரும் உற்சாக மிகுதியில் நடைபாதை மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடைபாதையிலிருந்து நிகழ்ச்சி மேடையில் ஏறிய விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மாமன்னர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வி.சாலையில் நடைபெறுகிறது.
    • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததும், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அவரை நோக்கி தொண்டர்கள் வீசிய கட்சி கொடியை, த.வெ.க. தலைவர் விஜய் தன் கழுத்தில் அணிந்து கொண்டார்.

    அதன்பிறகு மேடைக்கு சென்ற விஜய் அங்கு வைக்கப்பட்டு இருந்த மாமமன்னர்கள், மொழிப்போர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த 100 உயர கொடி கம்பத்தில் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் கட்சி கொடியை ஏற்றும் போது தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதைத் தொடர்ந்து த.வ.க. தொண்டர்கள் கட்சி உறுதிமொழி ஏற்றனர்.த.வெ.க. பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர். த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு இதுவரை சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று தெரியவந்துள்ளது.


    • மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்துள்ளனர்
    • தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும்

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற உள்ளது. பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு  முழுவதும் இருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதுவரை மாநாட்டுக்கு மொத்தம் 8 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகம் உள்ளதால் மாநாட்டை முன்கூட்டியே முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வி.சாலையில் நடைபெறுகிறது.
    • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். த.வெ.க. தலைவர் விஜய்யை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    முன்னதாக மாநாடு துவக்கத்தில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவை த.வெ.க. மாநாட்டு மேடையில் இடம்பெறுகிறது. மேலும் கோவையை சேர்ந்த 27 பேர் அடங்கிய குழு வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடுகின்றனர்.

    கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த நடிகர் விஜய் அதன் பிறகு கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது.

    இதன் தொடர்ச்சியாக விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்றது. அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு துவங்கியது.

    த.வெ.க. மாநாட்டுக்கு வந்திருப்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற் காக 4 இடங்களில் பார்க் கிங் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள கீரைக் கொண்டை என்ற இடத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் வாகனங்களை நிறுத்த பெரிய பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.

    இது தவிர 80 ஏக்கரில் ஒரு இடம், 37 ஏக்கரில் ஒரு இடம், 40 ஏக்கரில் இன்னொரு இடம் என மொத் தம் 4 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்தும் கார், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களால் நிரம்பி வழிந்தது.

    வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் டயர் பஞ்சரானால் அதனை சரி செய்வதற்காக மெக்கானிக்குகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    • கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.

    விக்கிரவாண்டியில் நடைபெறும் த.வெ.க. மாநாட்டுக்கு வந்த தொண் டர்கள் மற்றும் நிர்வாகி களால் திண்டிவனத்தில் இருந்து விக்கிரவாண்டி சாலை வரையில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிந்தன.

    மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி உள்ள பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய ஓட்டல்கள் வரை அனைத்திலுமே கட்சி தொண்டர்கள் காலை, மதியம் என உணவை சாப்பிடுவதற்கு அலைமோதினார்கள். இதன் காரணமாக சாலை யோரம் உள்ள கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    காலை உணவாக இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை தொண்டர்கள் வாங்கி சாப்பிட்டதால் ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.

    மேலும் பலர் உணவுகள் கிடைக்காமல் திணறிவந்தனர். ஆனால் மாநாட்டில் இரவுநேர உணவுகளுக்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ளது.
    • ஒரு தொண்டர் சத்தியமங்கலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு நடந்தே வருகை தருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரசிகர்கள் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். விஜய்-ன் முகமூடி அணிந்த படி தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளனர்.

     

    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களின் நெகிழ்ச்சி வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஒரு தொண்டர் சத்தியமங்கலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு நடந்தே வருகை தருகிறார்.

    மேலும் தமிழகவெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு சௌந்தரராஜா அவர்களின் தலைமையில், சென்னை, வடபழனியில் தொடங்கி விக்கிரவாண்டி வரை நமது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.

    பெங்களூருவில் இருந்து பாண்டிசேரி செல்லும் ரெயிலில் பயணித்த ரசிகர்கள் அடுத்த முதலமைச்சர் என கோஷம் எழுப்பி கொண்டாடினர்.

     இதற்கும் மேலாக மாநாட்டிற்கு விடுமுறை கொடுக்காததால் வேலையை உதறி விட்டு மாநாட்டிற்கு ஒரு தொண்டர் வருகை தந்துள்ளார்.

    தமிழ்நாட்டை தவிர கேரளா, கர்நாடகாவில் இருந்து விஜய் ரசிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள விழுப்புரம் செல்கிறார்கள். இந்த ரசிகர்கள் கர்நாடகாவில் இருந்து 289 கிலோமீட்டர் ஆட்டோவிலேயே மாநாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

    இப்படி தவெக மாநாடு தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விபத்தில் 3 தவெக தொண்டர்கள் இறந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. 

    • வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்து செல்கின்றனர்.
    • குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    மாநாடு நடைபெறும் வி சாலை பகுதி தமிழகம் முழுவதும் பிரபலமான இடமாக தற்போது உருவெடுத் துள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் பலர் மாநாடு திடல் அருகே வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர்.

    இதுபோன்று நேற்று இரவு மின் ஒளியில் ஜொலித்த மாநாடு திடலை பார்ப்பதற்காக குடும்பத்துடன் குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    சொகுசு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிளிலும் மேலும் அருகில் உள்ள கிராம வாசிகள் சைக்கிள்களிலும் வந்து மாநாட்டு திடலை பார்த்து சென்றதால் சுற்றுலா தலம் போல் காட்சியளித்தது விக்கிரவாண்டி சாலை.

    ×