தொண்டர்கள் வீசிய அன்புக் கொடியை தோளில் அணிந்த விஜய்.. மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை

நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
தொண்டர்கள் வீசிய அன்புக் கொடியை தோளில் அணிந்த விஜய்.. மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை
Published on

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து  தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார். நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை மேடை மீது அவர்கள் வீசினர். அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.

அவ்வாறு வீசப்பட்ட கொடிகள் பலவற்றை எடுத்து தனது தோளில் அவர் போட்டுக்கொண்டது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பாதுகாவலர் ஒருவரும் உற்சாக மிகுதியில் நடைபாதை மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

நடைபாதையிலிருந்து நிகழ்ச்சி மேடையில் ஏறிய விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மாமன்னர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com