என் மலர்
விழுப்புரம்
- சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது.
- தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது.
விழுப்புரம், மே.18–-
விழுப்புரம் மாவ ட்டம்,மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்தவ ர்கள் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். அவர்களை நேற்று ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாள ர்ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர்அவர் கூறியதாவது:-
மரக்காணம்,எக்கியார் குப்பம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க ஓ.பி.எஸ்., கூறியதின் பேரில் இங்கு வந்துள்ளோம். .செங்கல்பட்டு மாவட்டத்தில் இதேபோல் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அறிக்கை கொடுத்துள்ளார்.அரசினுடைய மெத்த னப்போக்கு காரணமாகவும் மதுவிலக்கு கொள்கையில் இன்னும் சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது. அரசு முறையான, சீரான ஒரு மதுவிலக்கு கொள்கை யை உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு தனது அலட்சியப் போக்கை விட்டு விட்டு சரி செய்ய வேண்டும். உளவு, காவல்,அமலாக்கம் போன்ற துறைகளில் பணிபுரி வோரை தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது. மதுவிலக்கு கொள்கையில் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசு உடனடியாக மாற்ற ங்கள் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் கோரிக்கையை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட செயலா ளர் ஏழுமலை, துணைச் செயலாளர் டாக்டர் கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் வேலு, விழுப்புரம் நகர செயலாளர் கமருதீன், மாநில மீனவர் அணி செயலாளர் ஜெயரா மன், தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணி, நகர செயலா ளர் சங்கரலி ங்கம், அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள் ஏழும லை ,துரை, மாவட்ட ஜெயல லிதா பேரவை தனுசு ஜெயரா மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்உ டனிருந்தனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
- டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மரக்காணம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கிராமங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலா னோர். தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் மரக்காணம் பகுதியில் சாராய விற்பனை அறவே ஒழிந்தது என்றே கூறலாம். இந்நிலையில் மதுப்பிரி யர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது அருந்து கின்றனர். டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த கடை திறந்தது முதல் மூடும் வரையில் மது பிரி யர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை யாவதாக டாஸ்மாக் ஊழி யர்கள் கூறினார்கள்.
- புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
- இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என தெரிய வருகிறது.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே எக்கிய குப்பம் மீனவர் பகுதி வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்த கள்ள சாராயத்தை குடித்துவிட்டு 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 6 பேர்களை மரக்காணம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் முத்தி யால்பேட்டை பகுதி யை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற மொத்த வியாபாரி களிடம் கள்ளச்சாராயத்தை வாங்கினோம். இந்த சாரா யத்தை நாங்கள் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்பனை செய்தோம் என்று மரக்காணம் பகுதி யில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் போலீசாரிடம் கூறியுள்ளனர் .
இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை வான கரம் பகுதியில் தொழிற்சா லை அமைத்து அங்கு தயா ரிக்கப்படும் மெத்தனாலை அப்பகுதியை சேர்ந்த இளைய நம்பி வயது (55)ராபர்ட் (50) ஆகியோர் எங்களுக்கு மொத்தமாக வழங்கினர். இந்த மெத்த னால் கலந்த எரி சாரா யத்தை தான் நாங்களும் மரக்காணம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்தோம் என்று கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சென்னை வானகரம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைத்து மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை விற்பனை செய்த இளைய நம்பி மற்றும் ராபர்ட் உள்ளிட்ட வர்களை கைது செய்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என தெரிய வருகிறது. இதற்கிடையே சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன் படி கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 11 பேர் மீது கோட்டக் குப்பத்தில் டி.எஸ்.பியாக இருந்த சுனில் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
- யாருடைய தலையீடு இருந்தாலும் அச்சமின்றி தங்கள் பணி களை மேற்கொள்ள வேண்டும்.
- மருத்துவர்கள் முழுமையாக கண்காணித்து சிகிச்சை அளித்திட வேண்டும்.
விழுப்புரம்:
அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் டாக்டர் சி.பழனி தலைமை யில், விழுப்புரம் நாடாளு மன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ. க்கள் நா.புகழேந்தி, டாக்டர் லட்சு மணன் ஆகியோர் முன்னி லையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில், கள்ளச் சாராயம் கட்டுப்படுத்து வது குறித்து மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, வருவாயத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. அப்போது அமைச்சர் பொன்முடி தெரிவிக்கை யில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், கள்ளச்சாரா யத்தை கட்டுப் படுத்துவதில் எந்தவித சமரசமின்றி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் முற்றிலும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிடும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தொடர் நடவடிக்கையாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் வருவாய்த்துறையினைச் சேர்ந்தவர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதி களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு கின்றதா என்பது குறித்து கண்காணிப்பதோடு, கள்ளச்சாராயம் குறித்த தகவல் கிடைக்கப்பெ ற்றால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது காவல்துறைக்கு முதல் தகவல் அளிப்ப வர்களாக செயல்பட வேண்டும்.
மேலும், காவல்துறை யினைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதி களுக்குள் எந்த சூழ்நிலையிலும் கள்ளச்சாராயத்தினை அனுமதி க்கக் கூடாது என்ற நிலைப்பாட் டினை எடுத்துக்கொண்டு உறுதியுடன் பணியாற்றிட வேண்டும். யாருடைய தலையீடு இருந்தாலும் அச்சமின்றி தங்கள் பணி களை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தி லுள்ள 9 சோதனை சாவடி களில் முழு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் பயன் பாட்டிலிருந்து பொது மக்களை விடுவித்து பாது காப்பது போலீசாரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருப வர்கள் முழுமையாக குண மடைந்து அவரவர் வீடு களுக்கு திரும்பி சென்ற பின்பும் மருத்துவர்கள் முழுமையாக கண்காணித்து சிகிச்சை அளித்திட வேண்டும். சமய மேல்பாதி கிராம த்தில் உள்ள கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுபா ட்டின்கீழ் இயங்கி வருகிறது.
இக்கோவிலில் அனைத்து சமூகத்தினரும் சமூக நீதியினை கடைப்பிடித்திடும் வகையில் அனை வரும் வழிபடு வதற்கான உரிமை தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டுள்ளது. ஆகையால் அனைத்து தரப்பு மக்களும் கோவில் சென்று வழிபடு வதற்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள ப்படும். பொதுமக்களும் அரசால் மேற்கொள்ள ப்பட்டு வரும் நடவடிக்கை களுக்கு ஒத்து ழைப்பு வழங்கிட வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஆய்வுக்கூட்டத்தில் ஐ.ஜ. கண்ணன், டி.ஐ.ஜி. பகல வன், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்ச ந்தி ரன், திண்டி வனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் கோட்டாட்சி யர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது.
- கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், மரக்காணம் மது விலக்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு மெத்தனால் அளித்த தொழிற்சாலை உரிமையாளர் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது. அதே போல கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.
இந்நிலையில் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட மரியே சோபி மஞ்சுளா சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற உடனேயே மரக்காணத்தில் இயங்கி வந்த மது விலக்கு போலீஸ் நிலையம் கோட்டக்குப்பத்திற்கு மாற்றப்பட்டது.
கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடியும் சரிவர இயங்கவில்லை. இதனால் மரக்காணம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் இருந்து கடத்தி வரப்படும் சாராய விற்பனை படுஜோராக நடந்தது. இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் மது விலக்கு போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முடியாத வியாபாரிகள், மெத்தனாலை வாங்கி அதில் டிகிரி பார்த்து நீர் ஊற்றி, புதுவை சாராயம் போலவே பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.
மரக்காணம் பகுதியில் உள்ள மது பிரியர்கள், இது புதுவையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் என்று நினைத்து வாங்கி குடித்தனர். இதில் மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இதுவரை எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு இன்ஸ்பெக்டர் மரியே சோபி மஞ்சுளாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வாய் திறந்தால் மட்டுமே நடந்தது என்ன? இதில் யார்? யார்? தொடர்பில் இருக்கிறார்கள்? என்பன போன்ற பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரியவருகிறது.
- புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 51 பேரும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 6 பேரும், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு மற்றும் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்டபோதிலும் அவர்களது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மற்ற அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர்கள் உயிரிழக்கக்கூடுமோ? என்ற அச்சத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் உறைந்து போயுள்ளனர். எனவே உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதற்கேற்ப உரிய சிகிச்சைகளை அளிக்குமாறும், அல்லது மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், எங்கள் பகுதியில் சாராயம் விற்பனை செய்தது பற்றி பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அப்போதே போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற இறப்புகள் ஏற்பட்டிருக்காது.
காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் சாராயம் விற்றனர். அவர்களை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்றனர்.
- சைலேந்திரபாபு போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார்.
- பதிவேடுகள் பராமரிப்புகளை பார்வையிட்டார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்திய டி.ஜி.பி., சைலேந்திரபாபு போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார். விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி., சைலேந்திர பாபு திடீர் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்தில் போலீசாரின் பணி, பதிவேடுகள் பராம ரிப்பு போன்ற வைகளை பார்வையிட்டார்.
மேலும், போலீஸ் நிலைய பராமரிப்பு, சுற்றுசூழல் பராமரிப்பு ஆகியவை சிறப்பாக இருந்ததால், பாராட்டும் விதமாக போலீசாருக்கு பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கினார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு செய்து பரிசு வழங்கியதால் போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆய்வின் போது சப்-–இன்ஸ்பெக்டர் காத்தமுத்து உள்ளிட்ட போலீசார் பணியில் இருந்தனர்.
- மான் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும்.
- அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது.
விழுப்புரம்:
செஞ்சிக் கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் இருக்கின்றன. அவைகளில் ஒரு மான் நீண்ட நாட்களாக செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றித் வந்தது. சில நாட்களில் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும். அவ்வாறு நேற்று இரவு வனப்பகுதிக்கு சென்ற மான் இன்று அதிகா லையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது.
அலுவலக கேட் பூட்டப்பட்டிருந்ததால், அலுவலகம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது. இதனை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் குவிந்தனர். தகவல் அறிந்த செஞ்சி வனத்துறை வனச்சரகர் வெங்கடேசன் தலைமை யிலான வனவர்கள் மானை பக்குவமாக பிடித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விட்டனர். குடியிருப்பு பகுதியில் வந்த மானை காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
- கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ, மாணவியர்களுக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டில் சாதனைகள் படைக்க ஏதுவாக தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம், கடலூர் விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டா, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 6,7,8,9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 24-ந்தேதி காலை 7 மணி அளவில் மாவட்ட விளையாட்டரங்கம், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம், விழுப்பு ரத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்திசெய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள 24-ந்தேதி வரும் மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொண்ட விண்ணப்பம், ஆதார் அட்டை, போனேபைய்டு சான்றிதழ், ஆகிய படிவங்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்ட தேர்வு போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- திண்டிவனத்தில் சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து ஒருவர் பலியானார். இது தொடர்பாக திண்டிவனம் தீர்த்தகுளம் ஏரிகோடி தெருவைச் சேர்ந்த மரூர் ராஜா என்கிற ராஜா (வயது 38) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டிவனம் தீர்த்த குளம் மேம்பாலம் அருகே, திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டவுடன் ஓட முற்பட்ட தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் 15 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் கிடங்கல் ஏரிக்கரை அருகே சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 12 லிட்டர் சராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழங்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கோவிந்தனுடன் சேர்ந்து பாரதி விவசாய பணிகளை கவனித்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
- கோவிந்தன் பால் கறந்து கொண்டிருந்த போது அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, விவசாயி கோவிந்தனின் தலையில் சுட்டார்.
விழுப்புரம்:
பெண் தர மறுத்ததால் பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தை அடுத்துள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(40). விவசாயி.
இவரது மனைவி கலையம்மாள் (32). இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன்பாரதி(23) சிறு வயதிலே தாயை இழந்தவர். தந்தையும் அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் பாரதியை கோவிந்தன் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்தார். கோவிந்தனின் விவசாய நிலம் ஊருக்கு எல்லை பகுதியில் காப்பு காடு அருகில் உள்ளது. அங்கு அவர் வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
கோவிந்தனுடன் சேர்ந்து பாரதி விவசாய பணிகளை கவனித்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒரு தலையைாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கோவிந்தனிடம் பாரதி கேட்டதாக தெரிகிறது.
இதில் அந்த பெண்ணிற்கும் விருப்பம் இல்லாததால் கோவிந்தன், பெண் தர மறுத்துள்ளார்.இதனால் கோவிந்தன் மீது பாரதி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கோவிந்தன் பால் கறந்து கொண்டிருந்த போது அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, விவசாயி கோவிந்தனின் தலையில் சுட்டார்.
இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அவரது மனைவி கலையம்மாளையும் பாரதி நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் காலில் பலத்த காயத்துடன் அவர் அலறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் பாரதி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பின்னர் படுகாயம் அடைந்த கணவன்-மனைவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற கோவிந்தன் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். கலையம்மாள் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் விழுப்புரம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
தப்பி ஓடிய பாரதி அப்பகுதியில் உள்ள காப்பு காட்டில் பதுங்கி உள்ளார்.அவரை விழுப்புரம் வன சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தம்பதியை வளர்ப்பு மகனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர்.
- விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இன்று அதிகாலை வரையில் 13 பேர் பலியாகினர். 39-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மரக்காணம் யூனியன் சேர்மன் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.ஒரு கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது.






