என் மலர்
வேலூர்
- கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து விடுதி காவலாளி கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர். அவர் கிடைக்காததால் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதே போல அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலூர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அரியூர் போலீசில் புகார் அளித்தனர்.
அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த 3 கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- 900 பேர் தேர்வு பணியில் ஈடுப்பட்டனர்
- முழுமையாக சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. பொதுப்பிரிவினர் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு 100 மதிப்பெண்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு காலை 10 மணியளவில் தொடங்கியது.
இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண் ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 7,613 எழுதினர்.
தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். தேர்வுக்கு முன்னதாக வி.ஐ.டி. பல்கலைக்கழக தேர்வு மைய நுழைவாயிலில் முழுமையாக சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
எழுத்துத் தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் பென்சில் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.
இன்று பிற்பகல் பொதுப் பிரிவினருக்கு மட்டும் 70 மதிப்பெண்ணுக்கான பொதுஅறிவு மற்றும் உளவியல் தேர்வு நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து நாளை போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல், சட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகம் தொடர்பாக 85 மதிப்பெண்களுக்கான 2-ம் தாள் தேர்வு நடைபெறுகிறது.
இதில், 1,081 பேர் பங்கேற்க உள்ளனர். இன்று வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தில் நடந்த தேர்வில் வேலூர் சரக டிஐஜி முத்து சாமி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்ப்பார்வையில் 3 ஏ.டி.எஸ்.பி.கள், 5 டி.எஸ்.பி.கள், போலீஸ் அதிகாரிகள், பணியாளர்கள் என மொத்தம் 900 பேர் தேர்வு பணியில் ஈடுப்பட்டனர்.
- ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்னதாம்பல் செருவு ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அரசின் காலை உணவு திட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.பிரியா வடிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குமாரி சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் ஆத்மா திட்ட தலைவர் புகலூர் கே.ஜனார்த்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டி லலிதா டேவிட் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜமார்த்தாண்டன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்தரசி, பாரதிராஜா, வயலட் மகேந்திரன், கோவிந்தராஜ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் குண்டல பள்ளி ஏ.எஸ்.ராஜி சிவகுமார் ஊராட்சி செயலாளர் சி அனிதா ஃபுல் படம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்ன ஊணை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றது.
அதே பகுதியை சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் (வயது 23). இவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் லேப்டெக்னிசியனாக வேலைபார்த்து வந்தார்.
திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இவரது நண்பர் தீபன் (28). இவர்கள் எதிர் வீட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன்கள் பாலகணேசன் (27), பாபு என்கிற யோகானந்தம் (42), ஸ்ரீநாத் (44) சுமன் (30) மற்றும் உறவினர் முனுசாமி (50). இந்த நிலையில் கரக ஊர்வலத்தில் மேளம் அடித்து சென்றதாக தெரிகிறது.
அப்போது இரு தரப்பினரிடையே நடனம் ஆடுவது குறித்து வாய் தகராறு ஏற்பட்டது. கை கலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் மற்றும் உறவினர்கள் புருஷோத்தமனையும், தீபனையும் சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.
இதில் புருஷோத்தமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார்.
அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக கூறினர்.
படுகாயம் அடைந்த தீபன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது சம்பந்தமாக வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முனுசாமி, சுமனை தேடி வருகின்றனர்.
கரக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்திக்குத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பொதுமக்கள் அவதி
- குளிர்பான கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர்
வேலூர்:
கோடைகாலம் முடிந்த போதிலும் வேலூரில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த சில நாட்கள் மழை பெய்து குளிர்ச்சியை தந்தது. இந்நிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் வேலூர் மாவட்டத்தில் 100.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
இதனால் மக்கள் மீண்டும் குளிர்பான கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
- வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும்
- ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனை
வேலூர்:
ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும்.
இங்கு வாரம் தோறும் சுமார் ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும். வழக்கம்போல் இன்று ஆட்டு சந்தை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் 1000-க்கும்மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது.இன்று ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு ஆடு 20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. அதன் படி இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தனர்
- மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்
வேலூர்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 3,304 பள்ளிகளில் 1.88 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
காலை உணவுக்கான சமையல் கூடங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவாக உப்புமா, கிச்சடி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 பள்ளிகளிலும், பேரூராட்சி பகுதியில் உள்ள 24 பள்ளிகளிலும், ஊரக பகுதிகளில் உள்ள 528 பள்ளிகள் என மொத்தம் 576 பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரத்து 721 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்ைத நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணை மேயர் சுனில்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டன்.
- மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
- 50-க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர்
வேலூர்:
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு மழை, பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் ஏரியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் மழைக்காலங்களில் துரிதமாக செயல்பட போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
- ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை
- பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற்றனர்
வேலூர்:
தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், செல்வ வளம் பெருகவும், சகல ஐஸ்வரியங்களையும் பெறவும் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுளர்ணமி தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது .
திருமணமான பெண்களும், திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தைக் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதன்படி இன்று காலை நல்ல நேரமாக குறிப்பிடப்பட்ட 9 மணி முதல் 10.30 மணிக்குள் பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பெண்கள் கலசம் செய்து அதனுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு உள்ளிட்டவர்களை வைத்து சர்க்கரைப் பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை உள்ளிட்ட நைவேத்தியத்தை படையலிட்டு நோம்பு இருந்தனர்.
மேலும் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், நோன்புக்கயிறு, வளையல்கள், வெற்றிலை பாக்கு, ரவிக்கை துணி உள்ளிட்டவர்களை கொடுத்து ஆசி பெற்றனர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும்
- குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.
மாவட்ட வன அலுவலர் கலாநிதி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பேசியதாவது:-
லத்தேரியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காய்கறிகள் வாரச்சந்தை நடக்கிறது. திறந்தவெளியில் காய்கறி கடைகள் இருப்பதால் வியாபாரிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் அவதி அடைகின்றனர். எனவே வார சந்தை கடைகளுக்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும்.
உள்ளி ஊராட்சியில் பாலாற்றில் இருந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும்.
சிவில் சப்ளை குடோனில் இருந்து குடியாத்தம் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு சரிவர பொருட்கள் அனுப்புவதில்லை. இதனால் பாதி பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும் தரமற்ற பொருட்கள் அனுப்புவதால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சீவூரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடுரோட்டில் நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
திப்பசமுத்திரம் கிராமத்தில் செல்லும் மலட்டாறில் அதிக அளவு மணல் கொள்ளை நடக்கிறது. மணல் அள்ளும் இடத்தில் மேடு, பள்ளம் அதிகமாக இருப்பதால் அதன் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது.
லத்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சரிவர 3 பேஸ் மின் இணைப்பு வரவில்லை. இதனால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.
ஒய்யாத்தூர் ஏரியிலிருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில் மூலம் வண்டல் மண் அள்ளப்படுகிறது.
அவர்களிடத்தில் சென்று கேட்டால் அரசு பணிக்கு எடுப்பதாக கூறுகின்றனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் எப்படி மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.
அதனை விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வஞ்சூர் பாலாற்றில் கட்டப்பட்டு வரும் சிறிய தடுப்பணை உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
பேரணாம்பட்டு ஏரியில் தோல் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் கலக்கிறது. இதனால் மண் வளம் அதிகம் பாதிப்பு அடைகிறது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
- கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின் பெயரில் காட்பாடி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் சுஷ்மிதா மற்றும் 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர்.
அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடித்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரூ.14 லட்சம், 37 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி இருந்தது
- அதிகாரிகளின் முன்னிலையில் எண்ணப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலத்தில் ஒன்றான வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சிறப்பு திருவிழா நடைபெறும்.
இங்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப கோழி உருவங்கள், பணம், தங்கம், வெள்ளி போன்றவைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 வாரத்திற்க்கு பிறகு நேற்று எல்லையம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, வேலூர் சரக ஆய்வர் சுரேஷ்குமார் , குடியாத்தம் சரக ஆய்வர் பாரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில், பக்தர்கள் ரூ. 14 லட்சத்து 6 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் நேரடியாக 37 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
காணிக்கை எண்ணும் பணியில் விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு மற்றும் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.






