என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஒட்டுமொத்த கொசு ஒழிப்பு பணி தீவிரம்
    • தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் ஒட்டுமொத்த டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து சுகாதார அலுவலர் லூர்த்துசாமி தலைமையில் அலமேலுமங்காபுரம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக அங்கு 75 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் சென்று அபேட் கரைசல் தெளிக்க வேண்டும். மேலும் வீடுகளில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.

    கடந்த இரண்டு நாட்களாகவிட்டு விட்டு மழை பெய்து வருவதால் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்

    வேலூர்:

    வேலூரில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டும் எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் இன்று நடந்தது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்த னியாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் கிரீன் சர்கிள், மீன் மார்கெட், கோட்டை சுற்றுசாலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று நேதாஜி மைதானத்தில் முடித்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி உள்ளிட்டோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்போன் பறிமுதல்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ஒடுகத்தூர், சல்லாபுரியம்மன் தெருவை சேர்ந்த ராம்குமார் (வயது 37) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.

    பின்னர் ராம்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ஒடுகத்தூர் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏலகிரி, வாணியம்பாடி பகுதிகளில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு செய்வது போல் நடித்து பணம் பறித்தது தெரிய வந்தது.
    • கல்லூரி பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் தங்கள் போனில் அவரது புகைப்படத்தை பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    திரும்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்தரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் சென்றார்.

    அவர் தான் ஒரு ஆர்.டி.ஓ. (வட்டார போக்குவரத்து அலுவலர்) என்றும், உங்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த நிர்வாகத்தினர் இதுகுறித்து வாணியம்பாடி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    அங்கு வாகனங்களை ஆய்வு செய்ய வந்தவர் ஆர்.டி.ஓ. எனக்கூறி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. அவரை வாணியம்பாடி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர் மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 38) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூரில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியுள்ளார்.

    இவர் ஏலகிரி, வாணியம்பாடி பகுதிகளில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு செய்வது போல் நடித்து பணம் பறித்தது தெரிய வந்தது.

    மேலும் இன்று காலை வக்கணம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று அந்த வழியாக வாணியம்பாடிக்கு சென்ற தனியார் கல்லூரி பஸ்சில் ஏறி ஆய்வு செய்வது போல் நடித்து பொன்னேரியில் இறங்கி உள்ளார்.

    அப்போது கல்லூரி பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் தங்கள் போனில் அவரது புகைப்படத்தை பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர்.

    பின்னர் கார் ஷோரூமில் சென்று தான் ஒரு ஆர்.டி.ஓ. இந்த பகுதியில் ரகசியமாக விசாரணை செய்ய வந்துள்ளேன். எனவே எனக்கு கார் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு மிரட்டியதையும் ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2-வது நாளாக நடந்தது
    • டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டார்

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது. பொதுப்பிரிவினர் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கான முதல் நாள் தேர்வை 1189 பேர் எழுதினர்.

    இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசருக்கான தேர்வு நடந்தது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண் ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 1081 பேர் எழுதினர்.

    தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். தேர்வுக்கு முன்னதாக வி.ஐ.டி. பல்கலைக்கழக தேர்வு மைய நுழைவாயிலில் முழுமையாக சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    எழுத்துத் தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் பென்சில் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

    வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தில் நடந்த தேர்வில் வேலூர் சரக டிஐஜி முத்து சாமி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்ப்பார்வையில் 3 ஏ.டி.எஸ்.பி.கள், 5 டி.எஸ்.பி.கள், போலீஸ் அதிகாரிகள், பணியாளர்கள் என மொத்தம் 900 பேர் தேர்வு பணியில் ஈடுப்பட்டனர்.

    • வேலூர் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்
    • 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன

    வேலூர்:

    வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு கார்வார் போன்ற இடங்க ளில் இருந்து மீன்கள் கொண்டுவரப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில் கர்நாடகா, கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மீன் வரத்து குறைவாக காணப்பட்டது.

    இதனால் அனைத்து வகை கடல் மீன்களின் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து. இன்று மீன்கள் வரத்து அதிகரித் துள்ளது.

    இதனால் கடந்த வாரத்தை விட விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் ரூ.1,500 வரையும், இறால் கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்பனை செய்தனர்.

    சங்கரா ரூ.250-க்கும், கட்லா ரூ.120-க்கும், மத்தி ரூ.120-க்கும், சீலா ரூ.300, தேங்காய் பாறை ரூ.400, மத்தி ரூ.140, வவ்வால் ரூ.500 முதல் ரூ.800 வரையும், டேம் வவ்வால் ரூ.150-க்கும், மேல் அரசம் பட்டில் இருந்து வந்த வயல் நண்டு ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட் டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 லோடு மீன்களின் வரத்து அதி கரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேபோல் நேற்று பகல் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 100 டிகிரி வெயில் பதிவானது. மாலை 5 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 6 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் 1½ மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

    அதன்பிறகு விடியும் வரை சீராக மழை பெய்தது. இதனால் தெருக்கள், சாலையோரம் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் அதிகபட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல் வேலூரில் 32 மில்லி மீட்டர், காட்பாடியில் 32 மில்லி மீட்டர், மேல் ஆலத்தூரில் 30.20 மில்லி மீட்டர், கே.வி. குப்பத்தில் 26.80 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் சுகர் மில் பகுதியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் ஆலங்காயத்தில் 21 மில்லி மீட்டர், வாணியம்பாடியில் 19 மில்லி மீட்டர், ஆம்பூரில் 14.60 மில்லி மீட்டர், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 9.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிபாக்கத்தில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவானது. பனப்பாக்கத்தில் 48 மில்லி மீட்டர், அம்மூரில் 48 மில்லி மீட்டர், கலவையில் 37.2 மில்லி மீட்டர், வாலாஜாவில் 25 மில்லி மீட்டர், பாலாறு அணைக்கட்டில் 24 மில்லி மீட்டர், ராணிப்பேட்டையில் 21.8 மில்லி மீட்டர், ஆற்காட்டில் 21.2 மில்லி மீட்டர், மின்னல் பகுதியில் 21.2 மில்லி மீட்டர், அரக்கோணத்தில் 18.4 மில்லி மீட்டர், சோளிங்கரில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் பல்வேறு பகுதிகளில் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    இதனால் நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.10,000 கடன் உதவி வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • 67 நபர்களுக்கு சுயநிதி பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

    அணைக்கட்டு:

    வேலூர் அடுத்த பென்னாத்தூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் செ.கணேஷ் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், திட்டப் பணிகளின் விவரம், முன்னேற்ற நிலை குறித்து செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார்.

    மேலும் வரி மற்றும் வரியற்ற இனங்களின் வசூல் விவரம் குறித்து ஆய்வு செய்து, வரி வசூல் பணியினை நிலுவையின்றி விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு பி.எம். சுயநிதி திட்டத்தின்கீழ் வங்கி மூலம் ரூ.10,000 கடன் உதவி வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.

    வருகிற 30-ந் தேதிக்குள் 67 நபர்களுக்கு சுயநிதி பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கி.அர்ச்சுனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்த வழக்கு
    • ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவரது மனைவி ராதாம்மாள் (வயது 71). இவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.ராதாம்மாள் கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார்.

    அவர் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்து திடீரென ராதாம்மாளை தாக்கினார். மேலும் அவரது மூக்குத்தியையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த வாலிபரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேடினர். ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை அருகே இருந்த வாலிபரை பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ராதாம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் ஜெயக்குமார் தனது தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார்.

    அப்போது போலீசில் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் அங்கு இல்லை. அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் புகார் மனுவை கொடுத்துவிட்டு ஜெயக்குமார் அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் ராதாம்மாள் நேற்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராதம்மாளை தாக்கி கொலை செய்த வாலிபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காகிதப்பட்டறையை சேர்ந்த பொதுமக்கள் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பழனிமுத்து, ரவி, டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். மறியல் காரணமாக வேலூர் ஆற்காடு சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது
    • அதிகாரிகள் நேரில் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 34) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பசு மாடு வளர்த்து வந்தார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் ஊசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது மாட்டின் கொட்டகைக்கு அருகில் உள்ள தென்னை மரம் மீது இடி விழுந்தது.

    அப்போது அருகில் இருந்த கொட்டகையில் இடி விழுந்தது. இதில் கொட்டகையில் கட்டியிருந்த பசு மாடு இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தென்னை மரத்தில் இடி விழுந்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்ததை அந்த பகுதி மக்கள் பார்வையிட்டு தங்கள் செல்போனில் பதிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன், கால்நடை பராமரிப்புத் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    இடி தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ேசாகத்தை ஏற்படுத்தியது.

    • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், குடி பழக்கத்திற்கு அடிமையான குமார் நாள்தோறும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார்.

    இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ள்ளது. அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த குமார் குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது மனைவி பானுப்பி ரியா கண்டித்துள்ளார்.

    இதனால், மனவேத னையடைந்த குமார் யாருக்கும் தெரியா மல் விஷம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சத்ய நாராயணன் தலைமை தாங்கினார்.

    பொதுச் செயலாளர் அருள், வேலூர் மாவட்ட தலைவர் கெஜராஜ், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.

    8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ, பி.எப், பே சிலிப் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    ×