என் மலர்
நீங்கள் தேடியது "இறந்த பின்னரும் வாழலாம்"
- ஆந்திர அமைச்சர் ரோஜா பேச்சு
- டாக்டர்களுக்கு பாராட்டு
வேலூர்,
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உடல் உறுப்புகள் தான தின விழிப்புணர்வு விழா ஸ்ரீபுரத்தில் நடந்தது. விழாவுக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் என்.பாலாஜி தலைமை தாங்கினார்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மருத்துவ கண்காணிப்பாளர் கீதாஇனியன், சுகி மற்றும் டிவைன் குழுமத்தின் இணை இயக்குனர்கள் ஸ்ரீநாத்பாலாஜி, ஸ்ரீகாந்த்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, தமிழ் த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாராயணி மருத்துவமனை சார்பில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் குழுவினருக்கும், சிறப்பாக பணியாற்றிய மருத்து பணியாளர்கள், நிர்வாக பணியாளர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா பேசியதாவது:-
மக்களுக்கு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு உள்ளது.
ஆனால் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதுதொடர்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் இறந்த பின்னரும் மற்றவர்களுக்கு உயிர் கொடுக்க முடியும். இறந்த பின்பும் நாம் வாழலாம். மரணத்தின் மூலம் உடல் மண்ணில் புதைக்காமல், மனிதர்கள் மேல் விதையுங்கள்.
மரணத்திற்குப் பின்னரும் நாம் வாழ்வோம். சக்தி அம்மாவின் ஆசியால் நான் வாழ்வில் உயர்ந்துள்ளேன். நானும் உறுப்புகள் தானம் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






