என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் காகிதப்பட்டறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய காட்சி.
2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
- போக்குவரத்து நெரிசல்
- வேலூர் காகிதப்பட்டறையில் பரபரப்பு
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதன் காரணமாக சத்துவாச்சாரியில் இருந்து ஆற்காடு ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். அந்த வாகனங்கள் கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன.
அப்போது வாகனங்கள் ஒரே சர்வீஸ் சாலையில் எதிரும், புதிருமாக சென்றதால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது.
சர்வீஸ் சாலையை கடந்து செல்ல சுமார் அரை மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.






