என் மலர்
நீங்கள் தேடியது "The elephant chased the farmers"
- பயிர்கள், டிராக்டரை மிதித்து நாசம் செய்தது
- உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
குடியாத்தம்
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கதிர்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் கதிர்குளம் கிராமத்தை ஒட்டியபடி உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை முனிராஜ் என்பவருக்கு சொந்தமான தக்காளி தோட்டம் மற்றும் வேர்க்கடலை தோட்டத்தை சேதப்படுத்தியது.
பாலாஜி என்பவருடைய நெற்பயிர் மற்றும் நிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த டிராக்டரையும் மிதித்து பெருமளவு சேதப்படுத்தியது.
இதனை தொடர்ந்து பிச்சாண்டி, கவுரி ஆகியோருக்கு சொந்தமான நெல் மற்றும் மாமரங்களை சேதப்படுத்தியது.
இதனை பார்த்த விவசாயிகள் ஒன்று கூடி பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்ற போது யானை கிராம மக்களை துரத்தியது.
அப்போது கிராம மக்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடி வீடுகளுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த யானை அடர்ந்த வனப்ப குதிக்குள் சென்றது.
பயிர்க ளுக்கு வனத்து றையினர் உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானை விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தும் உரிய நேரத்திற்கு வனத்துறையினர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.






