என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.18.47 கோடியில் பணிகள்
    X

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.18.47 கோடியில் பணிகள்

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை
    • வேலூர் நகராட்சி, பேரூராட்சிகளில் பணிகள் நடந்து வருகிறது

    வேலூர்,

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் குடியாத்தம் நகராட்சியில் ரூ.263.09 லட்சம் மதிப்பீட்டில் 19 சாலை பணிகளும், ரூ.115 லட்சம் மதிப்பீட்டில் 3 பூங்காக்களும், ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் 1 மயானமும், ரூ. 219 லட்சம் மதிப்பீட்டில் 1 அறிவுசார்மையமும் என மொத்தம் ரூ.747,09 லட்சம் மதிப்பீட்டில் 24 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், பேரணாம்பட்டு நகராட்சியில் ரூ.254,82 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணியும், ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் 1 பூங்காவும், ரூ.146 லட்சம் மதிப்பீட்டில் 1 மயானமும் என மொத்தம் ரூ.449.82 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பென்னாத்தூர் பேரூராட்சியில் ரூ.30.11 லட்சம் மதிப்பீட்டில் 1மழைநீர் வடிகால்வாய் பணியும், ரூ.5.09 லட்சம் மதிப்பீட்டில் 4 மின்சார வாகனங்கள் என மொத்தம் ரூ.36.20 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகளும்,

    திருவலம் பேரூராட்சியில் ரூ.64.32 லட்சம் மதிப்பீட்டில் 1 மழைநீர் வடிகால் பணி ரூ.7.28 லட்சம் மதிப்பீட்டில் 1 இலகுரக வாகனமும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணி என மொத்தம் ரூ.146,60 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும்,

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணியும், ரூ.272,9 லட்சம் மதிப்பீட்டில் 2 சாலை பணிகளும், ரூ.43.99 லட்சம் மதிப்பீட்டில் 1 மழைநீர் வடிகால் பணியும் ரூ.7.61 லட்சம் மதிப்பீட்டில் 5 மின்சார வாகனங்களும், ரூ.728 லட்சம் மதிப்பீட்டில் 1 இலகுரக வாகனமும் என மொத்தம் ரூ.38.378 லட்சம் மதிப்பீட்டில் 10 பணிகளும்,

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.523 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணியும், ரூ.23.8 லட்சம் மதிப்பீட்டில் 1 சாலை பணியும், ரூ.728 லட்சம் மதிப்பீட்டில் 1 இலகுரக வாகனமும் என மொத்தம் ரூ.83.38 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும்,

    நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.18.47 கோடி மதிப்பில் 48 திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×