என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The besieged councillors"

    • அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில்லை
    • பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு

    அணைக்கட்டு,

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார்.

    பணிகள் நடக்கவில்லை

    தொடர்ந்து, கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே 5-வது வார்டு கவுன்சிலர் கீர்த்தனா பேசுகையில் :-

    எனது வார்டில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைத்து தரும்படி மூன்று மாதமாக கோரிக்கை வைத்தேன். ஆனால் இதுவரை அவை சீரமைக்கப்படாமல் உள்ளது.

    இதுவரை எனது வார்டுக்கு என்ன செய்தீர்கள் என்று செயல் அலுவலரை பார்த்து கேட்டதுடன் ரூ.2 ஆயிரம் ரூபாய்க்கு கூட எனது வார்டில் வேலை செய்ய முடியாதா? என்று அரங்கமே அதிரும் அளவிற்கு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அதனைத் தொடர்ந்து, குறுக்கிட்டு பேசிய 10-வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் பேசுகையில்:-

    எனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தாலும் அதனை தீர்மானங்களாக நிறைவேற்றுவதில்லை என்று கூறி அஜந்தா நகலை தூக்கி வீசினார்.

    பின்னர், இருக்கையை விட்டு ஆவேசமாக எழுந்து சென்று செயல் அலுவலரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், அனைத்து குடிநீர் தொட்டிகளில் பூச்சுகள் உற்பத்தியாகி உள்ளதால் அதனை மாதம் தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.

    அதேபோல், செயல் அலுவலர் பதவியேற்று மூன்று மாதங்களாகியும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்யவில்லை, அப்படி செய்திருந்தால் 3 மாத வரவு, செலவு கணக்கை மன்ற கூட்டத்தில் காண்பிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×