என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 1,081 போலீசார் எழுதினர்
    X

    வேலூர் வி.ஐ.டி.யில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பார்வையிட்ட காட்சி.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 1,081 போலீசார் எழுதினர்

    • 2-வது நாளாக நடந்தது
    • டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டார்

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது. பொதுப்பிரிவினர் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கான முதல் நாள் தேர்வை 1189 பேர் எழுதினர்.

    இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசருக்கான தேர்வு நடந்தது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண் ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 1081 பேர் எழுதினர்.

    தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். தேர்வுக்கு முன்னதாக வி.ஐ.டி. பல்கலைக்கழக தேர்வு மைய நுழைவாயிலில் முழுமையாக சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    எழுத்துத் தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் பென்சில் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

    வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தில் நடந்த தேர்வில் வேலூர் சரக டிஐஜி முத்து சாமி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்ப்பார்வையில் 3 ஏ.டி.எஸ்.பி.கள், 5 டி.எஸ்.பி.கள், போலீஸ் அதிகாரிகள், பணியாளர்கள் என மொத்தம் 900 பேர் தேர்வு பணியில் ஈடுப்பட்டனர்.

    Next Story
    ×