என் மலர்
நீங்கள் தேடியது "போலி ஆர்டிஓ கைது"
- ஏலகிரி, வாணியம்பாடி பகுதிகளில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு செய்வது போல் நடித்து பணம் பறித்தது தெரிய வந்தது.
- கல்லூரி பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் தங்கள் போனில் அவரது புகைப்படத்தை பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர்.
ஜோலார்பேட்டை:
திரும்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்தரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் சென்றார்.
அவர் தான் ஒரு ஆர்.டி.ஓ. (வட்டார போக்குவரத்து அலுவலர்) என்றும், உங்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த நிர்வாகத்தினர் இதுகுறித்து வாணியம்பாடி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அங்கு வாகனங்களை ஆய்வு செய்ய வந்தவர் ஆர்.டி.ஓ. எனக்கூறி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. அவரை வாணியம்பாடி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர் மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 38) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூரில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியுள்ளார்.
இவர் ஏலகிரி, வாணியம்பாடி பகுதிகளில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு செய்வது போல் நடித்து பணம் பறித்தது தெரிய வந்தது.
மேலும் இன்று காலை வக்கணம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று அந்த வழியாக வாணியம்பாடிக்கு சென்ற தனியார் கல்லூரி பஸ்சில் ஏறி ஆய்வு செய்வது போல் நடித்து பொன்னேரியில் இறங்கி உள்ளார்.
அப்போது கல்லூரி பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் தங்கள் போனில் அவரது புகைப்படத்தை பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர்.
பின்னர் கார் ஷோரூமில் சென்று தான் ஒரு ஆர்.டி.ஓ. இந்த பகுதியில் ரகசியமாக விசாரணை செய்ய வந்துள்ளேன். எனவே எனக்கு கார் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு மிரட்டியதையும் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






