என் மலர்
வேலூர்
- வலியால் அலறி துடித்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்.
இவரது மனைவி யசோதா (வயது 69). இவர் நேற்று முன்தினம் தங்களது விவசாய நிலத்தில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த தேனீக்கள் யசோதாவை சூழ்ந்து கொண்டு உடல் முழுவதும் கொட்டியது.
வலியால் அலறி துடித்த யசோதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யசோதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- இரும்பு கைப்பிடியை பிடித்துக் தொங்கியபோது விபரீதம்
வேலூர்:
வேலூர், கன்சால்பேட்டை, இந்திரா நகரை சேர்ந்தவர் பில்லா. இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள மெக்கானிக் செட்டில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
ஆகாஷ் நேற்று மாலை தனது நண்பர்களுடன் பாலாற்றில் உள்ள ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றார்.
ரெயில்வே பாலத்தில் இருந்த இரும்பு கைப்பிடியை ஆகாஷ் பிடித்துக் கொண்டு தொங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கைப்பிடி உடைந்தது.
இதனால் ஆகாஷ் 20 அடி உயரத்தில் இருந்து பாலாற்றில் விழுந்தார். அவர் மீது இரும்பு கைப்பிடி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
அவருடன் சென்ற நண்பர்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 964 பேர் எழுதினார்
- மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல ஆனுமதிக்கப்படவில்லை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி யில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டான்போஸ்கோ பள்ளி, ஆக்சிலியம் பள்ளி என 3 மையங்களில் நான் முதல்வர் மதிப்பீட்டு தேர்வு நடந்தது.
காலை 9 மணியளவில் தேர்வர்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.
மொத்தம் 964 பேர் தேர்வை எழுதினர். மேலும், ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு போலீசாரும், விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் கைபேசி, கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல ஆனுமதிக்கப்படவில்லை.
- 2 கோவில்கள் துணிகரம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் உள்ள வல்லாண்டப்பன் கோவிலில் மர்ம கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவை திறந்து அதில் வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர். இதேபோல் வல்லாண்டப்பன் கோவில் அருகே உள்ள தஞ்சியம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியலையும் உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தையும் திருடிச் சென்றனர்.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் அரியூர் போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் திருட்டு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது போதையில் தகராறு
- போலீசார் விசாரணை
காட்பாடி:
காட்பாடி அக்கிரெட்டிபுதூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவரது தம்பி சந்திரசேகர் (35) ஆட்டோடிரைவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு, அண்ண னிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த சந்திரசேகர், அண்ணன் அசோக்குமாருடன் தகராறில் ஈடுப்பட்டார். இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஆவேசமடைந்த சந்திரசேகர், அசோக்குமாரின் ஆள்காட்டி விரலை கடித்து துப்பிவிட்டார். வலி தாங்காமல் துடித்த அசோக்குமாரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அசோக்குமார் காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்ம கும்பல் பைக்குகளை திருடி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இது குறித்து அதிக அளவில் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் தனது பைக்கை கந்தனேரியில் உள்ள மணல் குவாரி அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகொண்டா பகுதியில் இதேபோல் அடிக்கடி பைக் திருட்டு நடப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அடிப்படை வசதிகள் செய்யக்கோரி நடத்தினர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி, தொரப்பாடி, 49-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.
இதில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து சாலைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும். 445 ஏக்கரில் உள்ள ஏரியை தூர்வாரி சுற்றுக்கால்வாய்களை உயர்த்தி மதகுகளை உயர்படுத்தி ஏறி வடிகால் செல்லும் கால்வாய்களை சீர்படுத்த வேண்டும்.
பொதுக் கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.குடிநீர் வசதி மற்றும் வீதிகள் தோறும் பொதுமக்கள் பயன்படுத்த போதுமான குடிநீர் பொதுக் குழாய்களை அமைத்து தர வேண்டும்.
பொதுமக்களும் இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் சமுதாயக்கூடம், நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பூங்காவை சீர்படுத்தி முதியவர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தொரப்பாடி ரெயில்வே கேட் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- வரதட்சணை கொடுமையால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெருமாங் குப்பம், கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரதாப்.இவரது மனைவி காயத்ரி (வயது 21). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பிரதாப் தனது மனைவி காயத்ரியிடம் அவர் வீட்டுக்கு சென்று வரதட்சணையாக நகை, பணம், பைக் வாங்கி வருமாறு தகராறு செய்து வந்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக காயத்திரியின் பெற்றோரால் நகை பணத்தை கொடுக்க முடியவில்லை.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் விரக்தி அடைந்த காயத்ரி நேற்று வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிய பஸ் நிலையம் முதல் பாகாயம் வரை எச்சரிக்கை பலகை
- தடுப்பு சுவர்களை சீரமைக்க உத்தரவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளால் ஏற்படும் விபத்துகள், முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிப்பது, சாலைகளின் பக்கவாட்டில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை சீரமைப்பது, உடைந்த நுழைவு வாயில் மூடிகளை மாற்றுவது, இடிந்த நிலையில் உள்ள சென்டர் மீடியன்கள் மற்றும் இரும்பு தடுப்பான்களை சீர்செய்வது, கழிவுநீர் வெளியேறுவதால் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
தேசிய நெடுஞ்சா லைகளில் உள்ள அகலம் குறைவான அணுகு சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து பணிமனை அமைந்துள்ள ரங்காபுரம் பகுதியில் உள்ள அணுகுசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் எதிர் திசையில் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அந்த இடத்தில் புதிய அணுகு சாலையை அமைக்க வேண்டும்.
வேலூர் புதிய பஸ் நிலையம் முதல் சங்கரன்பாளையம் வழியாக பாகாயம் செல்லும் சாலையில் முக்கிய சந்திப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விபத்து நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளி எதிரொளிப்பான்கள் அமைக்க வேண்டும்.
அபராதம்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்கவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தவிர்க்கும் பொருட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி உள்ள பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை ஒட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சந்திரபாபு நாயுடு கைதால் போராட்டம்
- 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன
வேலூர்:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் இன்று காலை வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ஆந்திராவில் மதியம் 12 மணிக்குமேல் இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து வேலூர் - திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது.
இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ஆந்திர பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
திருப்பதியில் இருந்து தமிழத்துக்கு 12 மணிக்கு பிறகு பஸ்கள் ஓட தொடங்கின. இதனால் தவித்த பக்தர்கள் நிம்மதி பெருமூச்சுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
- அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது
- கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த அகரம் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, ஆம்பூர், ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் 3 மணி அளவில் கல்லூரி விடப்பட்டது. ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் சில பேர் ஏறினர். சில பேர் ஓடும் பஸ்சில் தான் ஏறுவோம் என்று அடம்பிடித்து நின்றனர்.
இதனால் நீங்கள் பஸ்சில் ஏறினால் தான் நான் பஸ்சை எடுப்பேன் என்று டிரைவர் அடம்பிடித்து நிறுத்தினார். இதனால் அரை மணி நேரம் பஸ் எடுக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
மேலும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி அரை மணி நேரத்திற்கு பின்பு அனைத்து மாணவர்களும் பஸ்சில் ஏறிய பின்பு பஸ் புறப்பட்டு சென்றது.
நாள்தோறும் இவ்வாறாக அடம்பிடிக்கும் கல்லூரி மாணவர்கள் மீது பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தினர்.
- மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது விபரீதம்
- 2 மணி நேரம் போராடி மீட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 35), இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதேபோல், சொந்தமாக மாடுகளை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் பசுவை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அப்போது, அருகே இருந்த சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது.
உடனே இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேஷ்வரன் தலைமையிலான வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.






