என் மலர்
வேலூர்
வேலூரில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்க வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன.
வேலூர்:
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரண அறிவிப்பாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இந்த மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அனைத்துப் பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 97 ஆயிரத்து 536 ரேசன் கார்டு காரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையும் அத்தியாவசிய பொருட்களும் நாளைமுதல் வழங்கப்பட உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நெரிசலை தடுக்க ரேசன் கடைகளில் டோக்கன் முறை பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 50 ரேசன் கார்டுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் ரூ.1000 வழங்க முடிவு செய்துள்ளனர்.
இன்று வேலூரில் வீடு, வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. டோக்கன் பெற்றுக்கொண்ட அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் கடைகளுக்குச் சென்று நிவாரணத்தொகை பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 2 மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
அட்டைதாரர்கள் யாருக்காவது பொருட்கள் வாங்குவதற்கு விருப்பமில்லை என்றால் தங்களது குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு www.tnpds. govt.in என்ற இணையதளம் அல்லது tnpds செயலி மூலம் தங்களது உரிமையை விட்டுக் கொடுக்கலாம். இது குறித்து சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க விரும்பினால் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலக தொலைபேசி எண் 0416&2252586&ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பொருட்கள் வாங்குபவர்கள் வாகன சோதனையில் உள்ள போலீசாரிடம் டோக்கனை காட்டவேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தி உள்ளார்.
வேலூர் மாநகரில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மார்க்கெட் விலையில் காய்கறிகள் கிடைக்க செய்யும் வகையில் மார்க்கெட் கடைகள் மேலும் 5 இடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் அதை தடுக்கும் வகையில் வேலூர் நேதாஜி மார்க்கெட் மூடப்பட்டது.
அதற்கு பதிலாக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு காய்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தொரப்பாடி அரசு பள்ளி மைதானம் காட்பாடி டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் உழவர் சந்தை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இன்று வேலூர் கோட்டை முன்பு அண்ணா சாலையில் இருபுறமும் காய்கறி கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் வைக்கப்பட்ட கடைகளில் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் மற்றும் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளி மைதானம் வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மைதானம் பாகாயம் சிஎம்சி மைதானம் ஆகிய இடங்களில் மார்க்கெட் காய்கறி கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர். நாளை அங்கு கடைகள் திறக்கப்பட்டு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கொரோனா சம்பந்தமாக 27 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வேலூர்:
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே எங்கும் செல்லக்கூடாது.
வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் வைத்திருக்கக் கூடாது. அவருடைய வேலைகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 600 பேர் தொடர்ந்து வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேருக்கு அறிகுறி ஏற்பட்டது.
அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மதபோதகர்கள் 12 பேர் வேலூர் முள்ளி பாளையத்தில் தங்கியிருந்தனர். அவர்களை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களை ஆந்திரா போலீசார் அனுமதிக்காததால் மீண்டும் முள்ளிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.
இதேபோல டெல்லியில் இருந்து வந்த முஸ்லிம்கள் 14 பேர் ஆர்.என்.பாளையத்தில் தங்கியிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முஸ்லிம் மத போதகர்கள் 12 பேரும் டெல்லியில் இருந்து வந்த 14 பேரும் மற்றும் பேர்ணாம்பட்டு சேர்ந்த ஒருவர் என மொத்தம் 27 பேர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இவர்களை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

லண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவருக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 49 வயதான பாதிரியார் லண்டன் சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த அவர் கடந்த 18-ந்தேதி ஊருக்கு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பரிசோதித்த போது அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதனையடுத்து வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவருடைய ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிரியாரின் மனைவி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். பொதுமக்கள் யாரும் பாதிரியார் வீட்டுக்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக பாதிரியார் தெரிவித்துள்ளார். அவர் வெளியே எங்கும் சென்றாரா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் இருந்து வேலூருக்கு வந்த 12 முஸ்லிம் மதபோதகர்களை அதிகாரிகள் ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 12 முஸ்லிம் மதபோதகர்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி வேலூர் மாவட்டத்துக்கு வந்தனர்.
அவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று போதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்கள் வேலூர் முள்ளிப்பாளையத்தில் தங்கியிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 12 பேரும் அங்கிருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அறிகுறி காணப்பட்டவில்லை.
இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் சொந்த மாநிலத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். 12 பேரும் ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு செல்வதாக கூறினர்.
அதை தொடர்ந்து 12 பேரையும் நேற்று வேனில் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வரை அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆந்திர மாநில போலீசாரின் அனுமதி பெற்று கர்னூல் நோக்கி சென்றனர்.

வேலூரில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் 1 மணி நேரம் சாலையில் நிற்க வைத்து நூதன தண்டனை அளித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் யாரேனும் நடமாடுகிறார்களா? என்பதை கண்காணிக்கவும், தடை உத்தரவை அமல்படுத்தவும் 52 போலீஸ் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. தடை உத்தரவை மீறி பொதுமக்கள் பலர் வழக்கம் போல் சாலைகளில் சுற்றி திரிந்தனர்.
சிலர் தடை உத்தரவு நேரத்தில் நகரம், முக்கிய சாலைகள் எவ்வாறு உள்ளது? என்பதை காண பைக்குகளில் சுற்றித்திரிந்தனர். போலீசார் முக்கிய சாலைகளில் நின்று பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி கூறினார்கள். ஆனால் சிலர் தேவையில்லாமல் தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் சொந்த ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களில் 86 பேர் கைது செய்யப்பட்டனர். 80 பைக்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.
இன்று காலை 9 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றவர்களை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கடைகளில் சமூக இடைவெளியுடன் பொருட்கள் வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பொதுமக்கள் காய்கறி, பால் வாங்கி சென்றனர்.
காலை 9 மணிக்கு மேல் தடையை மீறி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
வேலூர் அண்ணாசாலை, திருப்பதி தேவஸ்தானம் அருகே வாகனங்களில் வந்தவர்களை 1 மணி நேரம் சாலையில் நிற்க வைத்து நூதன தண்டனை அளித்தனர். மேலும் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ஒடுக்கத்தூர் அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அணைக்கட்டு:
ஒடுக்கத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கல்லபாறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (28) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜெயலட்சுமி கல்லபாறையில் தனியாக வசித்து வந்தார். அப்போது ஜெயலட்சுமிக்கும் ஹரிஷ் (26) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஜெயலட்சுமி கர்ப்பமானார்.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி ஜெயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார்.
நேற்று பெண் குழந்தையை கோணிப்பையில் கட்டி அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஜெயலட்சுமி வீசினார். தண்ணீரில் மூழ்கி சாக்கு மூட்டையில் இருந்த குழந்தை இறந்தது.
இன்று காலை சாக்குமூட்டையில் குழந்தை பிணம் மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் கோணிப்பை மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மிதந்த குழந்தையின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயலட்சுமி குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜெயலட்சுமி போலீசாரிடம் கூறுகையில்:-
கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை வளர்ப்பதற்கு அசிங்கப்பட்டு கிணற்றில் வீசி கொலை செய்தேன் என தெரிவித்தார். கைதான ஜெயலட்சுமியை ஜெயிலில் அடைத்தனர்.

வாலாஜா பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை:
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைபடுத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் துபாயில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 17-ம் தேதி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு இருமல், சளி இருந்தது.
இதையடுத்து அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். அவருடைய ரத்தம், சளி போன்ற மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது . அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வார்டில் வாலிபருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் அவருடைய குடும்பத்தினரை டாக்டர்கள் குழுவினர் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வாலிபர் 17 ந்தேதி ஊருக்கு வந்துள்ளார். அதற்கு பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. மாடியில் உள்ள அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வீட்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு அவரது குடும்பத்தினர் உணவு எதுவும் வழங்கக்கூடாது. ஆஸ்பத்திரிக்கு சந்திக்கவும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாலிபரின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 135 பேர் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேலூரில் தங்கியுள்ளனர். சளி , காய்ச்சல் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் 6 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்தது.
இதையடுத்து அவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவருடைய ரத்தம், சளி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அவர்களை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியை சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜன் (வயது26). கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவரது அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தியாகராஜன் தனது லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறை அதிகாரிகள் அவரின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் நேற்று இரவு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் இன்று ஒரே நாளில் காய்கறிகள் ரூ.10 முதல் ரூ.15 வரை குறைந்துள்ளது.
வேலூர்:
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து வேலூருக்கு வரும் வாகனங்கள் அடியோடு நிறுத்தப்பட்டன.
இதேபோல் வேலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் லாரி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்தது மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்து வந்தது.
நேற்று இரவு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் இன்று ஒரே நாளில் காய்கறிகள் ரூ.10 முதல் ரூ.15 வரை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ.15ஆக குறைந்தது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.
வேலூர் மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் விலை நிலவரம் வருமாறு:-
தக்காளி (ஒரு கிலோ )ரூ.15, வெங்காயம் ரூ.30, கேரட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.30, கத்தரிக்காய் ரூ.30, முருங்கைக்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.30, வெண்டைக்காய் ரூ.40-க்கு விற்பனையானது.
காய்கறி கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் பொதுமக்கள் மார்க்கெட்டில் அதிகளவில் கூட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு செல்ல அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 10 பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
அரக்கோணம்:
கொரோனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதேபோல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ள டாக்டர்கள், நர்சுகள், ரெயில்வே போலீசார், ரெயில்வே பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் சென்னை செல்ல அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.35 மணிக்கு 10 பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
இந்த ரெயிலில் ஏராளமான கொரோனா தடுப்பு பணியாளர்கள் சென்றனர். இவர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரெயில் மீண்டும் மாலை அரக்கோணம் ரெயில் நிலையம் வந்து அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி அருகே பாமக பிரமுகர் வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 2 பைக் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாணியம்பாடி:
அம்பலூர் அருகே உள்ள அரப்பாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் பா.ம.க பிரமுகர். இவருடைய வீட்டின் அருகே செட் அமைத்து அதில் அவரது 2 பைக் மற்றும் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த செட்டுக்கு தீ வைத்தனர்.
இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மற்றும் ஒரு சைக்கிள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து நாகராஜன் அம்பலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.