என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு செல்ல அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 10 பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
    அரக்கோணம்:

    கொரோனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    இதேபோல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ள டாக்டர்கள், நர்சுகள், ரெயில்வே போலீசார், ரெயில்வே பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் சென்னை செல்ல அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.35 மணிக்கு 10 பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

    இந்த ரெயிலில் ஏராளமான கொரோனா தடுப்பு பணியாளர்கள் சென்றனர். இவர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ரெயில் மீண்டும் மாலை அரக்கோணம் ரெயில் நிலையம் வந்து அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×