என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 355 பேர் இறந்துள்ளனர். கடந்த மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது அதிவேகத்தில் பரவுகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் பரவல் மக்களிடையே அதிகமாகவே உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது. அதன்படி ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதித்தால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகையை அதிகப்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. முககவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களை மறித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக 50 முதல் 70 வரை பாதிப்பு இருந்து வந்தது. நேற்று வெளியான முடிவில் ஒரேநாளில் 2 மடங்கு உயர்ந்து 137 பேருக்கு தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலூர் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். மேலும் பலர் சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பரவல் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறைந்தது. அக்டோபர் 16-ந் தேதி 100 பேரை தாண்டி கொரோனா பரவல் இருந்தது. இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு தற்போது 100 பேரை தாண்டி பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இரட்டைக்கொலை சம்பவத்தில் 20 பேர் வரை ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி அப்பகுதி மக்கள் சோகனூரில் திரண்டு இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சோகனூரை சேர்ந்த சூர்யா (வயது23). அர்ஜூன் (26) ஆகியோரை பெருமாள் ராஜப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கத்தி, கட்டை, பாட்டிலால் தாக்கி நேற்று முன்தினம் இரவு கொலை செய்தனர்.
தேர்தல் தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோகனூர் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, ராணிப்பேட்டை எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் ஒரு பிரிவினர் அடிக்கடி எங்களை தாக்குகின்றனர். எனவே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதன் பின்னரே மறியலை கைவிடுவோம். பிணங்களை வாங்கிக்கொள்வோம் என ஆவேசமாக கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தனர்.
கண்டிப்பாக குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் சம்பவத்தால் சாலை கிராமம் கூட்ரோடு - திருத்தணி சாலைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே கொலை வழக்கு தொடர்பாக பெருமாள் ராஜப்பேட்டையை சேர்ந்த அஜித் (24), மதன் (37), சுரேந்தர் (24), நந்தா (20) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திக் (23), சத்யா ஆகிய 2 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 4 தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை சம்பவத்தில் 20 பேர் வரை ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றுகூறி அப்பகுதி மக்கள் சோகனூரில் திரண்டு இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். கொலையான 2 பேர் உடலையும் வாங்க மறுத்து திருத்தணி ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க சோகனூர், பெருமாள் ராஜப்பேட்டை, சாலை, குருவராஜப்பேட்டை பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கடந்த மாதம் வரை தினமும் 10 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். அதன் பின்னர் சில நாட்களாக நோயின் தாக்கம் தீவிரமாக அதிகரித்தது. கடந்த வாரங்களில் ஒரேநாளில் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர். நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்து ஒரே நாளில் 137 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 21 ஆயிரத்து 912 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 355 பேர் பலியானார்கள்.
தற்போது 400 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் வேலூர் காந்தி ரோட்டில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ள வெளிமாநிலத்தவர்கள் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகர பகுதியில் இன்று 50-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பரிசோதனை செய்ததில் இன்று 2 மடங்காக உயர்ந்துள்ளது.
இது தவிர தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஓட்டு பதிவின் போது கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பெரும் பாதிப்பை தடுக்க முடியும்.
இதேபோல் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் 2500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் கொடுமை இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வெயில் சுட்டெரித்தது. கடந்த வாரம் 110 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது
வேலூர்:
வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் கொடுமை இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வெயில் சுட்டெரித்தது. கடந்த வாரம் 110 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. வெயிலின் கோரத்தாண்டவம் தாங்க முடியாமல் பொதுமக்கள் படாதபாடு படுகின்றனர். சாலைகளில் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் கடைகளுக்கு படையெடுக்கின்றனர். பொதுவாக கோடைகாலத்தில் அரசியல் கட்சியினர் தண்ணீர் மற்றும் பழப்பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பார்கள். தற்போது தேர்தல் நடைபெற்றதால் அவை திறக்கப்படவில்லை. எனவே வேலூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க மாநகராட்சி சார்பில் குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் பழைய பஸ் நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வருவார்கள் என்பதால் அங்கு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில், அதிக பயணிகள் வரக்கூடிய பஸ் நிறுத்தங்களில் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் என மாநகராட்சியில் 20 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் காலியான பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை சிப்காட் அருகே வாடகைக்கு வீடு பார்ப்பது போல் கல்லூரி பேராசிரியையை கத்தியால் குத்தி நகை பறித்த வழக்கில் காவலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 54), அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியை. இவர்கள் வசித்த வந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒருபகுதி காலியாக இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கீழ்விஷாரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நாகூர் மீரான் (36) வாடகைக்கு வீடு கேட்டு சென்றுள்ளார்.
அப்போது வீட்டை சுற்றி பார்த்த அவர் சில நாட்களுக்கு பின்னர் குடும்பத்துடன் வருவதாக கூறி உள்ளார். அதன்பின்னர் 4 நாட்கள் கழித்து 10-ந் தேதி நாகூர் மீரான் மட்டும் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் புவனேஸ்வரி தனியாக இருப்பதை அறிந்த அவர் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி தரும்படி கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
ஆனால் அவர் நகைகளை கழற்றி கொடுக்க மறுத்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த நாகூர் மீரான் கத்தியால் புவனேஸ்வரி வயிற்றில் குத்தினார். அவர் வலியால் அலறி துடித்தபோது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டார். இதில், படுகாயம் அடைந்த புவனேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து நாகூர் மீரானை கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தார். இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி பாலசுப்பிரமணியன் தீர்ப்பு அளித்தார்.
அதில், அத்துமீறி வீடுபுகுந்து கல்லூரி பேராசிரியையை கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்தியதற்காகவும், அவரின் நகையை பறித்து சென்றதற்காகவும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் வித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நாகூர் மீரானை, போலீசார் வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சித்தம்பாடி கவுதம நகர் பகுதியில் சோகனூரை சேர்ந்த அர்ஜுன் (20), சூர்யா (25) மற்றும் அவரது நண்பர்கள் நேற்றிரவு மது குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பெருமாள் ராஜப்பேட்டையை சேர்ந்த நண்பர் ஒருவரை மது குடிக்க அழைத்தனர். அவரிடம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருதரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தனர்.
இதையடுத்து அவர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஒருவன், பீர் பாட்டிலால் பெருமாள் ராஜப்பேட்டையில் இருந்து வந்த வாலிபரின் தலையில் தாக்கினார்.
இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போன் செய்து அவரது நண்பர்களை அங்கு அழைத்தார். பதிலுக்கு எதிர்தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்தனர்.
இதனால் அங்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் சோகனூரை சேர்ந்த சூர்யா, அர்ஜூன் மேலும் மதன், சவுந்தரராஜன் ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சூர்யா, அர்ஜூன் ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
காயமடைந்த 2 பேரும் திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையான சூர்யாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அர்ஜூனுக்கு திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகிறது. புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை மற்றும் கோஷ்டி மோதல் தகவல் சோகனூர் மற்றும் செம்பேடு பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க சாலை, வேடல், குருவராஜப்பேட்டை, பெருமாள்ராஜப்பேட்டை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்நிலையில் கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு சோகனூர் சர்ச் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டி.எஸ்.பி. மனோகரன், அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் ஆகியோர் சித்தம்பாடி கவுதமநகர் பகுதிக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு சோகனூர் சர்ச் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்படுகிறது. அதில் நேற்று 60 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

வேலூரில் கள்ள ஓட்டால் வாக்குப்பதிவு இழந்த வங்கி ஊழியர் சர்க்கார் திரைப்பட பாணியில் 49-பி என்ற ஆய்வுக்குரிய வாக்கை பதிவு செய்தார்.
வேலூர்:
சர்க்கார் திரைப்படத்தில் கள்ள ஓட்டால் வாக்குப்பதிவை இழக்கும் நடிகர் விஜய், மாற்றாக 49-பி என்ற அடிப்படையில் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும்.
இதனால், கள்ள ஓட்டு மூலம் வாக்குரிமையை இழந்தவர் இந்த 49-பி என்ற முறையில் வாக்களிக்க முடியும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பரவலாக ஏற்படுத்தப்பட்டது.
நடிகர் விஜய் நடித்த சர்க்கார் பட பாணியில் வேலூரில் வங்கி அதிகாரி லோகேஷ் நிவாஸன் என்பவர் நேற்று 49-பி என்ற முறையில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் நிவாஸன். இவர், பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய லோகேஷ் நிவாஸன் நேற்று பிற்பகல் சென்றார்.
ஆனால், அவரது வாக்கை ஏற்கனவே யாரோ ஒருவர் கள்ளத்தனமாக பதிவு செய்துவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் நிவாஸன் தனக்கு வாக்குரிமை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக அந்த வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு 49-பி என்ற அடிப்படையில் வாக்கு அளிக்க வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சுப்புரத்தினம் அனுமதி வழங்கினார்.
அதன்படி, ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு என்ற அடிப்படையில் வாக்குச்சீட்டு மூலம் தனது வாக்குரிமையை லோகேஷ் நிவாஸன் பதிவு செய்தார். ஆனால் அவர் ஓட்டு போடுவதற்கு அ.தி.மு.க.- தி.மு.க. மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
49-பி முறையில் பதிவு செய்யப்பட்ட வாக்கின் பயன் மற்றும் அதை எவ்வாறு கணக்கில் கொள்வார்கள் என்பது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘49-பி வாக்குச்சீட்டு இருக்கும் உறை தனியாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் நாளில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவுகள் எண்ணப்படும்.
இதில் அதிக வாக்குகள் பெறும் முதல் 2 பேருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சமமாக இருந்தால் மட்டும் இந்த 49-பி வாக்குச்சீட்டு உறை பிரிக்கப்பட்டு அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை பார்த்து அந்த வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.
அதிக வாக்குகள் பெறும் முதல் 2 வேட்பாளர்களின் இடையிலான வாக்குகள் வித்தியாசம் அதிகமாக இருந்தால் இந்த 49-பி உறை கடைசிவரை பிரிக்கப்படாது. 49-பி என்பது வாக்குரிமையை இழந்த நபரை திருப்திபடுத்த மட்டுமே’’ என தெரிவித்தனர்.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 72.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வேலூர்:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வேலூர் மாவட்டத்தில் 72.31 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலி தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
அணைக்கட்டு- 71.00%
குடியாத்தம்-71.94%
காட்பாடி-74.03%
கே.வி.குப்பம்-76.46%
வேலூர்-69.14%

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
வேலூர்:
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 12-வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறார். காட்பாடி தொகுதியில் மட்டும் தி.மு.க. சார்பில் 10-வது முறையாக போட்டியிடுகிறார்.

அப்போது நிருபர்கள் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் துரைமுருகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

அவர் இன்று காலை காட்பாடி காந்திநகரில் உள்ள டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.

அப்போது நிருபர்கள் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் துரைமுருகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறும் பொருட்டு நாளை வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டது.
வேலூர்:
சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடைபெறும் பொருட்டு நாளை வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் நேற்று முன்தினம் மாலை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களுக்கு தேவையான மது மற்றும் பீர் வகைகளை பலர் வாங்கி சென்றனர். சிலர் டாஸ்மாக் விடுமுறை தினங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக அதிக மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர்.
தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை குறிப்பிட்ட அளவு மது, பீர் மட்டுமே வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருசிலர் மீண்டும் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி அட்டை பெட்டி, சாக்கு மூட்டைகளில் நிரப்பி கார், மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அதன்காரணமாக பெரும்பாலான கடைகளில் மது, பீர் வகைகள் விரைவில் விற்று தீர்ந்தன. அதையடுத்து கடைகள் மூடப்பட்டன. பெரும்பாலான இடங்களில் இரவு 8.30 மணிக்கே கடைகள் மூடப்பட்டதால் மதுவாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.5 கோடியே 30 லட்சமும், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.3 கோடியே 70 லட்சமும் விற்பனையானது.
வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 204 டாஸ்மாக் கடைகளில் ரூ.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் பணத்தை கொண்டு செல்லும் மேற்பார்வையாளர்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் மற்றும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டாஸ்மாக் அதிகாரிகள் 10 காரில் அனைத்து கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் நேரில் சென்று அதுவரை விற்பனையான பணத்தை வாங்கி சீல் வைத்து வேலூர் கோட்ட பொதுமேலாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். அவை இன்று (திங்கட்கிழமை) சம்பந்தப்பட்ட கடையின் பணம் செலுத்தப்படும் வங்கிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வைத்து கடை மேற்பார்வையாளரின் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்துவாச்சாரி எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக ரூ.65 லட்சம் கொண்டு செல்லப்பட்டது. அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சத்துவாச்சாரி பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான வாகனத்தில் ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக ரூ.1 கோடியே 56 லட்சம் பணம் கொண்டு வந்தனர். அந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய அனுமதி பெறவில்லை. மேலும் முறையான ஆவணங்கள் இல்லை.
இதனையடுத்து வாகனத்துடன் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சத்துவாச்சாரி எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக ரூ.65 லட்சம் கொண்டு செல்லப்பட்டது. அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் லக்ஷ்மி தியேட்டர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வங்கிக்கு பணம் எடுத்துச் சென்ற 2 வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் ஒரு வாகனத்தில் ரூ.1 கோடியே 7 லட்சமும், மற்றொரு வாகனத்தில் 39 லட்சமும் இருந்தது. இதையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து வேலூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி கலெக்டர் கணேஷ் ஒப்படைத்தனர்.
மொத்தம் ரூ.3.67 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். உரிய ஆவணங்கள் வந்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.